/tamil-ie/media/media_files/uploads/2020/08/AnandN_.jpg)
convict released from jail buys smartphone for his daughter to attend online classes : கொரோனா ஊரடங்கின் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. பல்வேறு பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். வசதி வாய்ப்புடைய மாணவர்வகள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்களில் ஆன்லைன் வகுப்புகளை கவனித்து வருகின்றனர்.
வடசத்தீஸ்கர் பகுதியை சேர்ந்த ஆம்தர்ஹா கிராமத்தில் வசித்து வரும் ஆனந்த் நாகேஷ்யாவின் மகளும் ஆன்லைனில் பாடம் கற்றுக் கொள்ள விரும்புகிறார். ஆனால் குடும்பத்தின் ஏழ்மை காரணமாக அவரால் ஸ்மார்ட்போன் வாங்க இயலவில்லை.
2005ம் ஆண்டு குடும்பத்தகராறு ஒன்றின் காரணமாக சொந்த தாய்மாமனையே கொலை செய்துவிட்டு சிறை சென்றார் நாகேஷ்யா. அங்கு 15 ஆண்டுகள் சிறை வாசம் செய்த பிறகு தன்னுடைய சொந்த ஊர் திரும்பியுள்ளார். 15 ஆண்டுகள் சிறையில் காலம் கழித்த போது தான் கல்வியின் முக்கியத்துவம் என்ன என்பதை அவர் உணர்ந்துள்ளார்.
அவர் சிறைக்கு செல்லும் போது அவருடைய மகளுக்கு ஒரு வயது. இப்போது பள்ளி செல்லும் மாணவியாகிய அவருக்கு, அவருடைய தேவைகள் அனைத்தையும் தீர்க்க விரும்பிய தந்தை, சிறையில் வேலை செய்து சேமித்த பணத்தில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.
அக்கம் பக்கத்தில் கல்வி தேவைக்காக என் மகள் உதவி கோருவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை என்று கூறிய அவர், அவர்களுக்கு சொந்தமாக இருக்கும் நிலத்தில் விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை ஈட்ட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.