Advertisment

தொடக்கத்திலேயே எச்சரித்தோம், வியாபாரிகள் கேட்கவில்லை: கோயம்பேடு சந்தை பற்றி முதல்வர் பழனிசாமி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மாற்று இடத்தில் தற்காலிக மார்க்கெட் அமைத்து கொள்ளுங்கள் என்று மார்ச் மாத நடுப்பகுதியிலே கோயம்பேடு வியாபாரிகள் சங்க நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தியதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, covid-19, cm edappadi k palaniswami, Coronavirus live news, corona latest numbers

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மாற்று இடத்தில் தற்காலிக மார்க்கெட் அமைத்து கொள்ளுங்கள் என்று மார்ச் மாத நடுப்பகுதியிலே கோயம்பேடு வியாபாரிகள் சங்க நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் வியாபாரிகள் சங்கம் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், இனி வரும் காலங்களில் தனிமனித இடைவெளி, முகக் கவசம் அணிதல் போன்ற விதிமுறைகளை கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Advertisment

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43.39 லட்சமாக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,00,728-ஆகவும், வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,92,804 ஆகவும் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 14,08,636 ஆக உயர்ந்துள்ளது. வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83,425 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70,756-லிருந்து 74,281 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 22,455-லிருந்து 24,386 ஆக அதிகரித்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,293-லிருந்து 2,415-ஆக உயர்ந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் யாருக்கு சென்றடையும் என்பது குறித்த அறிவிப்பை நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட உள்ளார். சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு பெருமளவில் கடன் அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முத்ரா திட்டத்தின் கீழும் கூடுதல் கடன் திட்டங்கள் இந்த அறிவிப்பின் கீழ் இடம்பெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.














Highlights

    22:58 (IST)13 May 2020

    10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு

    மாணவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை தள்ளி வைக்க கோரி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    21:43 (IST)13 May 2020

    PMCARES நிதியில் இருந்து ரூ.3100 கோடி ஒதுக்கீடு

    கொரோனா தடுப்பு பணிக்காக PMCARES நிதியில் இருந்து ரூ.3100 கோடி ஒதுக்கீடு

    * பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

    * ரூ.2 ஆயிரம் கோடி வென்டிலேட்டர் வாங்க ஒதுக்கப்படும்

    21:40 (IST)13 May 2020

    ஏழை மக்கள் கைவிடப்பட்டுவிட்டார்களே என்ற ஏமாற்றத்தை தருகிறது

    ‘நிதியமைச்சரின் அறிவிப்பில் ஏழை, எளிய மக்கள் கைவிடப்பட்டுவிட்டார்களே என்ற ஏமாற்றத்தை தருகிறது’

    பெரிய மீட்பு திட்டம் என பிரதமர் முழங்கியதற்கும்,நிதியமைச்சரின் அறிவிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை;கூட்டாட்சித் தத்துவத்தின் கடமை, பொறுப்பை நிறைவேற்ற மத்திய அரசு எண்ணவில்லை

    - ஸ்டாலின்

    21:39 (IST)13 May 2020

    கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த எப்ரல் 21ஆம் தேதி முதல் 22 நாட்களாக கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை

    * எப்ரல் 20 ஆம் தேதி கடைசியாக பாதிக்கப்பட்ட நபருடன் சேர்த்து மொத்தம் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்

    * 12 பேரும் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர்

    21:38 (IST)13 May 2020

    வெற்று உரைக்கு விளக்க உரை

    “பிரதமரின் வழக்கமான வெற்று உரைக்கு விளக்க உரையாக அமைந்துள்ளதே தவிர வேறேதும் இல்லை என்பதை வேதனையோடு தெரிவித்துக் கொள்கிறோம். பிரதமர் நேற்று தனது உரையில் 20 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணத் திட்டங்களை அறிவிப்பதாகவும் அதன் விவரங்களை நிதியமைச்சர் வெளியிடுவார் என்றும் கூறியிருந்தார்.

    இந்த அறிவிப்புகள் எவையும் உடனடியாக மக்களுக்குப் பயன் அளிக்கக் கூடியவையாக இல்லை. பிரதமரின் வழக்கமான வெற்று உரைக்கு விளக்க உரையாக அமைந்துள்ளதே தவிர வேறேதும் இல்லை என்பதை வேதனையோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

    21:02 (IST)13 May 2020

    கன்னித் தீவு கதை போல் அறிவிப்புகள் தொடரும்

    பிரதமரின் அறிவிப்பு ஏற்படுத்திய நம்பிக்கையை நிதியமைச்சர் அறிவிப்பு தகர்த்துவிட்டது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.

    'கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது' போல் வங்கி உத்தரவாதத்தை நீட்டிப்பது, கடன் வழங்குவது என்ற அறிவிப்புகள் மட்டுமே இருக்கின்றன. இவை நடைமுறையில் பெரும் பயனளிக்காது என்பதே கடந்த கால அனுபவமாகும்.

    'கன்னித் தீவு' கதை போல் அறிவிப்புகள் தொடரும் என்ற மற்றொரு அறிவிப்பு தவிர நிதியமைச்சரின் அறிவிப்புகளில் வேறு எதுவும் இல்லை. நிதியமைச்சர் ஊக்குவிப்பு ஊறுகாய் அளவுக்கும் உதவாத ஏமாற்றம், பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது" என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

    20:48 (IST)13 May 2020

    தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்!

    20:30 (IST)13 May 2020

    64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

    தமிழகத்தில் இதுவரை 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 42 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்

    - தமிழக சுகாதாரத்துறை

    * 'தமிழகத்தில் இதுவரை 2,176 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்

    20:29 (IST)13 May 2020

    ஆண்கள் 288, பெண்கள் 221 பேர் பாதிப்பு

    13.05.2020 வரை தமிழகத்தில் ஆண்கள்,பெண்கள் கொரோனா பாதிப்பு நிலவரம்

    * இன்று மட்டும் ஆண்கள் 288, பெண்கள் 221 பேர் பாதிப்பு

    * இதுவரை ஆண்கள் 6136 பேரும், பெண்கள் 3088 பேரும் பாதிப்பு

    20:29 (IST)13 May 2020

    அரசு அதிரடி நடவடிக்கை

    காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார், வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ்

    * பழக்கடை விவகாரத்தில் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

    20:28 (IST)13 May 2020

    380 பேருக்கு கொரோனா

    சென்னையில் இன்று ஒரே நாளில் 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,262 ஆக உயர்வு

    - சுகாதாரத்துறை

    20:27 (IST)13 May 2020

    ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா

    * கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9,227 ஆக உயர்வு

    * சென்னையில் இன்று ஒரே நாளில் 380 பேருக்கு கொரோனா

    * சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,262

    19:19 (IST)13 May 2020

    3 நாட்களுக்கு பின் திறக்கலாம்

    தமிழகத்தில் விதிகளை மீறியதால் சீல் வைக்கப்பட்ட கடைகளை 3 நாட்களுக்கு பின் திறக்கலாம். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என எச்சரிக்க வேண்டும்.

    - முதல்வர் பழனிசாமி

    18:52 (IST)13 May 2020

    சிறப்பு அதிகாரிகளை நியமித்து நோய் பரவலை கட்டுப்படுத்தி உள்ளோம் - முதல்வர் பழனிசாமி

    முதல்வர் பழனிசாமி: சிறப்பு அதிகாரிகளை நியமித்து நோய் பரவலை கட்டுப்படுத்தி உள்ளோம். இந்தியாவிலேயே அதிக பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

    18:48 (IST)13 May 2020

    இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி

    இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது; வீதிவீதியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    17:10 (IST)13 May 2020

    மதுரையில் நாளை முதல் ஜவுளிக் கடைகள் திறக்க அனுமதி - மாவட்ட ஆட்சியர் வினய்

    மதுரையில் நாளை முதல் ஜவுளி கடைகள், காலணி கடைகளை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவிட்டுள்ளார்.

    17:02 (IST)13 May 2020

    கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக நாமக்கல் அறிவிப்பு

    நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 77 பேரும் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். இதையடுத்து நாமக்கல் கொரோனா தொற்று இல்லாதா மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    16:53 (IST)13 May 2020

    குற்றாலத்தில் பெருக்கெடுத்தோடும் அருவி; கொரோனா பொதுமுடக்கத்தால் வெறிச்சோடியது

    குற்றால அருவியில் வெள்ளம் பெருகெடுத்து ஒடுகிறது. கொரோனா பொது முடக்கத்தால் அனைவரும் வீடுகளில் முடங்கி இருப்பதால் குற்றால அருவி வெறிச்சோடி காணப்படுகிறது.

    16:21 (IST)13 May 2020

    தன்னிறைவு இந்தியா திட்டங்களை அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    பிரதமர் மோடி நேற்று ரூ.20 லட்சம் கோடிக்கு பொருளாதார திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று கூறிய நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 5 அம்ச நோக்கங்களுடன் ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் தன்னிறைவு இந்தியா திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    15:59 (IST)13 May 2020

    மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்; ஸ்டாலின் மீது அமைச்சர் பாண்டியராஜன் விமர்சனம்

    பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்து விடுமுறை எடுக்க வேண்டும் என்ற மனநிலையில் மாணவர்கள் உள்ளனர். ஆனால், பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மு.க.ஸ்டாலின் மாணவர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

    15:28 (IST)13 May 2020

    கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யக்கோரி மனு

    கடந்த மாதம் கொரோனாவால் இறந்த மருத்துவர் சைமன் உடலை, சிலரின் எதிர்ப்பால் வானகரம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து அடக்கம் செய்யப்பட்ட மருத்துவர் சைமன் உடலை அந்த இடத்தில் இருந்து எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசு, காவல்துறை, மாநகராட்சி 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

    14:49 (IST)13 May 2020

    டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைனில் விற்பனை செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட் உத்தரவு

    தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய உத்தரவிட கோரிய வழக்க்கை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், மனுதாரருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த உயர் நீதிமன்றம், அபராதத் தொகையை முதலமைச்சர் நிவாரண நிதியில் ஒரு வாரத்தில் செலுத்த உத்தரவிட்டது.

    14:45 (IST)13 May 2020

    விழுப்புரத்தில் சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட்டில் மனு

    விழுப்புரத்தில் எரித்துக் கொலை செய்யப்பட்ட சிறுமி ஜெயஸ்ரீயின் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    14:29 (IST)13 May 2020

    வாணியம்பாடி நகராட்சி ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

    வாணியம்பாடியில் வியாபாரிகளின் பழங்களைக் கீழே கொட்டி சேதப்படுத்திய வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், 2 வாரத்தில் மாநில நகராட்சி நிர்வாக ஆணையரும் பதிலளிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    14:17 (IST)13 May 2020

    மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொண்டு தேர்வுக்கு வர வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன்

    பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்: மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதற்கான ஏற்பாடுகள் வகுப்பறைகளில் செய்யபட்டிருக்கிறது. மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொண்டு தேர்வுக்கு வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    13:31 (IST)13 May 2020

    வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; புயலாக மாறும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. 15ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 16-ம் தேதி காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக மாறி மையம் கொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மே 15-ம் தேதி 45 - 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் மே 16-ம் தேதி 55 -65 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும், மே 17-ம் தேதி 65 - 75 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால், மே 15,16,17 தேதிகளில் அந்தமான் அதையொட்டிய கடல் பகுதிக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    12:49 (IST)13 May 2020

    ரஷ்யாவில் கொரோனா

    ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதால் கொரோனா வைரசால் அதிகம் பாதிப்பு அடைந்த நாடுகள் பட்டியலில் ரஷ்யா மூன்றாம் இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 899 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 32 ஆயிரத்து 243 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் நேற்று 107 பேர் உயிரிழந்த நிலையில் அங்கு மொத்த உயிரிழப்புகள் 2 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது

    12:24 (IST)13 May 2020

    படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்படும்

    பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினால் ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தி, தமிழகம் இயல்புநிலைக்கு கொண்டுவரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியர்களுடான ஆலோசனைக் கூட்டத்தில்பேசிய அவர், இவ்வாறு கூறினார். 

    11:19 (IST)13 May 2020

    தீயணைப்பு வீரருக்கு கொரோனா

    தமிழக ஆளுநர் மாளிகை தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றுபவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 28 வயது தீயணைப்பு வீரருக்கு கொரோனா உறுதி

    11:04 (IST)13 May 2020

    சென்னையில் கொரோனா விபரம்

    10:38 (IST)13 May 2020

    நிதியமைச்சர் நிர்மலா வெளியிடுகிறார்

    பிரதமர் மோடி கூறிய ரூ.20 லட்சம் கோடி திட்ட அறிவிப்புகளை இன்று மாலை 4 மணிக்கு வெளியிடுகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    10:16 (IST)13 May 2020

    கொரோனா பாதிப்பு முதலில் உயர்ந்து பின்னர் குறையும்

    கொரோனா பாதிப்பு முதலில் உயர்ந்து பின்னர் குறையும் என கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம், இந்தியாவிலும் தற்போது உயர்ந்துள்ள கொரோனா பாதிப்பு பின்னர் குறைய வாய்ப்புள்ளது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொலியில் பேச்சு. 

    10:12 (IST)13 May 2020

    கொரோனாவை தடுப்பது மக்களின் கையில்தான் உள்ளது

    தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்றவிதிமுறைகளை கடைப்பிடித்தால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும். பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொலியில் ஆலோசனை நடத்தி வருகிறார். 

    09:49 (IST)13 May 2020

    முதல்வர் ஆலோசனை

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொளியில் ஆலோசனை நடத்தி வருகிறார். 

    09:41 (IST)13 May 2020

    இந்தியாவில் கொரோனா

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70,756-லிருந்து 74,281 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 22,455-லிருந்து 24,386 ஆக அதிகரித்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,293-லிருந்து 2,415-ஆக உயர்ந்துள்ளது.

    Corona latest news updates :சென்னையில் கொரோனா தாக்கம் அதிகம் உள்ளதால் ரயில் சேவைகளை இயக்க வேண்டாம் என்று முதல்வர் பழனிசாமி ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், சென்னை ராஜ்தானி குளிர்சாதன ரயில்மூலம் கொரோனா தொற்று வாய்ப்பு உள்ளதால் பயனிகளை பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும்.சென்னை ரயில்களில் வருபவர்களை தனிமைப்படுத்தி பரிசோதிக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
    Corona Virus Corona Coronavirus
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment