/tamil-ie/media/media_files/uploads/2020/06/image-2020-06-24T002005.802.jpg)
நமது எல்லைக்குள் யாரும் வரவும் இல்லை, நமது எல்லைச் சாவடிகள் எதுவும் கைப்பற்றப்படவும் இல்லை என்ற அறிக்கை நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான தனது கண்டனத்தை காங்கிரஸ் கட்சி நேற்றும் பதிவு செய்தது.
இருப்பினும், நேற்று நடந்து முடிந்த காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவின் கூட்டம், கட்சிக்குள் உள்ள அழுத்தத்தை வெளிப்படுத்தியது. மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பின் உருவாகிய கருத்தியல் வேறுபாடுகள் இன்னும் தீர்கப்படாமல் உள்ளன என்பதனை இந்த அழுத்தம் வெளிப்படுத்துகிறது.
நரேந்திரா மோடியின் "கொள்கைகளையும், தவறான முடிவுகளையும் காங்கிரஸ் கட்சி குறிவைக்க வேண்டும், ஆனால் அவர் மீதான தனிப்பட்ட தாக்குதல் என்பது போல் தோன்றி விடக்கூடாது என்று கூட்டத்தில் கலந்து கொண்ட உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான ஆர்.பி.என். சிங் கூறியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
Part of Congress Working Committee today which deliberated on National Security, the current Corona pandemic & the constant increases in fuel prices pic.twitter.com/GCNiWJgVYz
— RPN Singh (@SinghRPN) June 23, 2020
ஆர்.பி.என். சிங் கூறியதை செயற்குழு கூடத்தில் கலந்து கொண்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் தாக்கக்கூடாது என்று உணர்ந்திருக்கலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ராகுல் காந்தி, கட்சி அத்தகைய முடிவை எடுக்குமானால், தான் பிரதமரை தாக்கி பேசுவதை நிறுத்திவிடுவதாக தெரிவித்தார்.
பிரதமருக்கு பதிலாக ராஜ்நாத் சிங் அல்லது நிர்மலா சீதாராமன் மீது கேள்விக் கணைகளைத் தொடுக்க தயாராக இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார். தன்னை காங்கிரஸ் கட்சியின் சிப்பாய் என்று கூறிய ராகுல் காந்தி, செயற்குழு என்ன முடிவு செய்தாலும் அதற்கு கட்டுப்படுவதாகவும், கட்சி செய்ய விரும்பாததை தான் ஒருபோதும் செய்ய மாட்டேன் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். அவர் ஆர்.பி.என். சிங் கூறிய ஆலோசனையை தவறாக புரிந்திருக்கலாம் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, மோடிக்கு எதிராக ராகுல் தனி மனிதாராக போராட்டம் நடத்தி வருகிறார், கட்சியின் மற்ற தலைவர்கள் பிரதமருக்கு எதிராகப் பேசுவதில்லை என்று கூறியதாக அறியப்படுகிறது.
பிரியங்கா காந்தியின் இந்த கருத்துக்கள், 2019 மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த நேரத்திலும் பெரிய விவாதமாக்கப்பட்டன. தேர்தல் தோல்விக்குப் பின்னர் நடந்த முதல் செயற்குழு கூட்டத்தில், பிரதமருக்கு எதிரான தனது “சௌகிதார் சோர் ஹை” (காவலாளியே திருடன்) பிரச்சாரத்தை பெரும்பாலான மூத்த தலைவர்கள் ஆதரிக்கவில்லை என்று ராகுல் கூறியிருந்தார். " பிரதமர், ஆர்.எஸ்.எஸ் மற்றும் இவர்கள் கைப்பற்றிய பிற அமைப்புகள் தொடர்பான எனது போராட்டத்தில் நான் முற்றிலும் தனித்து நின்றேன் "என்று ராகுல் தெரிவித்திருந்தார் .
கட்சிக்கும், அரசாங்கத்திற்கும் தலைவராக பிரதமர் இருப்பதால் அவர் விமரசனத்திற்கு உட்படுத்தப்பட்டவர் என்று அகமது படேல், ஆனந்த் சர்மா போன்ற மூத்த தலைவர்கள் கூறியதாக வாட்டாரங்கள் தெரிவித்தன.
எவ்வாறாயினும், பிரதமருக்கு எதிராக பயன்படுத்தப்படும் வார்த்தைகள் மிதமானதாக இருக்க வேண்டும் என்றும், அந்த பதவிக்கு உள்ள கவுரவத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அகமது படேல் தெரிவித்தார்.
பிரதமருக்கு எதிராக மலிவான சொற்களை பயன்படுத்தக்கூடாது என்று வேறு சில காங்கிரஸ் தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.
தன்னைப் போன்றவர்கள் தேவைப்படும் நேரத்தில் உறுதியாகவும், தைரியத்துடனும் பாராளுமன்றத்தில் பிரதமரிடம் கேள்வி எழுப்பியதாக தெரிவித்த ஷர்மா, பிரதமரைத் எதிரான கருத்துக்களை பதிவு செய்ய தலைவர்கள் பயப்படவில்லை என்று தெரிவித்தார்.
சுவாரஸ்யமாக, காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று பல தலைவர்கள் ஆலோசனை தெரிவித்தனர்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் இந்த ஆலோசனையை முதலில் வழங்கியதாகவும், உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி வி சீனிவாஸ் உள்ளிட்டோர் ஆதரவளித்ததாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
கூட்டத்திற்குப் பின்னர், இந்தியா- சீனா எல்லை மோதல் தொடர்பாக ராகுல் கூறிய கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.
"சீனா எங்கள் பிராந்தியத்தை ஆக்கிரமித்துள்ளது. நமது எல்லைக்குள் யாரும் வரவும் இல்லை, நமது எல்லைச் சாவடிகள் எதுவும் கைப்பற்றப்படவும் இல்லை என்று கூறியதன் மூலம் இந்தியா ராணுவத்திற்கு துரோகம் இழைத்து விட்டார். சீனர்களை எங்கள் நிலத்தை அபகரிப்ப்பதை அனுமதிக்க முடியாது. நமது தியாகிகளின் தியாகம் வீணாகாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும்.
வெளியுறவுக் கொள்கையின் முழுமையான தோல்வியே சீனாவின் அத்துமீறல்களுக்கு அடிப்படையாக அமைந்தது. இராஜதந்திரத்தின் நிறுவப்பட்ட அமைப்பு முறைகள் பிரதமரால் இடித்து நொறுக்கப்பட்டது. அண்டை நாடுகளுடனான நட்புறவை பேணுவதில் இன்று மோடமான பின்னடவை சந்தித்துள்ளோம். பாரம்பரிய நட்பு நாடுகளுடனான நமது மதிப்புமிக்க உறவு இன்று தடைபட்டுள்ளது, ”என்று அந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
சி.டபிள்யூ.சி ஆயுதப்படைகளுடன் "உறுதியற்ற ஒற்றுமையை" வெளிப்படுத்தும் ஒரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொண்டது, "தேசிய பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு" அரசாங்கத்திற்கு ஆதரவை உறுதிசெய்து, சீனாவை அதன் "வெட்கக்கேடான அத்துமீறலுக்காக" தாக்கியது "தவிர்க்கமுடியாத மற்றும் ஒருங்கிணைந்த பகுதிகளாக" இந்தியாவின் இறையாண்மை பிரதேசம் ”, மற்றும் பிரதமரை குறிவைத்து 'இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை' என்ற கருத்துக்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.