Advertisment

தடுப்பூசி கொள்முதல் : ஏலமெடுக்க வரிசைக்கட்டி நிற்கும் நிறுவனங்கள் ; அதிரவைத்த தடுப்பூசி உற்பத்தியாளர்கள்

Covid vaccine: தடுப்பூசிகளை வாங்க பல மாநில அரசுகள் உலகளாவிய டெண்டர்களை கோரியுள்ள நிலையில், மாநில அரசுகள் நேரடியாக உலக சந்தையில் போட்டியிடுவதை விட மத்திய அரசு தடுப்பூசிகளை வாங்க வேண்டும்.

author-image
WebDesk
New Update
தடுப்பூசி கொள்முதல் :  ஏலமெடுக்க வரிசைக்கட்டி நிற்கும் நிறுவனங்கள் ; அதிரவைத்த தடுப்பூசி உற்பத்தியாளர்கள்

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன. மகாராஷ்ட்ராவும் தடுப்பூசி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரு ரோமானிய நிறுவனம் மும்பைக்கு ஃபைசர் கோவிட் தடுப்பூசிகளை வழங்குவதாகக் கூறியது. ஆனால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் இல்லை என ஃபைசர் கூறியதால் அந்த முயற்சி வாபஸ் பெறப்பட்டது.

Advertisment

உணவுப் பொருட்கள் , ஆடை, கன்சல்டென்சிகளே நிறுவனங்களே தடுப்பூசி வழங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன. சில நிறுவனங்கள் மீடியா மற்றும் திரைப்படத் தயாரிப்போடு தொடர்புடையது. மகாராஷ்டிரா மற்றும் பிரஹன் மும்பை மாநகராட்சியின் உலகளாவிய வெளிப்பாடுகளுக்கு முறையே 5 கோடி மற்றும் 1 கோடி தடுப்பூசிகளுக்கு நிறுவனங்களின் குழுவினர் பதிலளித்துள்ளனர்.

தடுப்பூசிகளை வாங்க பல மாநில அரசுகள் உலகளாவிய டெண்டர்களை கோருறியுள்ள நிலையில், மாநில அரசுகள் நேரடியாக உலக சந்தையில் போட்டியிடுவதை விட மத்திய அரசு தடுப்பூசிகளை வாங்க வேண்டும் என்ற குரல்கள் வரும் நிலையில் இந்த தகவல்கள் வந்துள்ளன.

மகாராஷ்டிராவின் அழைப்புக்கு பதிலளித்த எட்டு நிறுவனங்கள், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆராய்ந்த தகவலின்படி, கன்சல்டென்சி நிறுவனங்கள், ஏற்றுமதி / இறக்குமதி, அல்லது கமிஷன் அடிப்படையில் செயல்படும் நிறுவனங்களில், மூன்று மட்டுமே சுகாதாரத் துறையில் உள்ளன. அவர்கள் ஒரு டோஸுக்கு $10-38 (ரூ. 728-ரூ. 2767) விலை பட்டியலிடுகின்றனர் . முன்கூட்டியே ஆர்டர் செய்தால் மூன்று வாரங்களுக்குள் வழங்கப்படும் என சில நிறுவனங்கள் உறுதியளிப்பதாக ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில் பின்வரும் மூன்று இந்திய நிறுவனங்கள் மஹாராஷ்டிராவுக்கு பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. GameChangerz; Tapadiya International Interventional Technology and Healthcare Ltd; & GetIt Innovations Private Ltd; . இந்தியாவுக்கு வெளியே ProcureNet, Kinfolk Trading FZC, Grupo Fermexor, Medical Supply Company of Switzerland (MSCS) & Hadley Development LLC ஆகியவை அடங்கும்.

மூன்று இந்திய நிறுவனங்களும் தங்களால் ரஷ்யாவின் தடுப்பூசியான ஸ்பூட்னிக் வியை வழங்குமுடியும் என கூறியதாக தெரிகிறது. ஆனால் ஸ்புட்னிக் கையாளும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் (RDIF) செய்தி தொடர்பாளர் கூறுகையில், Dr Reddy’s ஆய்வகங்களை தவிர இந்தியாவில் வேறு எங்கும் தங்களுக்கு தொடர்பு இல்லை என தெரிவித்தார்.

GameChangerz என்பது ஆட்டோமொபைல், ஃபேஷன், உணவு மற்றும் தொலைத் தொடர்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஒரு மேனேஜ்மெண்ட் கண்சல்டென்சி நிறுவனம் ஆகும். இதன் நிறுவனர் ஜகத் ஜித் சிங் இமெயில் பதிலில், GameChangerz RDIF விநியோகஸ்தரான சி.டி.பி சுவிஸை பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்புட்னிக் தடுப்பூசியை இறக்குமதி செய்யும் என கூறுகிறார்.

புனேவைச் சேர்ந்த Tapadiya International நிறுவனம் மொத்த மற்றும் கமிஷன் அடிப்படையிலான வர்த்தகம் மற்றும் மருத்துவம் & மருத்துவ உபகரணங்களில் ஒப்பந்தங்களை மேற்கொள்கிறது. 2020 ஆம் ஆண்டில் இது 6.19 கோடி ரூபாய் வருவாயையும், ரூ .1.99 கோடி இழப்பையும் சந்தித்தாக பதிவுகள் காட்டுகின்றன. அவர்களுடைய கருத்துக்களை கேட்க நாம் அனுப்பிய இமெயிலுக்கு எவ்வித பதிலும் வரவில்லை.

GetIt Innovations என்பது டெல்லியை சேர்ந்த நிறுவனம் ஆகும். மீடியா, திரைப்படத் தயாரித்தல் மற்றும் தகவல் தொடர்புகளில் நிபுணத்துவம் பெற்றது. அதன் உரிமையாளர்கள் சஞ்சீவ் நருலா மற்றும் ரச்னா நருலா. 2017 ஆண்டில் இருந்து இந்த நிறுவனம் எந்த வருவாயையும் ஈட்டவில்லை.

2019ஆம் ஆண்டில் ரூ .4.12 லட்சம் விற்பனையை பதிவு செய்ததை தவிர, 2017 ஆம் ஆண்டிலிருந்து இது எந்த வருமானத்தையும் ஈட்டவில்லை என்று அதன் அறிக்கைகள் காட்டுகின்றன. ரச்னா நருலா கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்

Grupo Fermexor என்ற மெக்சிகன் நிறுவனம் ஸ்பூட்னிக் வி, ஜான்சன் & ஜான்சன், ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை வழங்க முடியும் என்று கூறியது.

ஃபைசர் இன்க் அல்லது இந்தியா உட்பட உலகளவில் அதன் எந்தவொரு துணை நிறுவனமும் ஃபைசர்-பயோஎன்டெக் கோவிட் 19 தடுப்பூசியை இறக்குமதி / சந்தைப்படுத்த / விநியோகிக்க யாருக்கும் அங்கீகாரம் வழங்கவில்லை. எங்கள் தடுப்பூசியை தேசிய அளவில் பயன்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்துடன் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம்.

தங்கள் நிறுவனம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வது அல்லது வாங்குவதற்காக மத்திய அரசுடன் மற்றும் மத்திய அரசின் கீழ் உள்ள அமைப்புகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துகிறது. தற்போதைய அவசரகால தொற்றுநோய் காலத்தில் தடுப்பூசி கொள்முதல் தொடர்பாக மூன்றாம் தரப்பினருடன் செயல்படவில்லை என ஜே & ஜே செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

மாடர்னா மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனங்கள் நமது இமெயிலுக்கு பதிலளிக்கவில்லை

Grupo Fermexor நிறுவனத்திற்கு இது தொடர்பாக இமெயில் அனுப்பப்பட்டும் பதில் கிடைக்கவில்லை. ரஷ்ய நிறுவனம் இதுவரை அதன் முகவர்கள் பற்றிய எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை என்றாலும், மற்ற எல்லா நிறுவனங்களும் ஸ்பூட்னிக் வழங்க முடியும் என்று கூறியுள்ளன.

Kinfolk Trading என்பது ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட சர்வதேச இறக்குமதி / ஏற்றுமதி நிறுவனம் ஆகும். இது உணவு பொருட்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பங்களை கையாள்கிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ProcureNET கொள்முதல், தளவாடங்கள் மற்றும் சரக்குகளில் நிபுணத்துவம் பெற்றது. MCSC (சுவிட்சர்லாந்து) மருத்துவ சாதனங்கள், மருத்துவ பொருட்களை கொள்முதல் செய்து அரசு மற்றும் மருத்துவமனைகளுக்கு வழங்குவதை மேற்கொள்கிறது. அமெரிக்காவை சேர்ந்த Hadley Development, உலகளாவிய பிராண்டுகளுக்கான சில்லறை விற்பனையை கையாள்கிறது. குறிப்பாக ஆடைகள் விற்பனையை சார்ந்தது.

மகாராஷ்ட்ரா அரசு இந்த வாரம் தடுப்பூசி கொள்முதல் தொடர்பாக மேற்கூறிய நிறுவனங்களுடன் வீடியோ கான்பிரன்சிங்கில் ஆலோசனை நடத்துகிறது.அப்போது இந்த நிறுவனங்களின் அட்டவணைகளை புரிந்துகொள்வதற்கம், தடுப்பூசியை கொள்முதல் செய்ய இவை தடுப்பூசி உற்பத்தியில் உள்ள நிறுவனங்களுடன் ஏதேனும் ஒப்பந்தம் செய்துள்ளனவா என்பதை கண்டறியவும் இந்த மாநாட்டை நடத்துவதாக மகாராஷ்ட்ரா அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனங்களை கண்காணிக்க மத்திய அரசை அணுகவும் மஹாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையில், ருமேனியாவை சேர்ந்த O2 Blue Energy SRL நிறுவனம் BMCக்கு அளித்த பதிலில், Pfizer-BioNtech மற்றும் AstraZeneca தடுப்பூசியை வழங்குவதாக கூறியது. அதே நாளில் Pfizer-BioNtech அதன் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய சந்தைப்படுத்த மற்றும் விநியோகிக்க யாருக்கும் அங்கீகாரம் வழங்கவில்லை என கூறியது.

வியாழக்கிழமை BMC நிறுவனம் தரப்பில் நமக்கு வழங்கப்பட்ட இமெயில் பதிலில் ,தங்கள் நிறுவனம் ஏலத்தை திரும்ப பெறுவதாகவும், ஆனால் அதற்கான எந்த காரணத்தையும் கூறவில்லை எனவும் தெரிவித்திருந்தார்

மீதியுள்ள 7 நிறுவனங்களும் ரஷ்யாவின் ஸ்பூட்டினிக் வி மற்றும் ஸ்புட்னிக் வி லைட் தடுப்பூசியை வாங்க முடியும் என கூறியுள்ளன. தடுப்பூசியை நேரடியாக வாங்குவதற்காக RDIFக்கு BMC மற்றும் மகாராஷ்ட்ரா அரசு கடிதம் எழுதியுள்ளது. ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை

புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) இன் பதிலுக்காக பிஎம்சி காத்திருக்கிறது. “கடந்த வாரம், டெண்டரில் பங்கேற்கக் கோரி SIIக்கு எங்கள் ஈஓஐ நகலுடன் (தடுப்பூசிகளுக்கு) ஒரு இமெயில் அனுப்பினோம். இதுவரை அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை, ”என்று ஒரு அதிகாரி கூறினார்.நிறுவனங்கள் ஏலங்களை சமர்ப்பிக்கும் கடைசி தேதி ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் கூடுதல் ஏலங்களைப் பெறுவார்கள் என்று நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Corona Virus Covid Vaccine
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment