Covid-19 News Update : தமிழகத்தில் சென்னையை தவிர மாநிலத்தின் மற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன. சென்னை மக்கள், பக்கத்து மாவட்டங்களுக்கு மதுவகைகளை வாங்க சென்றால் கைது செய்யப்படுவர் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 508 பேருக்கு கரோனா வைரஸ் உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4000-ஐ கடந்தது. சென்னையில் ஒரே நாளில் மேலும் 279 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி இருக்கிறது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2000-ஐ கடந்திருக்கிறது. இதன் காரணமாக, சமூக பரவல் அச்சம் மக்களை சூழ்ந்திருக்கிறது. தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே 16 மாவட்டங்களில் புதிய தொற்று கண்டறியப்படவில்லை.
ஜூன் மாதமும் ரேஷன் கடைகளில் விலையில்லா பொருட்களை வாங்கிக் கொள்ளலாம், என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசுக்கு ஒத்துழைப்பு தருமாறு, மக்களை அறிவுறுத்தி இருக்கிறார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. மின் கட்டணத்தை அபராதம் இல்லாமல், வரும் 22ம் தேதி வரை செலுத்திக் கொள்ளலாம், என தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது. சென்னையில் நாளை மதுபான கடைகள் திறக்கப்பட மாட்டாது, என தமிழக அரசு அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Coronavirus Live Updates : உலக அளவில், கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகள் அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று புதிதாக மேலும் 771 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்த எண்ணிக்கை 4,829 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்ற கட்டுப்பாடுகளோடு ஊரடங்கு அமலில் இருக்கும்போது, எதன் அடிப்படையில் மதுக்கடைகளைத் திறக்க அரசு முடிவு செய்கிறது? மது யாருடைய அத்தியாவசிய தேவை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்ற கட்டுப்பாடுகளோடு ஊரடங்கு அமலில் இருக்கும்போது, எதன் அடிப்படையில் மதுக்கடைகளைத் திறக்க அரசு முடிவு செய்கிறது? மது யாருடைய அத்தியாவசிய தேவை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுப்பானக் கடைகள் திறக்கப்பட்டால் நோய் பரவும் என்று அதனால், மதுக்கடைகளை திறக்க தடை விதிக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசின் விளக்கத்தை ஏற்று தமிழகத்தில் மதுக்கடைகளை நாளை திறக்க தடையில்லை என்று தீர்ப்பு அளித்துள்ளது.
டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்கப்படும் மது பாட்டிலின் விலை மே 7-ம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15% உயர்த்தியுள்ளது. இதனால், சாதாரண வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் விலையில் கூடுதலாக ரூ.10 உயர்த்தியுள்ளது.
தமிழக அரசு நடுத்தர, பிரீமியம் வகை 180 மி.லி. குவார்ட்டர் மதுபான பாட்டிலின் விலை 20 ரூபாய் கூடுதலாகவும் உயர்த்தப்படுகிறது - தமிழக அரசு அறிவிப்பு
எதன் அடிப்படையில் மதுக்கடைகளை திறப்பதற்கு அரசு முடிவு செய்கிறது?
மது யாருடைய அத்தியாவசிய தேவை?
அந்த வருமானத்தை நம்பி இருக்கும் அரசுக்கா? அல்லது தங்களது சாராய ஆலைகளின் விற்பனை குறைந்ததை குறித்த கவலையில் உள்ள ஆண்ட, ஆளும் கட்சிக்கா?
- கமல்ஹாசன் கேள்வி
"டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது" - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்
சமூக விலகல் பின்பற்றப்படும், பாதுகாப்பும் வழங்கப்படும். கொரோனா முடிய நாளாகும் என்பதால் மற்ற கடைகளை போல மதுக்கடைகளும் திறக்கப்படுகிறது - தமிழக அரசு
மே.17க்கு பிறகும் ஊரடங்கு நீடித்தால் மாநிலத்தின் பொருளாதாரம் முற்றிலுமாக அழிந்து விடும். ஊரடங்கு நீட்டிப்பில் மாநில முதலமைச்சர்களை கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும், இல்லையெனில் மாநில அரசு கேட்கும் நிதியையாவது மத்திய அரசு வழங்க வேண்டும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
சென்னை மாதவரம் பால் பண்ணையில் நாள்தோறும் வழக்கமாக 4 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படும். ஆனால் அங்கு பணியில் இருந்த ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் ஏராளமான ஊழியர்களின் வருகையும் பாதியாக குறைந்தது. இதனால் பால் உற்பத்தி செய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக உற்பத்தி செய்யப்படும் 4 லட்சம் லிட்டர் பால் தற்போது 2 லட்சம் லிட்டர் பாலாக குறைந்துள்ளது. மேலும் தேவைக்கு ஏற்ப திருச்சி, பாடாலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து சென்னைக்கு பால் வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாதவரம் பால் பண்ணையில் காண்ட்ராக்ட் மூலம் ஊழியர்கள் பணியமர்த்த பட்டுள்ளதாகவும் வழக்கம்போல் பால்பண்ணை எந்தவித தங்கு தடையின்றி இயங்கி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைனில் விற்க முடியுமா..?" என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. "மதுபானங்களை வீடுகளுக்கு நேரடியாக சென்று டெலிவரி செய்ய முடியுமா? மாற்று ஏற்பாடுகள் என்ன செய்யமுடியும் என்பது குறித்து மதியம் 2.30 மணிக்கு பதில் தர வேண்டும்" என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாரயணனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
கொரோனாவிற்கு மருந்து உள்ளதாக தவறான தகவல் வெளியிட்டதாக போலி சித்த மருத்துவர் தணிகாசலம் கைது செய்யப்பட்டுள்ளார். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அரசுக்கு எதிராக தகவல் வெளியிட்டதாக தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது கைது செய்யப்பட்டுள்ளார்.
கடைக்கு வரும் கூட்டத்தைப் பொறுத்து 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு தர வேண்டும். கடைக்கு அரை கி.மீ.க்கு முன்பாகவே மதுப்பிரியர்களின் வாகனங்களை நிறுத்தி விட்டு வரிசைப்படுத்த உத்தரவு. அதிக கூட்டம் கூடும் மதுக்கடைகளில், ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் கண்காணிக்க உத்தரவு. நாளை முதல் மதுபானக் கடைகள் தொடங்க உள்ள நிலையில், பாதுகாப்பு விவரங்கள் வெளியீடு. ஒவ்வொரு கடைக்கும் தலா 2 காவலர்கள், 2 ஊர்க்காவல் படையினர், 1 தன்னார்வலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவு. ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளியை உறுதி செய்ய வேண்டும்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் சிக்கிய தமிழர்களில் 45 பேர்நேற்று 2 பேருந்துகளில் சென்னைக்கு புறப்பட்டனர். ஞாயிற்றுக் கிழமை கிளம்பிய இவர்கள் இன்று தமிழகம் வந்தடைவார்கள். தமிழக எல்லையில் இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
திருவண்ணாமலையில் முதல் முறையாக கொரோனா பாதிப்புக்கு ஒருவர் பலியாகியிருக்கிறார். ஆரணியைச் சேர்ந்த 55 வயது பெண் திருவண்ணாமலை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவண்ணாமலையில் கொரோனாவால் இதுவரை 25 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,711-லிருந்து 49,391-ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை, 13,161-லிருந்து 14,183-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,583-லிருந்து 1,694-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights