Sandeep A Ashar , Manoj C G
காங்கிரஸ் செயற்குழு கூட்டம், இன்று ( ஆகஸ்ட் 24ம் தேதி) நடைபெற உள்ள நிலையில், காந்தி குடும்பம் எடுக்கும் முடிவுக்கு அனைத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, தங்களது தலைமையின் மீது எங்களுக்கு தெளிவான மற்றும் முழு நம்பிக்கை உள்ளது. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தலைமையின் கீழ்தான் கட்சி பாதுகாப்பாக இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் 5 முதல்வர்கள், காங்கிரஸ் செயற்குழு கமிட்டி உறுப்பினர்கள், எம்.பி,க்கள் உள்ளிட்ட 23 மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சி தலைமை தொடர்பாக, சோனியா காந்தி எழுதியிருந்த நிலையில், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த கடிதத்தை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, காந்தி குடும்பத்தில் இருந்து ஒருவரே, கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்த நிலையில், 23ம் தேதி இரவு முதல், காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி,க்கள், மாநிலங்களவை எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர், சோனியா காந்தி மீண்டும் தலைமையேற்க வலியுறுத்தி டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
விருதுநகர் தொகுதி எம்பி. மாணிக்கம் தாகூர், டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் நாடுமுழுவதும் பரவியுள்ளனர். இதன்காரணமாக, எங்களது மக்களவை தலைவர் அனுப்பியுள்ள கடிதத்தில் எங்களால் கையெழுத்து இட முடியவில்லை. இதன் எண்ணிக்கை 23யை தாண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா பள்ளி கல்வித்துறை அமைச்சரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான வர்ஷா கெய்க்வாட் குறிப்பிட்டுள்ளதாவது, காங்கிரஸ் ஊழியர்களின் இந்த தாழ்மையான முறையீட்டை பரிசிலீக்குமாறு சோனியா காந்திக்கு வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் கடிதத்தை, ஜோதிமணி (கரூர்), சப்தகிரி உலகா ( கோரபுட்), முகமது ஜவைத் (கிஷன்கஞ்ச்), ரவ்னீத் சிங் பிட்டு (லூதியானா) உள்ளிட்ட மக்களவை எம்பிக்களும், அமி யாக்னிக், ரதஜீ சதவ், பிஎல் புனியா உள்ளிட்ட மாநிலங்களவை எம்பிக்களும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் சமீபகாலமாக நடந்து வரும் நடவடிக்கைகளையும் அதன் எதிரொலியாக நடந்து வரும் சம்பவங்களையும் தாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். காங்கிரஸ் கட்சியால் வளர்ந்த நாங்கள், தங்கள் கட்சி தலைமையின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம். இதை தாங்கள் திறந்த மனதோட தெரிவிப்பதாக அனைவரும் தங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போதைய நிலையில் நாடு, பாரதிய ஜனதா கட்சி, ஆர்எஸ்எஸ் மற்றும் பாசிசவாத அரசில் சிக்கிக்கிடக்கிறது. மத்திய அரசின் பலனீனங்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி வரும் ராகுல் காந்தியை, ஆளுங்கட்சியினர் தொடர்ந்து கேலிக்கூத்தாகி வருகின்றனர். இதன்காரணத்தினாலேயே, கட்சி சற்று பலவீனம் அடைந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி இதற்குமுன் பல இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்தபோது, அந்த தருணங்களில் கட்சியை கட்டுக்கோப்பாக வழிநடத்திச்சென்றவர் சோனியா காந்தி என்பதை குறிப்பிட்டுள்ளனர்.
தாங்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறீர்கள் என்பது தாங்கள் அறிவோம். இருந்தபோதிலும், கட்சிக்கு தாங்களே தலைமை வகிக்க வேண்டும் என்பதே எங்களது தாழ்மையான கோரிக்கை என்று அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Letter vs letter: Show of loyalty via copy and paste