Corona lockdown would have to be extended says Prime Minister Narendra Modi
Corona lockdown would have to be extended says Prime Minister Narendra Modi : இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் அதிக எம்.பி.க்களை கொண்டுள்ள கட்சியின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளிடம் இன்று உரையாடினார். கொரொனா நோய் பரவல் தடுப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
அதில் தலைவர்களின் பல்வேறு கருத்துகளை கேட்டறிந்துள்ளார் மோடி. மேலும் இந்த ஊரடங்கினை அரசு நீட்டிக்க வேண்டுமா இல்லை ஆட்சேபம் தெரிவிப்பீர்களா என்று கேட்டு தெரிந்து கொண்டார். ஊரடங்கு நீட்டிப்பிற்கு தலைவர்கள் மறுப்பு ஏதும் கூறவில்லை. ஆனால் மக்களுக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
Advertisment
Advertisements
அவர்களிடத்தில் ஆலோசனை கேட்ட மோடி ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று மோடி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த யுத்தம் நம் அனைவரையும் ஒன்றிணைத்துள்ளது. இந்த நோய் இந்நாட்டை விட்டு வெளியேறுவது வரை நாம் போராடிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியதாக தெரிகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil