பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து செப். 10ம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு

கடந்த சில வாரங்களாக அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து செப்.10ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடந்த காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு : முழு அடைப்பு போராட்டம்: பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 10 நாட்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இன்றைய நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 83 […]

பெட்ரோல் டீசல் விலை நிலவரம், Petrol-Diesel Price Today in Chennai
பெட்ரோல் டீசல் விலை

கடந்த சில வாரங்களாக அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து செப்.10ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடந்த காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு : முழு அடைப்பு போராட்டம்:

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 10 நாட்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இன்றைய நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 83 ரூபாய் வரை எட்டியுள்ளது.

இந்த விலை ஏற்றத்தால், மக்கள் அவதிக்குள்ளானது மட்டுமின்றி, வணிக ரீதியாகவும் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, “வரும் 10-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

தங்கத்தையும் மிஞ்சிய பெட்ரோல்-டீசல் விலை.. அலறும் பொதுமக்கள்!

இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் முன்வந்துள்ளதாக கூறினார். முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, பெட்ரோல் விற்பனை மையங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இடதுசாரி கட்சிகளும், பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக 10-ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Congress to hold bandh on september

Next Story
ஊடகங்களில் தலித் வார்த்தைக்குத் தடை : உச்ச நீதிமன்றத்தை நாடும் மத்திய அமைச்சர்ராம்தாஸ் அத்வாலே
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com