/tamil-ie/media/media_files/uploads/2022/04/smriti-irani-1200-1.jpg)
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி
Congress’ women wing leader heckles Union Minister Irani on IndiGo flight over inflation issue: அகில இந்திய மகிளா காங்கிரஸின் செயல் தலைவர் நெட்டா டிசோசா ஞாயிற்றுக்கிழமை, இண்டிகோவின் டெல்லி-கௌஹாத்தி விமானத்தில் இருவரும் நேருக்கு நேர் வந்தபோது, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் விலைவாசி உயர்வு குறித்து கேள்விகளை எழுப்பினார். அமைச்சர் அதற்கு என்னை குற்றம் சாட்ட வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக இண்டிகோ தெரிவித்துள்ளது.
நெட்டா டிசோசா ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவத்தின் ஒரு சிறிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் நெட்டா டிசோசா பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேட்கிறார்.
Faced Modi Minister @smritiirani ji, enroute to Guwahati.
— Netta D'Souza (@dnetta) April 10, 2022
When asked about Unbearable Rising Prices of LPG, she blamed Vaccines, Raashan & even the poor!
Do watch the video excerpts, on how she reacted to common people's misery ! 👇 pic.twitter.com/NbkW2LgxOL
விமானத்தின் முதல் வரிசையில் அமர்ந்திருந்த அமைச்சர், டி'சோசாவை வழியை மறிக்க வேண்டாம் என்றும், அதனால் பின்னால் இருப்பவர்கள் இறங்கலாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதையும் படியுங்கள்: இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும் அமித்ஷாவுக்கு போதுமா? மறைமலை நகரில் ஸ்டாலின் பேச்சு
ஏரோபிரிட்ஜில் டெர்மினலை நோக்கி நடந்து கொண்டிருந்த இரானி, இந்தியாவில் உள்ள 80 கோடி மக்களுக்கு கடந்த 27 மாதங்களாக இலவச உணவு தானியங்கள் கிடைக்கின்றன என்று காங்கிரஸ் தலைவரிடம் கூறுவது வீடியோவில் கேட்கிறது.
"என்னை குற்றம் சாட்டவில்லை என்றால் அது அழகாக இருக்கும்," என்று அமைச்சர் கூறுகிறார், அதற்கு நெட்டா டி'சோசா "யாரும் குற்றம்சாட்டப்படவில்லை" என்று கூறுகிறார்.
காங்கிரஸ் தலைவர் நெட்டா டிசோசா, அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் நீங்கள் ஒரு மந்திரி என்று கூறுகிறார், அதற்கு ஸ்மிருதி இரானி "நான் பதில் சொல்கிறேன் மேடம்" என்று பதிலளித்தார், மேலும் இலவச கொரோனா தடுப்பூசி பற்றி பேசுகிறார்.
வீடியோவில் உரையாடலின் சில பகுதிகள் கேட்கவில்லை.
IndiGo செய்தித் தொடர்பாளர் PTI இடம், “இந்த விஷயம் 6E262 DEL-GAU விமானத்தில் 10 ஏப்ரல் 2022 அன்று நடந்துள்ளது எங்களுக்குத் தெரியும், அது தற்போது விசாரணையில் உள்ளது. இந்த விவகாரத்தில் இண்டிகோ ஊழியர்கள் யாரும் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம் என்றார்.
ஜனவரி 28, 2020 அன்று இண்டிகோவின் மும்பை-லக்னோ விமானத்தில் ரிபப்ளிக் டிவியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை கேலி செய்த நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவை விமான நிறுவனம் ஆறு மாதங்களுக்கு தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.