Advertisment

இனவெறியைத் தூண்டும் இங்கிலாந்தின் புதிய பயணக் கொள்கை; - காங். தலைவர்கள் விமர்சனம்

இங்கிலாந்தின் புதிய விதிகளின்படி, இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு பறக்கும் நபர்கள் தடுப்பூசி போடப்படாதவர்களாகக் கருதப்படுவார்கள். மேலும், அவர்கள் 10 நாள் தனிமைப்படுத்தல் மற்றும் கோவிட் -19 பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

author-image
WebDesk
New Update
இனவெறியைத் தூண்டும் இங்கிலாந்தின் புதிய பயணக் கொள்கை; - காங். தலைவர்கள் விமர்சனம்

இந்தியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த தடுப்பூசி போடப்பட்டவர்களை தடுப்பூசி போடாதவர்களாகக் கருதி, அவர்களை 10 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் இங்கிலாந்து அரசின் முடிவுக்கு எதிராக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சஷி தரூர் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் திங்கள்கிழமை கருத்து தெரிவித்தனர்.

Advertisment

திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுடி உறுப்பினர் சஷி தரூர், கேம்பிரிட்ஜ் யூனியனில் ஒரு விவாதத்தை நடத்தினார். அவரது "தி பேட்டில் ஆஃப் பிலாங்கிங்" புத்தகத்தின் இங்கிலாந்து பதிப்பு வெளியீட்டு நிகழ்வுகளில் இருந்து விலகினார்.

இங்கிலாந்து செய்தி ஆய்வாளர் அலெக்ஸ் மச்செராஸின் ஒரு தொடர்ச்சியான ட்வீட்டை மேற்கோள்காட்டி சஷ் தரூர் எழுதியதாவது: “இதன் காரணமாக கேம்பிரிட்ஜ் யூனியனில் இருந்து நான் வெளியேறினேன். என்னுடைய புத்தகத்தின் இங்கிலாந்து பதிப்பான தி பேட்டில் ஆஃப் பிலாங்கிங், (தி ஸ்ட்ரகிள் ஃபொர் இந்தியாஸ் சோல்) வெளியீட்டு நிகழ்ச்சியில் இருந்தும் வெளியேறினேன். முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட இந்தியர்களை தனிமைப்படுத்தச் சொல்வது புண்படுத்தும் செயல். பிரிட்டன் மக்கள் மறு ஆய்வு செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராஜ்யசபா காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், இங்கிலாந்து நாட்டின் புதிய பயணக் கொள்கை முற்றிலும் வினோதமானது என்று குறிப்பிட்டார். இங்கிலாந்து செய்தி ஆய்வாளர் அலெக்ஸ் மச்செராஸின் அதே ட்வீட்டை மேற்கோள்காட்டி ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “கோவிஷீல்டைக் கருத்தில் கொண்டு கூறப்பட்டிருப்பது இது முற்றிலும் விநோதமானது. இது முதலில் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. புனேவைச் சேர்ந்த தி சீரம் நிறுவனம் இங்கிலாந்து நாட்டுக்கும்கூட வழங்கியுள்ளது. ஆகையினால், இது இனவெறியைத் தூண்டு அறிவிப்பு” என்று சாடியுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு ட்விட்டரில், மச்செராஸ் இங்கிலாந்தின் சமீபத்திய பயணக் கொள்கையைப் பற்றி குறிப்பிடுகையில், “ஆப்பிரிக்கா, அல்லது தென் அமெரிக்கா, அல்லது ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, துருக்கி, ஜோர்டான், தாய்லாந்து, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தடுப்பூசி போடப்பட்ட மக்களை இங்கிலாந்து அரசு இன்று இரவு முதல் தடுப்பூசி போடாதவர்களாகக் உறுதி செய்கிறது. நீங்கள் தடுப்பூசி போடப்படாதவர் என்று கருதப்படுவீர்கள் மற்றும் தடுப்பூசி போடப்படாதவர்களுக்கான விதிகள் 10 நாள் வீட்டு தனிமைப்படுத்தல் மற்றும் பரிசோதனைகளை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

புதிய விதிகளின்படி, இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு செல்லும் மக்கள் 10 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அந்த காலகட்டத்தில் அவர்கள் கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Congress Shashi Tharoor
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment