கவுரவ் கோகாய் கீழ் அவையில் காங்கிரஸ் கட்சி துணைத் தலைவராக இருக்கும் அதே வேளையில், கேரளாவில் இருந்து 8 முறை எம்.பி.யாக இருக்கும் கொடிக்குன்னில் சுரேஷ் கட்சியின் தலைமைக் கொறடாவாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்க: Gaurav Gogoi to be Congress’ deputy leader in Lok Sabha, Kodikunnil Suresh to be chief whip
மேலும், விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் மற்றும் கிஷன்கஞ்ச் எம்.பி முகமது ஜாவேத் ஆகியோர் லோக் சபாவில் காங்கிரஸ் கட்சியின் கொறடாக்களாக இருப்பார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக அக்கட்சியின் கவுரவ் கோகோய் இருப்பார் என்றும், இந்த முடிவு குறித்த கடிதம் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு துணைத் தலைவர், தலைமைக் கொறடா மற்றும் 2 கொறடாக்கள் நியமனம் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கவுரவ் கோகாய் கீழ் அவையில் காங்கிரஸ் கட்சி துணைத் தலைவராக இருக்கும் அதே வேளையில், கேரளாவில் இருந்து 8 முறை எம்.பி.யாக இருக்கும் கொடிக்குன்னில் சுரேஷ் கட்சியின் தலைமைக் கொறடாவாக இருப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் மற்றும் கிஷன்கஞ்ச் எம்.பி முகமது ஜாவேத் ஆகியோர் லோக் சபாவில் காங்கிரஸ் கட்சியின் கொறடாக்களாக இருப்பார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக அக்கட்சி அறிவித்தது. பின்னர், அவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
ராகுல் காந்தியின் வழிகாட்டுதலின் பேரில், காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் மக்களவையில் மக்கள் பிரச்னைகளை முன்வைத்து ஆற்றலுடன் பாடுபடும் என்று கே.சி. வேணுகோபால் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“