கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. கைப்பற்றால் பார்த்துக் கொள்ள வேண்டும் என காங்கிரஸை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறைமுகமாக விமர்சித்துள்ளது.
இந்த நிலையில் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன், “தேசிய அளவிலான கூட்டணி பயனுள்ளதாக இருக்காது. மாநில அளவில் அனைத்து பாஜக எதிர்ப்பு குழுக்களையும் ஒன்றிணைத்து ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும். அதுதான் முன்னோக்கி செல்லும் ஒரே வழி” என்றார்.
கேரள மாநில முதல் அமைச்சர் பினராய் விஜயனும் இதே உக்தியை ஒருநாளுக்கு முன்னதாக கூறினார்.
தொடர்ந்து கோவிந்தன், பா.ஜ.க கட்சியை எதிர்கொள்ள காங்கிரஸ் மட்டு உள்ளது என்பது ஓர் வாதம்தான்” என்றார்.
மேலும், “காங்கிரஸைத் தெரிந்த அனைவருக்கும், தேர்தலில் திறம்பட போட்டியிடக்கூடிய ஒரே மாநிலம் கர்நாடகாதான் என்பது தெரியும். குஜராத், ராஜஸ்தான் மற்றும் இதே போன்ற சில மாநிலங்கள் அவர்களால் முடியும் மற்ற மாநிலங்கள் ஆகும். ஆனால் அங்கும் காங்கிரஸ் பலவீனமான நிலையில் உள்ளது. இப்போதும் அவர்களுக்குள் உள் முரண்பாடுகள் உள்ளன” என்றார்.
தொடர்ந்து அந்த அறிக்கையில், “இந்தியாவின் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு எதிரான போராட்டத்தில் முன்வருமாறு கேட்டுக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“