புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அப்போது, “புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து கொண்டு, அரசுக்கு எதிராக பாஜக அமைச்சர் சாய் சரவணன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது முதல்வர் ரங்கசாமிக்கு அவமானம்; ரங்கசாமிக்கு திராணி இருந்தால் சம்பந்தப்பட்ட அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்" என்றார்.
மேலும், “காரைக்காலில் அரசின் நகரமைப்பு குழுமத்தின் ஆவணங்களை போலியாக தயார் செய்து ஏராளமான வீட்டுமனைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது எனக் குற்றஞ்சாட்டிய அவர், “இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமிக்கு கடிதம் எழுத உள்ளதாகவும், இந்த முறைகேடு தொடர்பாக முதல்வர் விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.
மேலும், அதானியின் அழுத்தம் காரணமாக முதலமைச்சர் ரங்கசாமியை மிரட்டி, மின்துறை தனியார் மயமாக்குவதற்கான கோப்பில் கையெழுத்து வாங்கியுள்ளனர் என்றும், இது மக்களுக்கான அரசு இல்லை என்றும் புதுச்சேரியில் முதலாளிகளுக்கான அரசு நடைபெறுகிறது” என்று விமர்சித்தார்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“