Corona is an obstacle to bring the record of BJP government to the people : பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து பாஜக ஆட்சியின் ஓராண்டு சாதனைகள் குறித்து அக்கட்சி தலைவர்கள் பல்வேறு இடங்களில் காணொலி காட்சி மூலம் பேசி வருகின்றனர். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தமிழக பாஜகவினருடன், ஓராண்டு சாதனைகள் குறித்து ட்விட்டர் நேரலையில் வந்தார்.
பாஜக தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் நேரலையில் பேசிய அவர், பாஜகவின் ஓராண்டு சாதனைகள் குறித்து மக்களுக்கு தெரிவிப்பத்தில் பிரச்சனை உள்ளது. கொரோனா அதற்கு தடையாக உள்ளது என்று கூறியுள்ளார். இந்த உரையில் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் பங்கேற்றார். காணொலி ஆலோசனை கூட்டத்தில் இல. கணேசன், பொன். ராதாகிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பேச்சின் சாராம்சம்
இந்திய அரசியல் சாசனம் பிரிவு 370 நீக்கத்தின் பின்னால் இருந்த அரசியல் காரணங்கள் குறித்து அவர் பேசினார். பெண்களுக்கான சொத்துரிமை, அனைவருக்குமான வாக்குரிமை, பழங்குடியினர் மற்றும் பட்டியல் இனத்தவருக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்கும் பொருட்டு அதனை நீக்கியதாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து முத்தலாக் சட்டம், திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம், அயோத்தி கோவில் விவகாரம் குறித்தும் அவர் தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil