Advertisment

கோடிகளில் குளித்த 'பிக் பி' பாதுகாப்பு அதிகாரி: சஸ்பெண்ட் செய்து அரசு நடவடிக்கை

அமிதாப் பச்சனுக்கான பாதுகாப்பு பிரிவில் பணிபுரிந்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

author-image
WebDesk
Feb 16, 2022 15:59 IST
கோடிகளில் குளித்த 'பிக் பி' பாதுகாப்பு அதிகாரி: சஸ்பெண்ட் செய்து அரசு நடவடிக்கை

Sagar Rajput 

Advertisment

Cop who provided security to Bachchan suspended: மும்பை காவல்துறையின் காவல் மற்றும் பாதுகாப்புப் பிரிவில் பணியமர்த்தப்பட்டு 2015 ஆம் ஆண்டு முதல் நடிகர் அமிதாப் பச்சனின் மெய்க்காப்பாளராகப் பணியாற்றிய போலீஸ் கான்ஸ்டபிள் ஜிதேந்திர ஷிண்டே, மும்பை காவல் துறையில் இருந்து செவ்வாய்க்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஷிண்டே ஆகஸ்ட் 2021 வரை மூத்த நடிகரான அமிதாப் பச்சனுடன் பணிபுரிந்தார், மேலும் ஷிண்டே ஆண்டுக்கு ரூ. 1.5 கோடி சம்பாதித்ததாகக் கூறப்படும் அறிக்கைகள் வெளிவந்ததை அடுத்து மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நாக்ராலே அவரை சஸ்பெண்ட் செய்துள்ளார்.

போலீஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, கமிஷ்னர் நாக்ராலே, ஷிண்டேயை ஆகஸ்ட் 2021 கடைசி வாரத்தில் டிபி மார்க் காவல் நிலையத்திற்கு மாற்றினார்.

அமிதாப் பச்சனுக்கு X-வகைப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது, அதன் ஒரு பகுதியாக நான்கு போலீஸ் கான்ஸ்டபிள்கள் அவரைப் பாதுகாக்க நியமிக்கப்பட்டனர். பகலில் இருவர் மற்றும் இரவில் இருவர், அவர்களில் ஒருவர் ஷிண்டே.

அமிதாப் உடன் தொடர்புகளை வளர்த்துக்கொண்ட ஷிண்டே, தனது மனைவியின் பெயரில் பாதுகாப்பு நிறுவனத்தை தொடங்கினார்.

ஷிண்டேவின் வளர்ச்சியை உறுதிப்படுத்திய மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், “அமிதாப் பச்சனின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கும் பாதுகாப்பு நிறுவனம் ஷிண்டேவால் அவரது மனைவியின் பெயரில் தொடங்கப்பட்டது. மேலும் அவரது மனைவி பெயரிலான ஏஜென்சி வழங்கிய சேவைகளுக்கான பணம் (கட்டணம்) அவரது மனைவிக்கு பதிலாக ஷிண்டேவின் கணக்கிற்கு அனுப்பப்பட்டதைக் காட்டும் பல பரிவர்த்தனைகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம் என்றார்.

ஷிண்டேவை சஸ்பெண்ட் செய்ததோடு, மும்பை போலீஸ் கமிஷனர் நாக்ராலே, கூடுதல் போலீஸ் கமிஷனர் (தெற்கு) தலைமையில் ஒரு விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில், ஷிண்டே தனது மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் துபாய் மற்றும் சிங்கப்பூருக்கு நான்கு முறை பயணம் செய்ததையும் அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

"ஷிண்டே காவல்துறைக்கு தெரிவிக்காமல் வெளிநாடு பயணம் செய்தார், மேலும் நெறிமுறையின்படி, அவர் தனது மேலதிகாரிகளிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும்" என்று ஒரு அதிகாரி கூறினார்.

ஷிண்டே மும்பையில் உள்ள சொத்துக்கள் விற்பனையிலும் டீல் செய்ததாக அதிகாரிகள் அறிந்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Amitabh Bachchan #India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment