திப்பு சுல்தானின் பிறந்தநாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. அப்போது, சில அரசியல்வாதிகள் அவரை இந்தியாவின் "முதல் சுதந்திரப் போராட்ட வீரர்" என்றும் "நமது தலைசிறந்த ஹீரோக்களில் ஒருவர்" என்றும் அழைத்தனர்.
பாஜகவினர் திப்பு சுல்தானை மத வெறியர் என்றும் இந்து மற்றும் கன்னட எதிர்பாளர் என்றும் அழைத்தனர்.
இந்நிலையில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, indohistoricus என்ற கணக்கில் இருந்து உருது ட்வீட் ஒன்றை மறு ட்வீட் செய்தார்.
அதில், “திப்பு என்றால் தைரியம். திப்பு என்றால் புதுமை. திப்பு என்றால் அன்பு. திப்பு என்றால் ஒற்றுமை. திப்பு என்றால் தேசபக்தி. திப்பு என்றால் தியாகி. திப்பு என்றால் புலி. திப்பு என்றால் வாள், திப்பு என்றால் சுல்தான்.” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் தனது ட்விட்டர் பக்கத்தில், “வீரம் செறிந்த திப்பு சுல்தான் அவரது பிறந்தநாளில் மாபெரும் வீரருக்கு அஞ்சலிகள்” என்று கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவை தலைமையிடமாகக் கொண்ட திப்பு சுல்தான் கட்சியின் ஆர்வலரும் கல்வியாளருமான ஷேக் சதேக், சுல்தானை "இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர்" என்று அழைத்தார்.
பதிவுசெய்யப்பட்ட அவரது கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், “நமது தலைசிறந்த ஹீரோக்களில் ஒருவரான திப்பு சுல்தான், அவரது சமாதி இன்னும் மில்லியன் கணக்கான ரசிகர்களையும் ஆதரவாளர்களையும் ஈர்க்கிறது. அவர்கள் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள். #TipuSultanIndias Hero.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரிவு ட்விட்டரில், “மைசூர் புலி திப்பு சுல்தான் 272 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 20, 1750 அன்று பிறந்தார். அவர் துணைக் கண்டத்தின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ஆங்கிலேய சாம்ராஜ்யத்திற்கு எதிரான போராட்டத்தில் தனது உயிரைக் கொடுத்தார். இந்தியாவிற்கு பிரிட்டிஷ் அச்சுறுத்தலை அங்கீகரித்த ஒரே இந்திய ஆட்சியாளர் அவர்தான்” எனக் கூறப்பட்டிருந்தது.
கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டணாவில் திப்பு சுல்தானின் 100 அடி சிலையை நிறுவ கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ தன்வீர் சைட் முன்மொழிந்தார், சுல்தான் "இப்பகுதியின் உண்மையான வரலாற்றைக் குறிக்கிறது" என்று கூறினார்.
ஆட்சியாளருடன் தொடர்புடைய வரலாற்றை பாஜக திரித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பெங்களூருவில் கெம்பேகவுடா சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்த ஒரு நாள் கழித்து இது நடந்துள்ளது.
இதற்கு பதிலளித்த ஜேடி(எஸ்) மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம், “முஸ்லிம்கள் மத்தியில் சிலை அமைக்கும் கலாச்சாரம் இல்லை” என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய இப்ராகிம், இந்தியாவில் முஸ்லிம் தலைவரின் சிலை உள்ளதா? "நாம் அவரது பெயரை வைத்திருக்க முடியும், ஆனால் அவரது சிலை இல்லை," என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் சித்தராமையா இந்த நடவடிக்கையை ஆதரித்த நிலையில், மாநில அமைச்சரும் பாஜக தலைவருமான சிஎன் அஸ்வத் நாராயண், "கர்நாடகாவில் இது போன்ற ஒரு விஷயம் நடக்காது" என்று கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இது சமாதான அரசியலின் ஒரு பகுதி என்று கூறினார். மேலும் அவர் கன்னட மற்றும் இந்து எதிர்பாளர் என்று கூறியுள்ளார்.
நவம்பர் 10 அன்று, ஹுப்பள்ளியின் இத்கா மைதானத்தில் திப்பு ஜெயந்தி விழாவை நடத்துவதற்கு பாஜக ஆளும் ஹுப்பள்ளி-தர்வாட் மாநகராட்சியிடம் (HDMC) AIMIM மற்றும் சமதா சைனிக் தளம் அனுமதி பெற்றன.
அனைத்து பங்குதாரர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் குடிமை அமைப்பின் நிலைக்குழுவின் தலைவர் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஏஐஎம்ஐஎம் தார்வாட் மாவட்ட இணைச் செயலாளர் விஜய் எம் குண்ட்ரல் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறும்போது, “ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய திப்பு ஜெயந்தியை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்றும், நாம் பெருமைப்பட வேண்டிய போராளி என்றும் சட்டரீதியாக அவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
ஆனால் பல வலதுசாரி அமைப்புகள் இந்த முடிவை எதிர்த்தன மற்றும் திப்பு சுல்தான் இந்துக்கள் உட்பட மக்களைக் கொன்றதாகவும், கன்னட மொழிக்கு எதிரானவர் என்றும் கூறினர்.
இந்த நிலையில், மைதானத்தின் சொத்தும் பல தசாப்தங்களாக பிரச்னையில் சிக்கி வருகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அந்த சொத்து மாநகராட்சிக்கு சொந்தமானது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மைதானம் சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது தொடர்பான சர்ச்சையின் மையமாக இருந்தது நினைவு கூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil