scorecardresearch

”கட்சிக்கு தலைவரை உடனே தேர்வு செய்யுங்கள்… இல்லையென்றால்” – வருந்தும் சசி தரூர்

ஆலோசனைகளுக்கும் கலந்துரையாடல்களுக்குமான காலம் எப்போதோ முடிந்துவிட்டது – எம்.பி. அபிஷேக் சிங்வி.

shashi tharoor
shashi tharoor

Congress seen to be adrift : நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த ராகுல் காந்தி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அன்றில் இருந்து காங்கிரஸ் கட்சியில் பல்வேறு உட்கட்சி விவகாரங்களால் தள்ளாடி வருகிறது அக்கட்சி. இது குறித்து எம்.பிக்கள் சசி தரூர் மற்றும் சிங்க்வி தங்களின் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.  நிர்வாக சவால்களை எதிர்கொள்வதில் நாளுக்கு நாள் காங்கிரஸ் கட்சிக்குள் சச்சரவுகள் வளர்ந்து வருகிறது. குறிப்பாக கட்சியின் தலைவரை தேர்வு செய்வதில் இந்நிலை மேலும் மோசமடைந்து வருகிறது.

Congress seen to be adrift – மக்களின் எதிர்பார்ப்பும் கட்சித் தலைவர்களின் கருத்தும்

இந்தியன் எக்ஸ்பிரஸிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் பேசிய போது கட்சி மிகவும் “மோசமான” நிலையில் இருக்கிறது என்ற ”கருத்து” மக்களை மாற்று அரசியல் கட்சிகளிடம் கொண்டு போய் சேர்க்கிறது என்று கூறினார். ஆலோசனைகளுக்கும் கலந்துரையாடல்களுக்குமான காலம் எப்போதோ முடிந்துவிட்டது என்கிறார் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த எம்.பி. அபிஷேக் சிங்வி.

கொல்கத்தாவில் மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெய்ரா ரமேஷ் பி.டி.ஐயிடம் குறிப்பிட்ட போது “தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு முடிவுகட்டிவிட்டு, கட்சியை புதுப்பிக்க வேண்டும். மேலும் அனைத்து மூத்த காங்கிரஸ் உறுப்பினர்களும் இளைய உறுப்பினர்களுக்கு ஆலோசனை தந்து வழி நடத்த வேண்டுமே தவிர அவர்களை துன்புறுத்த கூடாது” என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க :

ராகுல் காந்தி, நாடாளுமன்ற தோல்விகளுக்கு பொறுப்பேற்ற்று தலைமைப் பதவியில் இருந்து விலகிய பிறகு, அவரால் உருவான வெற்றிடத்தை நிறைவேற்றும் பொறுப்பு தற்போது அதிகரித்துள்ளது. கட்சிக்கான தலைமையை உடனடியாக தேர்வு செய்ய வேண்டும். கட்சி இது குறித்து எந்த நிலைப்பாட்டில் இருந்தாலும் அதனை முறையாக செயல்படுத்த வேண்டும். இந்திய பெரும்பான்மை இளைஞர்களிடம் நம்முடைய எதிர்கால திட்டம் என்ன என்பதை தெளிவாக வரையறுக்க வேண்டும் என்றும் சசி தரூர் அறிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

இந்தியாவை பிளவுபடுத்த நினைக்கும் பாஜகவின் சித்தாந்தங்களுக்கு எதிராக இந்தியாவை ஒருங்கிணைக்க, காங்கிரஸ் கட்சி இந்தியாவுக்கு மிகவும் இன்றியமையாதது. அந்த இடத்திற்கு நாம் செல்ல வேண்டும் என்றால், மக்கள் மத்தியில் கட்சி மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது என்ற கருத்தினை மாற்ற வேண்டும். இது போன்ற கருத்து நிலவினால் மக்கள் நிச்சயமாக மற்றொரு கட்சிக்கு வாக்களிக்க சென்றுவிடுவார்கள். அது டெல்லியின் தேர்தல் முடிவுகள் போன்ற விளைவுகளை தான் உருவாக்கும் என்று தரூர் தெரிவித்துள்ளார்.

சிங்கிவியின் கருத்து

கட்சி தற்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பட்டியிலிட்டார் சிங்வி. அப்போது “ராகுல் காந்தி உடனடியாக தலைமை பொறுப்பினை ஏற்க வேண்டும். அவ்வாறு அவர் மறுத்துவிட்டால், இது போன்ற இக்கட்டான காலங்களில் தலைமை உத்தரவுகளை பிறப்பிக்க ஒருமித்த தலைவர் குழு இருக்க வேண்டும். ஆலோசனைகளுக்கான காலம் நேற்றோடு முடிந்துவிட்டது. இன்று முதல் நடவடிக்கைகளை தான் மேற்கொள்ள வேண்டும். கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான இவர் தன்னுடைய தனிப்பட்ட கருத்தினை கூறும் போது “கட்சிக்கான தலைவரை, உயர் தலைவர்களை தேர்வு செய்ய, தேசிய அளவில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால் அதற்கு கொஞ்ச காலம் ஆகலாம் என்றும் அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

கட்சியின் புதிய தலைவரை நியமிப்பதில் ஏற்படும் கால தாமதம் புரிந்து கொள்ளக் கூடியது தான். காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் இதயங்களில் ராகுல் காந்தி சிறப்பு இடம் பெற்று வாழ்ந்த் வருகிறார். ஆனால் நாளுக்கு நாள், புதிய தலைமையில் செயல்படும் காங்கிரஸ் கட்சி இன்றியமையாததாகிறது. பாஜகவின் சித்தாதங்களுக்கு எதிராக போராடும் திறன் கொண்ட ஒரே கட்சி நாங்கள் தான். ராகுல் காந்தி ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்ப, தகுதியான ஒரு தலைவரை நாங்கள், மேலும் கால தாமதமின்றி தேர்வு செய்ய வேண்டும். ராகுல் ராஜினாமா செய்யக் கூடாது என்று வேண்டிக் கொண்டவர்களில் நானும் ஒருவன். அவரிடம் இது தொடர்பாக பேச முயற்சி செய்தவர்களில் நானும் ஒருவர். ஆனால் அவர் முடிவில் அவர் தீர்க்கமாக இருந்ததால் முழுநேரமும் கட்சிக்காக செயல்பட ஒரு தலைவரை நாம் தற்போதுதேர்வு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் பிராந்திய மொழி மற்றும் இந்தியில் பேசும், தரமான, விசுவாசமான இரண்டு தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும். தகுதி சார் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் அவர்கள் அடுத்த தேர்தல் வரும் வரை தலைவர்களாக செயல்படுவார்கள். உள்கட்சிப் பூசல்கள், புகார்கள், மற்றும் சர்ச்சைகள் ஆகியவற்றை கடந்தும், நாம் அந்த இரண்டு தலைவர்களுக்கும், அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு முழுமையான ஆதரவினை அளிக்க வேண்டும். இது ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெற உதவும் என்று சிங்வி குறிப்பிட்டுள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சி, மாநிலங்களில் தனித்து போட்டியிடும் அளவிற்கு வளர வேண்டும். எந்த ஒரு கட்சியின் உதவியுமின்றி, எந்த வித அழுத்தத்திற்கும் இடம் தராமல் காங்கிரஸ் செயல்பட வேண்டும். அங்குதான் காங்கிரஸ் கட்சி கீழ் மட்டத்தில் இருந்து வலுவடையும் என்று அவர் கூறியுள்ளார்.

எங்கு காங்கிரஸ் காலூன்ற அதிக காலம் எடுத்துக் கொள்கிறதோ, அங்கு கடுமையான முடிவுகளை மேற்கொள்ள வேண்டியது வரும். அப்போது சரியான பிராந்திய கட்சியுடன் கூட்டணி அமைக்கும் நிலை வரலாம். ஆனால் வாக்குகளை பிரிப்பது பாஜகவுக்கு பலன் தராது என்பதை அவர்கள் உணர வேண்டும் என்றும் சிங்வி அறிவித்தார்.  நம் அனைவருக்கும் தனிப்பட்ட லட்சியங்கள் உள்ளன. ஆனால் இப்போது ஒரே ஒரு லட்சியம் மட்டுமே இருக்க வேண்டும் – கட்சியின் மறுமலர்ச்சி, ஆதரவு தளத்தை தக்கவைத்தல் மற்றும் அதிகாரத்திற்கு திரும்புவது என்று காங்கிரஸ் கட்சி குறித்து ரமேஷ் கொல்கத்தாவில் அறிவித்தார்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Congress seen to be adrift time for action now says sashi tharoor and abhishek singhvi