ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கின் (ஆர்.எஸ்.எஸ்) பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே, மத மாற்றம் மற்றும் எல்லைப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்தல் ஆகியவை "மக்கள்தொகை ஏற்றத்தாழ்வை" ஏற்படுத்துவதாக கூறி, மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்களை கடுமையாக அமல்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்-ன் அகில இந்திய செயற்குழுவின் நான்கு நாள் கூட்டத்தின் முடிவிற்குப் பிறகு, பிரயாக்ராஜில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை உரையாற்றியபோது தத்தாத்ரேயா ஹோசபாலே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
அகில் பாரதிய காரியகாரி மண்டல் கூட்டத்தில், நாட்டில் "தடுக்கப்படாத" மத மாற்றங்கள் குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டது மற்றும் மக்கள்தொகை கொள்கையை உருவாக்குவதற்கான அழைப்பு மற்றும் அனைவருக்கும் ஒரே மாதிரியான செயல்பாடுகள் வழங்கப்பட்டது, என்று தத்தாத்ரேயா ஹோசபாலே கூறினார்.
இதையும் படியுங்கள்: ஒரு மாதத்தில் கத்தார் ஃபிபா உலகக் கோப்பை; பரிதாப நிலையில் இறந்த 9 இந்திய தொழிலாளர்களின் குடும்பங்கள்
மதமாற்றங்களால் "நாட்டின் பல இடங்களில் இந்துக்களின் மக்கள்தொகை குறைந்துள்ளது, அதன் விளைவுகளும் காணப்படுகின்றன" என்று தத்தாத்ரேயா ஹோசபாலே கூறினார். எல்லைப் பகுதிகளில் இருந்து "ஊடுருவல்" மக்கள் சமநிலையின்மைக்கு ஒரு காரணியாகும், இது சமூக மற்றும் பொருளாதார பதட்டங்களை உருவாக்கியுள்ளது என்று தத்தாத்ரேயா ஹோசபாலே கூறினார். மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு கடந்த காலத்தில் இந்தியா உட்பட பல நாடுகளின் பிரிவினைக்கு வழிவகுத்தது என்றும் தத்தாத்ரேயா ஹோசபாலே கூறினார்.
RSS தலைவர் தத்தாத்ரேயா ஹோசபாலே "மக்கள்தொகை ஏற்றத்தாழ்வுக்கு" மேற்கோள் காட்டிய மற்றொரு காரணி "குடும்பங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைவு" ஆகும். கடந்த 40-50 ஆண்டுகளில் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்ததன் காரணமாக, ஒரு குடும்பத்தின் சராசரி அளவு 3.4ல் இருந்து 1.9 உறுப்பினர்களாக குறைந்துள்ளதாக தத்தாத்ரேயா ஹோசபாலே கூறினார்.
“இதன் காரணமாக, எதிர்காலத்தில் இளைஞர்களுடன் ஒப்பிடுகையில் முதியோர்களின் எண்ணிக்கை உயரும் வாய்ப்பு உள்ளது. அது கவலைக்குரிய விஷயம்,” என்று கூறிய தத்தாத்ரேயா ஹோசபாலே, இந்தியாவை “யுவ தேசமாக” (இளையோர் தேசமாக) பராமரிக்க மக்கள்தொகை சமநிலை அவசியம் என்று கூறினார்.
மதமாற்றங்களைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆர்ய சமாஜ் மற்றும் தர்ம ஜாக்ரன் விபாக் போன்ற அமைப்புகளுக்கு உதவுமாறு ஆர்.எஸ்.எஸ் தனது ஊழியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது என்றும் தத்தாத்ரேயா ஹோசபாலே கூறினார். இதன் விளைவாக, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் போன்ற பிற மதங்களுக்கு மாறியதாகக் கூறும் இந்துக்களை மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டு வருவதற்கான சங்கபரிவார் அமைப்புகளின் முயற்சியான "கர் வாப்சி" -யின் (இந்து மதத்திற்கு மீண்டும் திரும்புதல்) சாதகமான விளைவு கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
மத மாற்றத்தைத் தடுப்பதில் தற்போதுள்ள சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று தத்தாத்ரேயா ஹோசபாலே கூறினார். உத்தரப்பிரதேசம் உட்பட சில மாநிலங்களில் உள்ள சட்டங்கள், கட்டாயம் அல்லது வசீகரம் மூலம், குறிப்பாக திருமணம் மூலம் மதமாற்றம் செய்வதைத் தடைசெய்யும் சட்டங்களை இது வெளிப்படையாகக் குறிப்பிடுகிறது.
“இன்னும், மதமாற்றங்கள் நடக்கின்றன. பல்வேறு இடங்களில் சட்டங்கள் (மதமாற்றத்தைத் தடுக்க) உள்ளன, இந்தச் சட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும். முன்னதாக, இமாச்சலப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இத்தகைய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன,” என்று தத்தாத்ரேயா ஹோசபாலே கூறினார்.
மதம் மாறியவர்கள் இடஒதுக்கீட்டின் பலனைப் பெற அனுமதிக்கக் கூடாது என்பதே ஆர்.எஸ்.எஸ் கருத்தாக இருப்பதாக தத்தாத்ரேயா ஹோசபாலே கூறினார்.
பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் சமூக நடவடிக்கைகளில் அவர்களின் பங்கேற்பு பற்றிய பிரச்சினையில், இந்தியாவில் குறிப்பாக இந்துக்கள் மத்தியில் பெண்களின் கல்வித்தரம் அதிகரித்துள்ளதாகவும், அவர்கள் தற்போது சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி வருவதாகவும் தத்தாத்ரேயா ஹோசபாலே கூறினார். “முடிவெடுப்பதிலும் விவாதங்களிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும். சமூக சீர்திருத்தங்கள் மற்றும் விழுமியங்கள், கலாச்சாரம் மற்றும் சமூக சமத்துவம் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் பெண்களின் தீவிர பங்கு மற்றும் ஆதரவு இல்லாமல் சாத்தியமில்லை,” என்று தத்தாத்ரேயா ஹோசபாலே கூறினார். சேவா பணிகள், கிராம மேம்பாடு, குடும்ப பிரபோதன் போன்ற ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
வடகிழக்கு மாநிலங்களில் "ஆர்.எஸ்.எஸ்-ஐ ஏற்றுக்கொள்ளும் தன்மை" அதிகரித்துள்ளதாகவும், அத்தகைய மாநிலங்களில் உள்ள பழங்குடி சமூகங்கள் ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்பு கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறினார்.
மத சிறுபான்மையினருடன் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் உரையாடல் குறித்து கேட்டதற்கு, 40 ஆண்டுகளாக இதுபோன்ற விவாதங்கள் நடைபெற்று வருவதாக தத்தாத்ரேயா ஹோசபாலே கூறினார். அக்டோபர் 16 முதல் 19 வரை பிரயாக்ராஜில் நடந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தும் கலந்து கொண்டார்.
கூடுதல் தகவல்கள் — பி.டி.ஐ
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.