Corona second wave : மகாராஷ்ட்ராவில் உள்ள மூன்று மாவட்டங்களில் அதிக அளவு மருத்துவமனையில் தொற்று உள்ளவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மூன்று மாவட்டங்களில் ஆக்ஸிஜன் சப்ளையில் பிரச்சனை உள்ளது. இரண்டு மாவட்டங்களில் வெண்டிலேட்டர்கள் சரியாக செயல்படவில்லை.
பஞ்சாபில் உள்ள இரண்டு மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக மருத்துவமனைகள் இல்லை. மூன்று மாவட்டங்களில் போதுமான அளவில் சுகாதாரத்துறை ஊழியர்கள் இல்லை. ஒரு மாவட்டத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனைக் கூடம் இல்லை.
சத்தீஸ்கரில் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனைக் கருவிகள் குறைவாகவே உள்ளது. நான்கு மாவட்டங்களில் அதிகமாக நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். மாநில தலைநகரில் போதுமான ஆக்ஸிஜன் சப்ளை இல்லை.
கொரோனா தொற்றால் அதிக அளவு உயிரிழப்பை சந்தித்து வரும் மாநிலங்களான மகாராஷ்ட்ரா, பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பிய சிறப்பு குழு கண்டறிந்த மிக முக்கியமான பிரச்சனைகளில் இவைகளும் அடங்கும்.
கடந்த வாரம் மாநில முதல்வர்களுடன் பிரதமர் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இந்த குழு நேரடியாக மோடியின் வழிகாட்டுதலின் படி இந்த மாநிலங்களுக்கு சென்றனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக் கிழமை அன்று 11,08,087 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்ட்ரா, சத்தீஸ்கர், கர்நாடகா, உ.பி. மற்றும் கேரளா மாநிலங்களில் ஏற்பட்டுள்ள தொற்றுகள் மொத்தமாக 70.82%-த்தை கொண்டுள்ளன. மகாராஷ்ட்ராவில் ம்மட்டும் 48.57% பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை கூறுகிறது.
தொடர்ந்து கொரோனா தொற்றிற்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 839 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்ட்ராவில் 309 நபர்களும், சத்தீஸ்கரில் 123 நபர்களும் பஞ்சாபில் 58 நபர்களும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் படிக்க : கொரோனா கட்டுப்பாடுகள் : கோவை ஹோட்டலில் சாப்பிட வந்தவர்களை லத்தியால் தாக்கிய காவலர்
இந்த மாநிலங்களுடன் சேர்த்து உ.பியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மேலும் கவலை அளிக்கிறது. அதே போன்று குஜராத்தில் சோதனை செய்யும் எண்ணிக்கை பெரிய விவகாரமாக உள்ளது என்று அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். உ.பி.யில் கடந்த 24 மணி நேரத்தில் 12,784 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 46 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 5,011 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது உ.பியின் நிலை அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் சோதனை செய்யும் நபர்களில் 70% பேர் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை மேற்கொள்கின்றனர். சோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டெல்லியை போன்று அதிக அளவு அங்கே சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சூரத்தில் உள்ள மூன்று குழுக்கள் பதில்களில் இருக்கும் இடைவெளிகளை ஆராய்தல் மற்றும் மோசமான சூழலில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு உதவும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. சூரத் எங்களுக்கு மிகவும் முக்கியமான பகுதியாகும். கடந்த ஆண்டு கூட சோதனையை அதிகரிக்கவில்லை. ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை மிகவும் குறைவாக உள்ளது. ராஜ்கோட், பரோடா மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களுக்கும் இக்குழுக்கள் செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் சுகாதார செயலாளர்களுக்கு தனித்தனியாக கடிதங்களை எழுதியுள்ளார், ஒப்பந்த சுகாதார ஊழியர்களை பணியமர்த்துவது, மருத்துவமனை உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட மத்திய குழுக்கள் எழுப்பியுள்ள கவலைகளை அவசரமாக தீர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
மகாராஷ்ட்ரா
அகமது நகர், ஔரங்கபாத், நாக்பூர் மற்றும் நதுர்பர் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
தீவிர கண்காணிப்பில் வைக்கப்படும் நோயாளிகளை நிர்வகிக்க ஔரங்கபாத் மாவட்டம் மற்ற மாவட்டங்களை சார்ந்துள்ளது என்று அங்கே சென்ற குழு அறிவித்துள்ளது.
பந்தரா, பல்கர், ஒஸ்மானாபாத் மற்றும் புனே ஆகிய மாவட்டங்களில் ஆக்ஸிஜன் சப்ளையில் பிரச்சனை இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. செயற்கை சுவாசம் தரும் கருவிகளில் பிரசசனை இருப்பதாக சத்தாரா மற்றும் லத்தூர் மாவட்டங்களுக்கு சென்ற குழுக்கள் தெரிவித்துள்ளன.
அவுரங்காபாத், நந்தூர்பார், யவத்மால், சதாரா, பால்கர், ஜல்கான், ஜல்னா மாவட்டங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
சதாரா, பண்டாரா, பால்கர், அமராவதி, ஜல்னா மற்றும் லாதூர் மாவட்டங்களில் சோதனை திறன் ஏற்கனவே அதிகமாகிவிட்டது, இதன் விளைவாக சோதனை முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுகிறது; சதாரா மாவட்டத்தில் சிகிச்சை மையங்களுக்கு நோயாளிகள் அறிக்கையை தாமதமாக தாக்கல் செய்வதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் 72 மணி நேரத்திற்குள் ஏராளமான இறப்புகளுக்கு வழிவகுக்கிறது.
பஞ்சாப்
எஸ்.ஏ.எஸ் நகர் மற்றும் ரூப்நகர் மாவட்டங்களில் பிரத்யேக கோவிட் 19 மருத்துவமனைகள் இல்லை. எனவே நோயாளிகள் அருகில் உள்ள மாவட்டங்கள் அல்லது சண்டிகருக்கு அனுப்பப்படுகின்றனர். ரூப்நகரில் கொரோனா சிகிச்சை மையம் அல்லது பிரத்யேக கொரோனா மருத்துவமனை இல்லை என்பதையும், எஸ்.ஏ.எஸ் நகர், ஜலந்தர் மற்றும் லூதியானா பகுதிகளில் படுக்கை வசதிகள் அதிகமாக உள்ளது என்றும் இந்த குழு அறிவித்துள்ளது.
எஸ்.பி.எஸ் நகரில் வென்டிலேட்டர்களை பெறுவதில் சிக்கல்கள் உள்ளன என்றும் ரூப்நகரில் போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தால் வென்டிலேட்டர்கள் முறையாக பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளது.
பாட்டியாலா, எஸ்.எ.எஸ் நகர் மற்றும் ரூப்நகர் பகுதிகளில் மருத்துவப் பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பாட்டியாலா மற்றும் லூதியானா பகுதிகளில் தடம் அறிதல் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மனிதவள பற்றாக்குறை காரணமாக எஸ்.ஏ.எஸ் நகரில் தொடர்பு தடமறிதல் மற்றும் கண்காணிப்பு முயற்சிகள் தடைபட்டு வருகின்றன.
பாட்டியாலாவில் குறைந்த சோதனை விகிதங்கள் பதிவாகியுள்ளன. ரூப்நகரில் ஆர்டி-பி.சி.ஆர் சோதனை ஆய்வகம் இல்லை.
சத்தீஸ்கர்
பலோத், ராய்ப்பூர், துர்க் மற்றும் மகாசமுண்ட் மாவட்டங்களில் மருத்துவமனை படுக்கை வசதி அதிகம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மருத்துவமனை உள்கட்டமைப்பு மற்றும் பிற தேவைகளை அதிகரிக்க வேண்டும். ரெம்பெசிவிர் பற்றாக்குறை, கோர்பா மாவட்டத்தில் குறைந்த மூலக்கூறு எடை கொண்ட ஹெப்பரின் அவசர கவனம் தேவை.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் ஆக்ஸிஜன் வீணடிப்பு ஆகியவை ராய்ப்பூரில் புகாராக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டங்களிலும், மருத்துவமனை மட்டங்களிலும் ஆக்ஸிஜன் விநியோகம் குறித்த திட்டங்களை துவங்க வேண்டும்.
துர்க் மாவட்டத்தில் போதுமான ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லாததால் நோயாளிகள் மற்ற இடங்களுக்கு பரிந்துரை செய்யப்படுவது குறைந்துள்ளது. எந்தவிதமான தாமதமும் இல்லாமல் ஆம்புலன்ஸ் சேவைகள் உடனே வலுப்படுத்தப்பட வேண்டும்.
ராய்ப்பூர் மற்றும் ஜாஷ்ப்பூரில் கண்டெய்மெண்ட் ஸோன்களில் பெரிமீட்டர் கட்டுப்பாடுகள் குறைவாக உள்ளது. கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் மக்கள் நடமாட்டத்திற்கு எந்த தடையும் இல்லை என்று தெரிகிறது. மைக்ரோ கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளிட்ட கட்டுப்பாட்டு மண்டலங்கள் கண்டிப்பாக செயல்படுத்தப்பட வேண்டும்.
தொடர்பு கண்காணிப்பு முயற்சிகள் கோர்பாவில் வலுப்படுத்தப்பட வேண்டும். ராய்ப்பூரின் தனேலி கிராமத்தைச் சேர்ந்த குழுவினரால் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சோதனைக்கு எதிர்ப்பு (சுகாதாரப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் கூட) தெரிவிக்கப்பட்டன. இதை அவசர அடிப்படையில் கவனிக்க வேண்டும்.