காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். நாடு முழுவதும் உள்ள மக்களை சந்திக்கும் திட்டமாக பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்ற பெயரில் ராகுல் நடைபயணம் செய்து வருகிறார்.
இந்நிலையில், ராகுலின் இந்த யாத்திரையை திட்டமிட்டதை விட ஒரு வார காலம் முன்னதாகவே நிறைவு செய்யப்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உத்தரப் பிரதேச யாத்திரையில் பல பகுதிகள் தவிர்க்கப்பட்டு அங்கு நாட்குறைப்பு செய்யப்படும். யாத்திரை திட்டமிட்டதை விட ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே முடியும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ராகுல் யாத்திரை உத்தரப் பிரதேசத்தில் இந்த வாரம் நுழையும். 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலத்தில் கடந்த 2 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் முத்திரை பதிக்கத் தவறியது. அரசியல் ரீதியாக முக்கிய மாநிலமாக உத்தரப் பிரதேசம் உள்ளது.
உ.பி.யில், பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசி, ரேபரேலி, அமேதி, அலகாபாத், புல்பூர் மற்றும் லக்னோ உள்பட 28 மக்களவைத் தொகுதிகள் வழியாக யாத்திரை செல்ல இருந்தது. சந்தௌலி, வாரணாசி, ஜான்பூர், அலகாபாத், பதோஹி, பிரதாப்கர், அமேதி, ரேபரேலி, லக்னோ, ஹர்தோய், சீதாபூர், பரேலி, மொராதாபாத், ராம்பூர், சம்பல், அம்ரோஹா, அலிகார், பதாவுன், புலந்த்ஷாஹர் மற்றும் ஆக்ரா போன்ற பகுதிகளையும் யாத்திரை கடந்து செல்லும்.
எனினும் தற்போது யாத்திரை மேற்கு உ.பி.யின் பெரும்பாலான மாவட்டங்களைத் தவிர்க்கப்பட உள்ளது. மத்தியப் பிரதேசத்திற்குள் நுழைவதற்கு முன், லக்னோவில் இருந்து அலிகார் மற்றும் மேற்கு உ.பி.யில் உள்ள ஆக்ராவுக்கு நேரடியாகப் பயணிக்கும் என்று கூறப்படுகிறது.
சுவாரஸ்யமாக, மேற்கு உ.பி.யில் வலுவான முன்னிலையில் உள்ள காங்கிரஸின் இந்தியா பிளாக் பார்ட்னர் ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்.எல்.டி) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்.டி.ஏ) சேர பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/political-pulse/congress-reduce-duration-up-leg-bharat-jodo-nyay-yatra-rahul-gandhi-9156282/
எவ்வாறாயினும், உ.பி.யில் யாத்திரையைக் குறைக்கும் முடிவிற்கும் ஆர்.எல்.டி சம்பந்தப்பட்ட அரசியல் முன்னேற்றங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. "ராகுல் காந்தி வழியில் குழுக்களுடன் தொடர்பு கொள்வதற்கு நேரம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் யாத்திரையை மெதுவாக்க விரும்பினோம்" என்று ஒரு கட்சியின் தலைவர் ஒருவர் கூறினார்.
மார்ச் 20-ம் தேதிக்குள் மும்பையில் இறுதி கட்டத்தை எட்டவிருந்த யாத்திரை இப்போது மார்ச் 10 மற்றும் 14-ம் தேதிகளுக்கு இடையில் முடிவடையும், திட்டமிடப்பட்டதை விட குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்னதாக யாத்திரை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ராகுல் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு அதிக நேரம் ஒதுக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.
பிப்ரவரி 14-ம் தேதி ஒரு மாதத்தை நிறைவு செய்யும் யாத்திரையில் இதுவரை பங்கேற்காத ஏ.ஐ.சி.சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, உ.பி.யில் நுழையும் போது இணைவார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியா கூட்டணி தனது முதல் கூட்டுப் பேரணியை இந்த மாத இறுதியில் கர்நாடகாவில் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பிரிவு , திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாபில் தனித்து போட்டியிடும் முடிவுகளுக்குப் பிறகு கூட்டணி சலசலப்பை திர்கொள்கிறது, மேலும் ஆர்.எல்.டி-ன் நடவடிக்கையையும் கூட்டணி உற்று நோக்குகிறது. அடுத்த மாதம் மும்பையில் நடைபெறும் யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் காங்கிரஸ் இந்தியா கூட்டணி கட்சிகளை அழைக்க திட்டமிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.