Covid-19 Cases Live Updates : கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் நான்காம் கட்ட பொது முடக்கம் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நான்காம் கட்ட பொது முடக்கத்தில் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. நோய் கட்டுப்பாட்டு அளவைப் பொறுத்து பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் எண்ணிக்கை புதன்கிமை ஒரே நாளில் 743 பேருக்கு கண்டறியப்பட்டது. இதன் மூலம் கொரோனா தொற்று எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் புதன்கிழமை மட்டும் குணமடைந்த 987 பேர் டிஸ்சார்ஜ் செர்ய்யப்பட்டனர்.
பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 1-ம் தேதி முதல் வழக்கமான கால அட்டவணைப்படி ஏசி அல்லாத ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார். அதன்படி ஏசி வசதி இல்லாத, தேர்வு செய்யப்பட்ட 200 ரயில்களை நாடு முழுவதும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 1 தேதி முதல் இயக்கப்படவுள்ள 200 ரயில்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த 200 ரயில்களுக்கான இணையதள டிக்கெட் முன்பதிவு மே 21 முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்திற்கு ரெயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை.
Corona latest news updates : வங்கக் கடலில் உருவான ‘ஆம்பன் புயல்’ புதன்கிழமை கரையைக் கடந்தது. மணிக்கு 190 கி.மீ. வேகம் வரை பலத்த காற்று வீசியதுடன், கன மழை பெய்ததால் மேற்கு வங்கம், ஒடிஸா மாநிலங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. மேற்கு வங்கத்தில் புயலால் மரம் வேரோடு சாய்ந்ததில் 3 பலியானார்கள்.
Web Title:Corona updates live india lockdown 4 o extension covid 19 news
ரயில் நிலையங்களில் உள்ள கவுன்டர்களில், நாளை முதல் டிக்கெட் விற்பனை துவங்கும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. டிக்கெட் கவுன்டர்களில் தனிநபர் இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பேரிடரை கடமை, பொறுப்பை பரவலாக்கி, பகிர்ந்தளித்து எதிர்கொள்வதே சிறந்தது. சிறப்பு அதிகாரிகளுடன் அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு தேர்வு மையம் அமைக்கப்படும். கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு வீடுகளுக்கே சென்று ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
வி.பி. துரைசாமி வகித்து வந்த திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, அந்த பதவிக்கு அந்தியூர் செல்வராஜ் நியமனம் செய்யப்ப்டடுள்ளார். வி.பி. துரைராஜ், தமிழக பாஜக தலைவர் முருகனை சந்தித்த நிலையில் இந்த நடவடிக்கை, கட்சி மேலிடத்தால் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 8795 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்கத் தடை விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செலவீனங்களை குறைக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உம்பன் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2.5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
உம்பன் புயலுக்கு, மேற்குவங்க மாநிலத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கோல்கட்டாவில் மட்டும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
#AatmanirbharBharat தொகுப்பில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, இனிமேல் ரூ .200 கோடி வரை அரசு கொள்முதல் செய்வதில் உலகளாவிய டெண்டர்கள் அனுமதிக்கப்படாது என்பதை உறுதி செய்யும் வகையில் 2017 பொது நிதி விதிகள் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.
உள்நாட்டு விமான பயண கட்டணம் குறைந்தபட்சம் 3500 ரூபாய் முதல் அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம். மூன்றில் ஒரு பங்கு விமானம் மெட்ரோ நகரங்களுக்கு இயக்கப்படும் என்று உள்நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
பயணிகள் முககவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும். விமானத்திற்குள் உணவுப் பொருட்கள் வழங்கப்படாது. உதான் திட்டத்தின் கீழ் 900 டன் பொருட்கள் கொண்டு சேர்க்கப் பட்டுள்ளன - ஹர்தீப் சிங் பூரி
முன்னதாக, மே 25 முதல் மீண்டும் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.முதல் கட்டமாக மூன்றில் ஒரு பங்கு விமானங்கள் மட்டுமே இயக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது
VandeBharatMission இன் கீழ், வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 20,000 க்கும் மேற்பட்ட இனியர்கள் பத்திரமாக தாயகம் திரும்பியுள்ளனர். இந்த திட்டத்தில் தனியார் விமானங்களும் இணைந்து கொள்ளலாம் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் கருணாஸின் தனி பாதுகாப்பு காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சின்னத்துறையினர் சுற்றுச்சுவர் உள்ள வீடுகளுக்கு உள்ளே அல்லது அரங்ககிற்குள் மட்டும் (Indoor shooting only) படப்பிடிப்பு நடத்திட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது
மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று மாலை 3 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.
ஏஜென்ட்கள் ரயில் டிக்கெட்டுகளில் புக்கிங் செய்ய சாப்ட்வேர்கள் உபயோகித்தால் கடும் நடவடிக்கை. ஏஜென்ட்கள் குறித்து புகார் செய்வதற்கு 138 என்ற எண்ணை பொதுமக்கள் அழைக்கலாம் என்று ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.
விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருத்தணி, திருவள்ளூர் ,வேலூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் சென்னை தலைமைச் செயலகம், எழிலகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசுப் பணியாளர்கள் சென்று வர ஏதுவாக 49 பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்: பொதுசேவை மையங்களில் நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். நாடு முழுவதும் சுமார் சுமார் 1.7 லட்சம் பொது சேவை மையங்களில் நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. அடுத்த 2 அல்லது 3 நாட்களில் டிக்கெட் கவுன்டர்களிலும் முன்பதிவு தொடங்கும். கூடுதலாக ரயில்கள் இயக்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
மதுரை மகபூப்பாளையத்தில் அனுமதி இன்றி தொழுகை நடத்திய 550 ஆண்கள் மற்றும் 50 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த 3 நாட்களுக்கு வட தமிழகத்தில் அனல் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வட தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாக கூடும் என்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்பதால், தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடற்கரை பகுதி , மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
டிவி நிகழ்ச்சி படப்பிடிப்புகளை நிபந்தனைகளுடன் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தடை செய்யப்பட்ட பகுதி மற்றும் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது. பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு விமான சேவைகளுக்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பயணிகளும், அதிகாரிகளும் விமான நிலையம் வர போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும். விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் சமூக இடைவெளியை உறுதி செய்ய வேண்டும். பயணிகள் பயண நேரத்திற்கு 2 மணி நேரம் முன்பாகவே விமான நிலையம் வந்தடைய வேண்டும். ஆரோக்கிய சேது பயன்பாடு 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் 39,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; குணமடைந்தோர் எண்ணிக்கை 10,318ஆக உயர்வு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,390ஆக உயர்ந்துள்ளது.
சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,538 ஆக அதிகரித்துள்ளது. அதே போல, கோடம்பாக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,192 ஆக உயர்ந்துள்ளது. திரு.வி.க நகரில் பாதிப்பு எண்ணிக்கை 976 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தயங்க வேண்டாம் உடனடியாக 1075 என்ற் ஹெல்ப்லைன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். பொறுப்புள்ள குடிமகனாக இருங்கள். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உதவுங்கள் என்று மத்திய சுகாதாரத்துறை ஹெல்ப் லைன் எண் அறிவித்துள்ளது.
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்: அந்தந்த பள்ளிகளிலேயே 10 மற்றும் 12ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு நடைபெறும். ஜூலை மாத இறுதியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்று தகவல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளில் இன்று, பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் அஞ்சலி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 45,299 பேர் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்த 63,624 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனா பாதிப்பால், 3,435 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவை - ரேவா (ம.பி.) ஷ்ரமி சிறப்பு ரயில் நேற்று இரவு 8:30 மணிக்கு 1076 பயணிகளுடன் புறப்பட்டது. தொடர்ந்து 388 பயணிகள் சேலத்தில் ஏறினர். பயணிகளுக்கு தெர்மல் ஸ்கிரீனிங் மூலம் பரிசோதிக்கப்பட்டு சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,609 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 132 பேர் உயிரிழந்துள்ளனர்.