Advertisment

டெல்லி ரகசியம்: பாஜகவை வீழ்த்த துண்டுப்பிரசுரத்தை ஆயுதமாக்கும் காங்கிரஸ்

பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதாரச் சரிவு, உள்நாட்டுப் பாதுகாப்பு , பெண்கள், எஸ்சி மற்றும் எஸ்டிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் போன்ற பிரச்சினைகள் குறித்த துண்டுப்பிரசுரங்களை வெளியிட கட்சி திட்டமிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
டெல்லி ரகசியம்: பாஜகவை வீழ்த்த துண்டுப்பிரசுரத்தை ஆயுதமாக்கும் காங்கிரஸ்

சமூக ஊடகங்கள் வாயிலாக டிஜிட்டல் பரப்புரைகள் அதிகமுள்ள சகாப்த்ததில், சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, இடதுசாரிக் கட்சிகளைப் போலவே, குறிப்பிட்ட தலைப்புகளில் பாஜகவை குறிவைத்து துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளனர். இது ஐந்து மாநில தேர்தலில் கூடுதல் பலம் சேர்க்கும் என நம்புகின்றனர்.

Advertisment

முதற்கட்டமாக, விவசாயிகள் பிரச்சனை அடிப்படையிலான துண்டுப்பிரசுரங்களை இன்று (ஜனவரி 19) வெளியிடவுள்ளனர். இதை, தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களிலும பல்வேறு இடங்களில் காட்சிப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், ரந்தீப் சுர்ஜேவாலா, சச்சின் பைலட் மற்றும் ராஜீவ் சுக்லா போன்ற மூத்த தலைவர்கள் லக்னோ, சண்டிகர், வாரணாசி மற்றும் ஜலந்தர் ஆகிய இடங்களில் செய்தியாளர் சந்திப்பில் பேசுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.மற்ற தலைவர்கள் வெவ்வேறு இடங்களில் ஊடக உரையாடல்களை நடத்தவுள்ளனர்.

பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதாரச் சரிவு, உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பெண்கள், எஸ்சி மற்றும் எஸ்டிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் போன்ற பிரச்சினைகள் குறித்த துண்டுப்பிரசுரங்களை வெளியிட கட்சி திட்டமிட்டுள்ளது.

போன் வாதம்… தெளிவுப்படுத்திய தலைமை நீதிபதி

உச்ச நீதிமன்றத்தின் ஆன்லைன் விசாரணையில் போன்களை பயன்படுத்தாமல், லேப்டாப் அல்லது டெஸ்கடாப்பை பயன்படுத்த வேண்டும் என்கிற பதிவுத்துறையின் உத்தரவு குறித்து, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட சாதனத்தில் விசாரணை ஆஜராகவேண்டும் என வலியுறுத்த வேண்டாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

SCBA நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தலைமை நீதிபதி மற்றும் நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் இடையே நடந்த சந்திப்பில், இவ்விவகாரத்தை உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் (SCBA) தலைவர் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் எடுத்துரைத்தார்.

அப்போது பேசிய தலைமை நீதிபதி, பதிவுத்துறை வழங்கியது அறிவுரை மட்டுமே என்று தெளிவுபடுத்தினார்.தடையற்ற நீதிமன்ற நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காகவே லெப்டோப் அல்லது டெஸ்க்டாப்பில் வர சொல்லப்பட்டது. அத்தகைய கருவிகள் இல்லாதவர்கள், செல்போனிலே ஆஜராகலாம் என தெரிவித்தார்.

அதிகரிக்கும் கொரோனா

மேலும் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 5 ஆக அதிகரித்துள்ளது. நீதிபதி வினீத் சரண் தனது சீனியருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வழக்கறிஞரிடம் கூறிய போது, இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முன்பு பாதிக்ப்புக்குள்ளான 4 நீதிபதிகளுக்கு, தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Supreme Court Bjp Congress Congress Vs Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment