Congress to bear train travel cost of migrant workers says Sonia Gandhi : கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது மத்திய அரசு. இன்றுடன் 40 நாட்கள் ஊரடங்கு முடிவுக்கு வருகின்ற நிலையில் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் மட்டும் ஊரடங்கிற்கான தளர்வுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு.
இருப்பினும் இன்றிலிருந்து மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும். பொது போக்குவரத்திற்கு, பொதுமக்கள் கூட்டத்திற்கு முற்றிலுமாக அனுமதி கிடையாது. இருப்பினும், வெளிமாநிலங்களில் தங்கி வேலை பார்த்து வந்த புலம் பெயர் தொழிலாளர்கள், படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதற்காக மத்திய அரசு 1ம் தேதியில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.
Statement Of Congress President Smt. Sonia Gandhi
The Indian National Congress has
taken a decision that every Pradesh
Congress Committee shall bear the cost for the rail travel of every needy worker and migrant labourer and shall take necessary steps in this regard pic.twitter.com/kxruKa0xgI
— Congress (@INCIndia) May 4, 2020
இதற்காக ஆகும் செலவினை புலம் பெயர் தொழிலாளர்களின் சொந்த மாநில அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது அந்த தொழிலாளர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பிற்கு பலரும் தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்திருந்தனர். இந்த இக்கட்டான சூழலில் அரசு எப்படி, பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கும் என்ற கேள்விகளும் எழுந்தது.
இந்நிலையில் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பயண செலவை காங்கிரஸ் ஏற்கும் என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த கடிதத்தில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் குடிமக்களுக்கு இலவச விமான பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது மத்திய அரசு. இதற்கு அரசு rஊ.100 கோடியை செலவிட்டது. பிரதமரின் கொரோனா நிதிக்கு ரயில்வே துறை ரூ. 151 கோடியை நிதியாக அளிக்கும் போது, புலம் பெயர் தொழிலாளர்களுக்கு இலவச பயணத்தை அளிக்க முடியாதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு ரயிலில் இலவசமாக செல்வதை உறுதி செய்ய ரூ. 1 கோடியை நிதியாக ஒதுக்க திட்டமிட்டுள்ளது என்று ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.