புதுச்சேரியில் புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கான கட்டட வரைபடத் தயாரிப்பில் டெல்லியைச் சேர்ந்த கட்டட வல்லுநர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்டமாக தயாரிக்கப்பட்ட சட்டப்பேரவை மாதிரி வரைபடத்தினை ஏற்கனவே பார்வையிட்ட முதலமைச்சர் ந. ரங்கசாமி சில மாற்றங்களைக் கூறியிருந்தார்.
அதனடிப்படையில் மாற்றம் செய்யப்பட்ட மாதிரி வரைபட கூட்டம் இன்று (ஜூன் 22) புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் உள்ள முதல்வரின் அலுவலகத்தில் நடந்தது.
இதில், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் V. சத்தியமூர்த்தி கலந்துகொண்டார்.
சட்டப்பேரவைச் செயலர் J. தயாளன், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைக் கட்டடங்களின் மாதிரிகள் மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை படங்களுடன் விளக்கினார்.
அதனடிப்படையில் முதலமைச்சர் வரைபடங்களில் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவர் R. செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் க. இலட்சுமிநாராயணன், அரசு கொறடா P.V.ஆறுமுகம் (எ) A.K.D., சட்டமன்ற உறுப்பினர் R.பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி, அரசுச் செயலர்கள் A. முத்தம்மா, D. மணிகண்டன், C. உதயகுமார், ., மாவட்ட ஆட்சியர் இ. வல்லவன், R. கேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“