Advertisment

பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் தலைவர் மரணம்... ராகுல் காந்தி இரங்கல்

பாரத் ஜோடோ யாத்திரையில் உயிரிழந்த கிருஷ்ண குமார் பாண்டே மராட்டிய மாநில காங்கிரஸின் சேவா தள பொதுச்செயலாளர் ஆவார்.

author-image
WebDesk
New Update
Maharashtra Seva Dal General Secretary Krishna Kumar Pandey

கிருஷ்ண குமார் பாண்டே

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி-காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை (பாரத் ஜோடோ யாத்திரை) நடத்திவருகிறார்.

இந்த யாத்திரையின் 62ஆவது நாள் (திங்கள்கிழமை- நவ.7) யாத்திரையின்போது காங்கிரஸ் மூத்தத் தலைவர் கிருஷ்ண குமார் பாண்டேவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.

Advertisment

இதையடுத்து நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார்.

இது பாரத் ஜோடோ யாத்ரீகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ண குமார் பாண்டேவின்மரணத்திற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ண குமார் பாண்டே மராட்டிய மாநில காங்கிரஸின் சேவா தள பொதுச்செயலாளர் ஆவார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை திங்கள்கிழமை இரவு மகாராஷ்டிராவிற்குள் நுழைந்தது.

மகாராஷ்டிராவின் ஐந்து மாவட்டங்களில் உள்ள 15 சட்டமன்ற மற்றும் 6 நாடாளுமன்றத் தொகுதிகள் வழியாக 15 நாள்களில் ராகுல் காந்தி பயணம் செய்து 382 கி.மீ. செல்கிறார்.

இந்த யாத்திரை நவம்பர் 20 ஆம் தேதி மத்தியப் பிரதேசத்திற்குள் நுழைகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Maharashtra Rahul Gandhi Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment