Manoj C G
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பிய கடிதத்தில் கையெழுத்திட்ட 23 பேரில் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், காங்கிரஸில் அவர்கள் எழுப்பிய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு ஒரு முழுநேர கட்சித் தலைவரை நியமிக்கும் வரை 6 மாதங்கள் காத்திருக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கையெழுத்திட்ட 23 பேரில் மிக மூத்த காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத்தும் ஒருவர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், காங்கிரஸில் தாங்கள் எழுப்பிய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண ஒரு முழுநேர கட்சித் தலைவரை நியமிக்கும் வரை ஆறு மாதங்கள் காத்திருக்க தயாராக உள்ளதாக புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய குலாம் நபி ஆசாத், கடிதத்தில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்து ஆராய காங்கிரஸ் கட்சி அமைக்கக் கூடிய குழுவில் தன்னை உறுப்பினராவதற்கு சோனியா கேட்டால் உறுப்பினராவதில் அவர் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறினார்.
ஒரு காங்கிரஸ்காரன் என்ற முறையில், ராகுல் காந்தி அடுத்த தலைவராக வருவாரா அல்லது வேறு யாராவது வருவார்களா என தான் கவலைப்படவில்லை என்றும், அதற்கு பதிலாக கட்சி ஒரு முழுநேரத் தலைவரைப் பெற்றிருக்கிறது என்றால் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று குலாம் நபி ஆசாத் கூறினார்.
குலாம் நபி ஆசாத்தும் இணை கையொப்பமிட்டவர்களும் கடிதத்தை எவ்வாறு முன்னோக்கி எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர் என்று கேட்டதற்கு, குலாம் நபி ஆசாத் கூறியதாவது, “இந்த நேரத்தில் அதை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு முழுநேர தலைவர் இருக்க வேண்டும், அது யாராக இருந்தாலும் ... நாங்கள் ஏ, பி, சி, டி ... என யாரையும் பேசவில்லை” என்று கூறினார். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் செயற்குழு, மாநிலத் தலைவரக்ள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் தொகுதித் தலைவர்கள் மற்றும் ஒரு நாடாளுமன்ற குழு இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், “6 மாதங்களுக்குள் ... ஏ.ஐ.சி.சி (அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி) கூட்டம் நடைபெறும் என்றும் ஒரு முழுநேர தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதால், நாங்கள் காங்கிரஸ் காரியக் கமிட்டியில் எங்களுடைய இலக்குகளில் ஒன்றை அடைந்துள்ளோம். குறைந்த பட்சம், திருமதி சோனியா காந்தி இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இல்லையெனில், இடைக்கால தலைவராக இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு மூன்றாம் நபர் இருந்திருப்பார். அதன் பிறகு யாருக்குத் தெரியும், இடைக்கால தலைவராக நான்காவது ஒருவரும் இருந்திருப்பார்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய குலாம் நபி ஆசாத், “குறைந்தபட்சம், காலத்தின் தேவை கருதி ஒரு முழுநேர தலைவர் இருக்க வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது... அது யாராக இருந்தாலும், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. நாங்கள் தலைவர் வேட்பாளர்கள் அல்ல. நாங்கள் ஒரு முழுமையான, நிரந்தர தலைவரை மட்டுமே விரும்புகிறோம்” என்று அவர் கூறினார்.
அமைப்பு ரீதியான தேர்தல்கள் போன்ற பிற பரிந்துரைகளைப் பொறுத்தவரை, “திருமதி சோனியா காந்தியை அதைச் செய்யச் சொல்வது எங்கள் தரப்பில் நியாயமில்லை. ஏனென்றால், 6 மாதங்களுக்குள் தேர்தலை நடத்தி நிரந்தர தலைவரைக் கொண்டுவர முடிவு செய்துள்ளோம். இந்த காலகட்டத்தில், தொகுதி, மாவட்ட மற்றும் உராட்சி அளவிலான காங்கிரஸ் தேர்தல்களை அவர் எவ்வாறு நடத்த முடியும்? இதற்கு குறைந்தது ஒரு வருடம் ஆகும்… புதிய தலைவருடன் இந்த பிரச்சினையை நாங்கள் எடுக்க வேண்டும்.” என்று குலாம் நபி ஆசாத் கூறினார்.
குலாம் நபி ஆசாத் அவர் வானம் இடிந்து விழப்போவதில்லை என்பதால் அவர் 6 மாதங்கள் காத்திருக்க தயாராக இருந்தார் என்று தெரிவித்துள்ளார். நாஙக்ள் 23 ஆண்டுகளாக காத்திருக்கிறோம். அதனால், இன்னும் 6 மாதங்கள் காத்திருப்பதில் என்ன பிரச்னை இருக்கிறது” என்று ஆசாத் கூறினார்.
காங்கிரஸ் தலைவருக்கு உதவுவதற்கு அல்லது எழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகளை ஆராய ஒரு குழு அமைப்பது குறித்து கேட்டதற்கு, ஆசாத், “அது முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால், அதை காங்கிரஸ் தலைவர் கருத்தில் கொள்ள வேண்டும். இப்போதே குழு அமைக்கப்பட்டிருந்தாலும், அது அடுத்த தலைவரால் மட்டுமே செயல்படுத்தப்படும்.” என்று கூறினார். அந்த குழுவில் சேர்வதற்கு கேட்டுக்கொண்டா நீங்கள் சேர்வீர்களா என்று கேட்டதற்கு, குலாம் நபி ஆசாத் கூறுகையில், “ஆம், சேர்வேன். ஏன் சேரக் கூடாது. நாங்கள் ஒரு தலைவரின் கீழ் ஒரு கட்சியாக இருக்கிறோம். பிரச்சினைகளை எழுப்புவதால் நாங்கள் ஒரு கட்சி அல்ல என்று அர்த்தமல்ல.” என்று கூறினார்.
காங்கிரஸ் கட்சித் தலைமை குறித்து கேட்டதற்கு, சோனியா காந்தி பதவி விலக ஆர்வம் காட்டியதோடு, ராகுல் பதவியேற்க தயக்கம் காட்டியதாக கூறிய குலாம் நபி ஆசாத், “ஒரு காங்கிரஸ் ஊழியனாக யார் தலைவராக இருப்பார் என்று நான் கவலைப்படவில்லை. காங்கிரஸ் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு மூலம் நடைபெறுவதால் பெரும்பான்மையினரால் தேர்ந்தெடுக்கப்படுபவர் யாராக இருந்தாலும் நான் மகிழ்ச்சியடைவேன். ஒரு ஜனநாயகத்தில், யார் வேண்டுமானாலும் எழுந்து நிற்க முடியும். தேவையான எண்ணிக்கை பெறுபவர்கள் எவரும் வெற்றி பெறுவார்கள். அது எங்களால் ஏற்றுக்கொள்ளப்படும், குறைந்தபட்சம் அது என்னால் ஏற்றுக்கொள்ளப்படும்.” என்று கூறினார்.
கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் கட்சிக்குள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர், “செயற்குழு 22 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. ஆனால், 60 பேர் அழைக்கப்பட்டனர். சிறப்பு அழைப்பாளர்கள், நிரந்தர அழைப்பாளர்கள் மற்றும் அழைப்பாளர்கள் இல்லாமல் அது 22 பேர் கொண்ட செயற்குழுவில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். நாங்கள் எந்த வெறுப்பையும் கொண்டிருக்கவில்லை. கட்சியை வலுப்படுத்த நாங்கள் பிரச்சினைகளை எழுப்ப விரும்பினோம்… காங்கிரஸ் தலைவரும் ராகுல் காந்தியும் எந்தவிதமான வெறுப்பையும் கொண்டிருக்கவில்லை என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”
கடிதத்தின் உள்ளடக்கத்தைப் பற்றி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முதன்முதலில் செய்தி வெளியிட்ட ஒரு நாள் கழித்து, திங்கள்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்திற்குப் பிறகு ராகுலும் சோனியாவும் குலாம் நபி ஆசாத்துடன் பேசினர்.
கடிதம் சுற்றுக்கு விடப்படவில்லை அல்லது அதன் உள்ளடக்கம் காங்கிரஸ் காரியக் கமிட்டி விவாதிக்கப்படாதது குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா என்று கேட்டதற்கு, ஆசாத் கூறுகையில், “காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் தலைவர் உட்பட 22 பேர் மட்டுமே இருந்திருந்தால், ஒரு விவாதம் நடந்திருக்கும். செயற்குழுவில் உறுப்பினர்களாக இல்லாத 60 பேர் கொண்ட கூட்டத்தில், நீங்கள் இந்த விஷயங்களைப் பற்றி விவாதிக்க முடியாது.” என்று கூறினார்.
கடிதத்தின் முக்கியத்துவம் பற்றி பேசுவதற்கு கடிதத்தில் கையொப்பமிட்டவர்கள் சக காங்கிரஸ் ஊழியர்களை அணுகியிருக்கிறார்களா என்பது குறித்து பேசிய ஆசாத், “நாங்கள் ஏன் அணுக வேண்டும்? அது நாங்கள் காங்கிரஸ் தலைவரின் கவனத்தை ஈர்ப்பதற்காக செய்தது. அது கட்சிக்குள் அல்லது சில கூடுதல் குழு அல்லது இணையான குழுவை உருவாக்குவது பற்றிய பிரச்சாரம் அல்ல. நாங்கள் ஒன்றுபட்ட கட்சி. நாங்கள் பொறுப்புள்ளவர்கள். நாங்கள் எந்த அதிருப்தி குழுவையோ அல்லது தனி குழுவையோ உருவாக்கவில்லை.” என்று கூறினார்.
அவர்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட விமர்சனங்கள் குறித்து ஆசாத் கூறுகையில், “துரதிர்ஷ்டவசமாக, சிலருக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை அல்லது அவர்கள் மிகவும் இளையவர்களாக இருக்கிறார்கள். காங்கிரஸ் எவ்வாறு செயல்பட்டு வருகிறது. அதன் அரசியலமைப்பு அல்லது நாங்கள் செய்த தியாகங்கள் என்று தெரியாது… அவர்களில் சிலர் எங்களைப் போன்றவர்கள் பஞ்சாபின் பொறுப்பில் இருந்தபோதும், 35-40 ஆண்டுகளுக்கு முன்பு போர்த்தன்மையை எதிர்த்துப் போராடியபோதும் அவர்களில் சிலர் பிறக்கக்கூடவில்லை. அவர்கள்தான் எங்கள் தலைமையையும் நாங்கள் என்ன செய்கிறோம் என்று கேள்வி எழுப்பினர்.” என்று கூறினார்.
அவர் கடிதத்தில் கையெழுத்திட்டதற்கு காரணம், அவர் ராஜ்ய சபாவில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். பிப்ரவரி மாதம் அவருடைய பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்பு, காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கு உள்ள ஒரு இடமான கர்நாடகாவில் இருந்து ஜூன் மாதம் அவர் களமிறக்கப்படவில்லை என்ற விமர்சனம் குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், கூறுகையில், “இது முட்டாள்தனம். இந்த விமர்சனம் குலாம் நபி ஆசாத் யார் என்று தெரியாத சின்ன புத்தி கொண்டவர்களால் கூறப்படுகிறது.” என்று கூறினார்.
“நான் ஓய்வு பெறுகிறேன். சோனியா காந்திக்கும் எனது ஓய்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது பாஜக அரசு, இது எனது மாநிலத்தில் தேர்தலை நடத்தவில்லை. நான் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் அல்லது பீகார் அல்லது ராஜஸ்தானில் இருந்து ஒரு எம்.பி. அல்ல. நான் 1996 முதல் ஜம்மு காஷ்மீர் நிறுவனத்தில் இருந்து ஒரு எம்.பி.யாக இருக்கிறேன். ஜம்மு காஷ்மீரில் சோனியா காந்தி அல்லது ராகுல் காந்தியின் தவறு இல்லை. ஒரு தேர்தல் (ஜம்மு காஷ்மீரில்) நடந்திருந்திருந்தால், அங்கு எம்.எல்.ஏக்கள் இருந்திருந்தால், அவர் எனக்கு டிக்கெட் வழங்காவிட்டால், நான் ஒரு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.