Kanchan Vasdev
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட விவசாய சட்டங்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவு தந்த நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சி, பஞ்சாபில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றது. அக்கட்சி 2165 முனிசிபல் வார்டுகளில் 1,399 வார்டுகளில் வெற்றி பெற்றூள்ளது. மேலும் 8 முனிசிபல் கார்ப்பரேசன்களில் 6ல் வெற்றி பெற்றுள்ள நிலையில் மொஹாலி தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட உள்ளது.
நகர்புறங்களில் செயல்படுத்தப்பட்ட நல்ல திட்டங்களின் விளைவாக வெற்றிகளைக் கைப்பற்ற முடியும் என்று எண்ணிய பாஜகவின் திட்டம் தோல்வி அடைந்தது. நீண்ட நாள் கூட்டணியில் இருந்த அகலி தாலில் இருந்து பிரிந்த நிலையில், பதான்கோட், பதலா, அபோஹர், சுஜன்பூர் போன்ற முக்கிய இடங்களிலும் தோல்விகளை தழுவியது. வெறும் 49 வார்டுகளில் மட்டுமே வெற்றியை தக்க வைத்துள்ளது. 329 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றியை தழுவியுள்ளனர்.
நகராட்சி மன்றங்களில் உள்ள 1,815 வார்டுகளில், 1,128-ஐ காங்கிரஸ் கைப்பற்றியது. 350 முனிசிபல் கார்ப்பரேசன் இடங்களில் 271-ஐ கைப்பற்றியது. அகலி தளம் முறையே 252 மற்றும் 33 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக முறையே 29, 20 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி 53 மற்றும் 9 இடங்களிலும் முறையே வெற்றி பெற்றன. மீத இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். சி.பி.ஐ 12 வார்டுகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி (கே) 13 வார்டுகளிலும் வெற்றியை கைப்பற்றியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
பிப்ரவரி 14ம் தேதி அன்று 8 முனிசிபல் கார்ப்பரேசன்கள் மற்றும் 109 முனிசிபல் கவுன்சில்கள், நகர் பஞ்சாயத்துகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றது. வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் தேர்தல்கள் ஆகும்.
அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் முடிவுக்கு வரும் ஆளும் கட்சிக்கு இந்த தேர்தல் முடிவுகள் ஒரு நல்ல வெற்றியாக அமைந்துள்ளது. அம்மாநில முதல்வர் இந்த மூன்று சட்டங்களுக்கும் எதிராக பேசினார். அவர்களின் கோரிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் விசயங்களை களையும் போது விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தார். மேம்பாடு தொடர்பான கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக முதல்வர் சிறப்பாக பங்காற்றியதன் விளைவாக இந்த முடிவுகள் கிடைத்துள்ளது. பஞ்சாபை அழிக்கும் நோக்கில், விவசாயிகளின் உரிமைகளின் மீதேறி நடந்து வருகிறது இந்த கட்சிகள் என்று அம்ரிந்தர் சிங் கூறினார். மேலும் அகலிதளம், ஆம் ஆத்மி கட்சிகளின் முதலைக் கண்ணீர் நாடகம் வாக்காளர்கள் மத்தியில் எடுபடவில்லை. இந்த முடிவுகளால், எதிர்வர இருக்கும் சட்டமன்ற தேர்வு முடிவுகளையும் இக்கட்சியினர் முன்பே அறிந்து கொண்டனர் என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க : பயணியர் விமானங்களின் வருகை உச்சவரம்பு ரத்து – தமிழக அரசு அறிவிப்பு
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுனில் குமார் ஜக்கர், “கேப்டன் ஃபார் 2022” என்று தேர்தல் முடிவுக்கு பின்பு கோஷம் எழுப்பினார். கொந்தளிப்பான கடலில் பஞ்சாப் என்னும் கப்பலை இயக்கக்கூடிய ஒரே கேப்டன் அவர் தான் என்பதை அவர் நிரூபித்துள்ளார்.
பஞ்சாப் மாநில நிதி அமைச்சர் மன்ப்ரீத் பதல் “ 53 ஆண்டுகளுக்கு பிறகு பதிந்தாவிற்கு காங்கிரஸ் கட்சியின் மேயர் ஒருவர் பதவி ஏற்க உள்ளார். இது வரலாற்றில் மிக முக்கியமான தருணம்” என்று அவர் ட்வீட் வெளியிட்டுள்ளார். அகலி தளம் கட்சியின் ஹர்சிம்ரத் பதல் பதிந்தாவின் மக்களவை உறுப்பினராவார்.
பாஜகவுடன் கூட்டணியில் இருந்து, பிறகு மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறிய போதும் கூட விவசாய சட்டங்களுக்கு எதிரான கோபம் தான் அகலிதளத்தின் தோல்விகளுக்கு காரணமாக அமைந்தது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் தல்ஜித் சிங் சீமா, காங்கிரஸ் கட்சியின் வெற்றி ”மாநில நிதியுதவியுடன் கூடிய அடக்குமுறை” என்றும் "மாநில தேர்தல் ஆணையத்தின் சம உதவியுடன் சிவில் இயந்திரங்களும் பஞ்சாப் காவல்துறையும் காங்கிரஸுக்கு வெற்றியை பெற்றுத்தந்துள்ளாதாக தெரிகிறது. 500 க்கும் மேற்பட்ட எஸ்ஏடி வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும், மற்ற கட்சியினரின் 200 வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
பாஜகவின் அமைப்பு செயலாளரான தினேஷ் குமார், பாஜக வேட்பாளர்கள் சுதந்திரமாக தேர்தல் பிரச்சாரமே செய்ய இயலாத நிலை இருந்த போது தேர்தல்கள் நடைபெற்றிருக்க கூடாது என்றார். பாஜகவின் பிரதான எதிர்க்கட்சியான ஆம் ஆத்மியை விட குறைவான இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ள நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த தேர்தல் முடிவுகளை காண முடியாது என்று அவர் மறுத்தார்.
ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஹர்பால் சிங் சீமா கூறுகையில், பஞ்சாப் வாக்காளர்கள் வழங்கிய “ஃபத்வாவை” கட்சி வரவேற்கிறது, அதே நேரத்தில் நகர்ப்புறங்களில் கட்சி தனது தளத்தை கணிசமாக அதிகரித்துள்ளது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு 109 முனிசிபல் கவுன்சில்களில் 87ஐ காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. 15 சுயேட்சை வேட்பாளர்களின் ஆதரவும் இருந்திருந்தால் மொத்தமாக 102 இடங்களையும் காங்கிரஸ் கைப்பற்றி இருக்கும் என்று அவர் கூறினார்.
மஜிதியா போன்ற இடங்களில் அகலிதளம் வெற்றி பெற்றுள்ளது. மூத்த கட்சி தலைவர் பிக்ரம் சிங் மஜிதியாவின் கோட்டையாக இது கருதப்படுகிறது. ஆனால் அகலிதளமோ, ஆம் ஆதிமொயோ அல்லது பாஜகவோ எந்த முனிசிபல் கார்ப்பரேசனிலும் பெரும்பான்மை வெற்றியை பெறவில்லை. மொஹாலி முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், புதன்கிழமை காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காத ஒரே மாநகராட்சி மோகா மட்டுமே.
பவநிகரில் ஒரு வார்டிலும் ஆம் ஆத்மி வெற்றி பெறவில்லை. பஞ்சாப்பில் தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு ஆம் ஆத்மி எம்.பி பக்வந்த் மனின் தொகுதி. ஆம் ஆத்மி கட்சி தனது டெல்லி பிரதிநிதியையும், பஞ்சாப் இணை இன்சார்ஜ் ராகவ் சதாவையும் பிரச்சாரம் செய்ய அனுப்பியிருந்தது. தோல்வி அடைந்தவர்களில் பாஜகவை சேர்ந்த அமைச்சர் திக்ஷன் சூட்டின் மனைவியும் உள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.