முன் பணம் செலுத்தவில்லை, எனவே இழப்பு இல்லை: ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ கொள்முதல் பற்றி மத்திய அரசு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 28,000-ஐ கடந்தது.

By: Apr 28, 2020, 7:28:56 AM

Covid-19 Cases Update : சீனாவிடமிருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கிட்டுக்கு முன் பணம் செலுத்தவில்லை என்றும், அதனால் இழப்பு இல்லை எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் குறித்த பாதிப்புகளைப் பற்றி அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்ஃபரென்ஸிங் மூலம் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் நரேந்திர மோடி. நோய் பரவல் அதிகமாக இருப்பதால் நாடு முழுவதும், முடக்கம் நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின், எண்ணிக்கை 27 ஆயிரத்தை நெருங்குகிறது. இதில் 5914 பேர் குணமாகி இருப்பதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 64 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். மொத்தம் 1885 பேர் தமிழகத்தில் பாதிப்படைந்து உள்ளார்கள். இதில் சென்னையை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 500 கடந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 60 பேர் குணமாகி நேற்று வீடு திரும்பினார். கொரோனாவை குணப்படுத்த ஒரு வாரத்தில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்படும் என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Live Blog
Corona latest news updates : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
23:04 (IST)27 Apr 2020
டெல்லி கொரோனா நிலவரம்!

டெல்லியில் இன்று 190 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியானது..

அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,108 ஆக உயர்ந்தது. 54 பேர் உயிரிழந்துள்ளனர்.. 877 பேர் குணமடைந்துள்ளனர்..

23:03 (IST)27 Apr 2020
பஞ்சாபில் ஒருவர் பலி..

பஞ்சாப் மாநிலத்தில் இன்று 63 வயதுடைய கொரோனா பாதிப்பினால் உயிரிழப்பு...

அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 330 ஆக உயர்ந்தது. 19 பேர் உயிரிழந்துள்ளனர்..

22:13 (IST)27 Apr 2020
கேரளாவில் 13 பேருக்கு கொரோனா

கேரளாவில் புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது;

அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 481 ஆக அதிகரிப்பு!

22:12 (IST)27 Apr 2020
24 மணி நேரத்தில் 522 பேருக்கு கொரோனா

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 522 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; 27 பேர் உயிரிழப்பு.

அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,590 ஆக அதிகரிப்பு; மொத்த பலி எண்ணிக்கை 369 ஆக உயர்வு.

மகாராஷ்டிராவில் இதுவரை 1,282 பேர் குணமடைந்துள்ளனர்

21:48 (IST)27 Apr 2020
ரேபிட் டெஸ்ட் கிட் விலை சர்ச்சை; உண்மை என்ன?- மத்திய அரசு விளக்கம்

“முதலில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), தனது கொள்முதல் முடிவுகளை எந்த அடிப்படையில் எடுக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது முக்கியமாகும். பரிசோதனை என்பது கோவிட்-19க்கு எதிரான போரில் மிக முக்கியமான ஆயுதங்களில் ஒன்றாகும். இந்தப் பரிசோதனைக்குத் தேவையான அனைத்தையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் செய்து வருகிறது.

இந்தக் கொள்முதலுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எந்தத் தொகையும் செலுத்தவில்லை என்பது வலியுறுத்திக் கூறப்பட வேண்டியதாகும். விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டதால், (கொள்முதலுக்கு முற்றிலும் முன்பணம் எதுவும் கொடுக்காமல்), மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் கூட இழப்பு இல்லை”.

இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

21:12 (IST)27 Apr 2020
ஊரடங்கைத் தளர்த்துவது ஆபத்தானது: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, அலுவலகப் பணியில் இணைந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஊரடங்கைத் தற்போது தளர்த்துவது ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “கடந்த ஆறு வாரங்களில் நாம் அனைவரும் காட்டிய அதே ஒற்றுமையையும் உறுதியையும் இனி வரும் நாட்களில் காட்ட முடிந்தால், நாங்கள் கொரோனா வை வெல்வோம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. எனினும், உங்கள் பொறுமையின்மையை கட்டுப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இந்த மோதலின் முதல் கட்ட இறுதியில் இருக்கிறோம். எல்லா துன்பங்களுக்கு இடையேயும் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம்” என்றார்.

மேலும், இரண்டாவது கட்டத்தில் லாக் டவுனைத் தளர்த்துவது ஆபத்தானது. இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். இல்லையேல் தொற்று மற்றும் உயிரிழப்புடன் பெரும் பொருளாதார சேதமும் ஏற்படும் என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.

21:02 (IST)27 Apr 2020
வீடியோ காலில் தாயின் இறுதிச்சடங்கு

தாயின் இறுதிச்சடங்கை வீடியோ காலில் பார்த்து அழுத ராணுவ வீரர்

20:53 (IST)27 Apr 2020
எண்ணிக்கை மொத்தமாக 28,380 ஆக உயர்வு

24 மணி நேரத்தில் 60 பேர் பலி!

* இந்தியாவில் கொரோனா பாதிப்பு - கடந்த 24 மணிநேர நிலவரம்:

புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் - 1,463
உயிரிழப்பு - 60

* கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 28,380 ஆக உயர்வு

உயிரிழந்தவர்கள் - 886
குணமடைந்தவர்கள் - 6,361

20:52 (IST)27 Apr 2020
வளர்ச்சி விகிதம் 1.9 சதவிகிதம்...

கொரோனா எதிரொலியாக வரும் நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 1.9 சதவிகிதமாக குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

20:14 (IST)27 Apr 2020
தமிழக அரசுக்கு எந்த செலவினமும் ஏற்படவில்லை

"ரேபிட் கிட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு எந்த செலவினமும் ஏற்படவில்லை; மற்ற மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகள் இதனை மலிவான அரசியலாக்கவில்லை" -மு.க.ஸ்டாலினுக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்

ரேபிட் கிட்களை, ஆந்திர அரசு 730 ரூபாய்க்கும் கேரள அரசு 699 ரூபாய்க்கும் வாங்கியதை தமிழக அரசு 600 ரூபாய்க்குத்தான் வாங்கியது. கொரோனா நோயில் இருந்து குணமடையும் நபர்களின் எண்ணிக்கை நாட்டிலேயே மிக அதிகம் தமிழகத்தில்தான்- அமைச்சர் விஜயபாஸ்கர்

19:58 (IST)27 Apr 2020
24,000 ரேபிட் கிட்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன

தமிழக அரசு பெற்றுள்ள 24,000 ரேபிட் கிட்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன; எஞ்சியுள்ள அனைத்து கொள்முதல் ஆர்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

19:36 (IST)27 Apr 2020
மாவட்ட வாரியான நிலவரம்..

தமிழகத்தின் எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று?

18:18 (IST)27 Apr 2020
தமிழகத்தில் மேலும் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு; மொத்த எண்ணிக்கை 1937 ஆக உயர்வு

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மேலும் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1937 ஆக அதிகரித்துள்ளது. அதிகப்பட்சமாக சென்னையில் 570 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1101 பேர் குணமடைந்துள்ளனர்.” என்று தெரிவித்துள்ளது.

17:15 (IST)27 Apr 2020
வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை 3 மாதத்திற்கு குறைத்து தமிழக அரசு அரசாணை

வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை 3 மாதத்திற்கு 7.9%-லிருந்து 7.1%-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு குறைத்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

16:12 (IST)27 Apr 2020
2 சீன நிறுவனங்களின் ரேபிட் டெஸ்ட் கருவிகளை திருப்பி அனுப்ப ஐ.சி.எம்.ஆர். மாநிலங்களுக்கு கடிதம்

ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளைக் கொண்டு பரிசோதனை செய்வதை நிறுத்திவைக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் மாநிலங்களுக்கு அறிவித்த நிலையில், இன்று guangzhou wondfo biotech, zhuhai livzon ஆகிய இரண்டு சீன நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவியை பயன்படுத்த வேண்டாம். அவற்றை மாநிலங்கள் திரும்ப அனுப்ப வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது. கொரோனா பரிசோதனைக்கு ஆர்.டி- பி.சி.ஆர் கருவிகளே உகந்தவை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

15:28 (IST)27 Apr 2020
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ரத்து தமிழக அரசாணை வெளியீடு

தமிழக அரசு 2021 ஜூலை மாதம் வரை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நிறுத்திவைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

15:18 (IST)27 Apr 2020
பிசிஆர் கருவிகளை அதிக அளவில் தமிழகத்திற்கு வழங்க பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

கொரோனா வைரஸ் இருப்பதைக் கண்டறிய பிசிஆர் பரிசோதனை கருவிகளை அதிக அளவில் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் ஏன பிரதமர் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல் வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

14:42 (IST)27 Apr 2020
ரூ.245 மதிப்புள்ள ரேபிட் டெஸ்ட் கருவியை ரூ.600-க்கு கொள்முதல் செய்ய முதல்வர் அனுமதித்தது ஏன்? - ஸ்டாலின் கேள்வி

"ICMR அங்கீகாரம் பெறாத இடைத்தரகு நிறுவனத்திடம், ரூ.245 மதிப்புள்ள டெஸ்ட் கிட் கருவிகளை ரூ. 600 ரூபாய் கொடுத்து கொள்முதல் ஆர்டர் வழங்க முதலமைச்சர் எப்படி அனுமதித்தார்?” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

14:23 (IST)27 Apr 2020
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் கிடையாது - தமிழக அரசு அரசாணை

அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆண்டுக்கு 15 நாள், 2 ஆண்டுகளுக்கு 30 நாள் ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்கப்படுவது வழக்கம். ஆண்டுதோறும் அரசு ஊழியர்கள் எடுக்காத விடுமுறையை எழுதிக்கொடுத்து அதற்கு ஊதியத்தை பெறுவார்கள். இந்த நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் கிடையாது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

14:18 (IST)27 Apr 2020
தமிழக காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசரை நலம் விசாரித்த துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு

தமிழக காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர், துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு போனில் தொடர்புகொண்டு தன்னை பற்றியும் குடும்பத்தினர் மற்றும் தொகுதி மக்களைப் பற்றியும் நலம் விசாரித்ததாக ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

14:06 (IST)27 Apr 2020
ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? மே 3-க்கு பிறகே அறிவிக்கப்படும் என பிரதமர் கூறியதாக தகவல்

ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்வு கொடுக்கலாமா என்பது பற்றி மே 3க்கு பின் அறிவிக்கப்படும் என பிரதமர் கூறியதாக தகவல்

கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்கவும், பாதிப்பு அல்லாத பகுதிகளில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்

12:57 (IST)27 Apr 2020
மதுக்கடைகள் முடிந்த கதையாகட்டும் - ராமதாஸ் ட்வீட்

"தமிழகத்தில் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் நாளில் இருந்து, முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும்" என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

12:40 (IST)27 Apr 2020
சிறைச்சாலையாக மாறிய அரசு கல்லூரி

கொரோனா அச்சுறுத்தலால் புதுச்சேரி காலாப்பட்டு சிறைச்சாலை தற்காலிகமாக அரசு கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தற்காலிக சிறையாக மாற்றப்படும் அரசு கல்லூரியில், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

12:04 (IST)27 Apr 2020
கேளம்பாக்கத்திற்கு மாறும் கோயம்பேடு மார்க்கெட்?

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை கேளம்பாக்கம் பகுதிக்கு இடமாற்றம் செய்வது குறித்து நாளை காலை 10 மணிக்கு மீண்டும் ஆலோசனை நடைபெறவிருக்கிறது. இன்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வியாபாரிகளுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை. 

11:46 (IST)27 Apr 2020
சென்னையில் கொரோனா விபரம்

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் குறித்த மண்டல வாரியான விபரம்

11:08 (IST)27 Apr 2020
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அலைபேசி உரையாடல்

கடந்த மார்ச் 17ஆம் நாள் துபாயில் மாரடைப்பால் இயற்கை எய்திய, விருதுநகர் மாவட்டம் மகராஜபுரம் துரைராஜ் உடலை இந்தியா கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள தடை குறித்து தலைவர் வைகோ அவர்கள் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் உடன் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அதன் பிறகு அமைச்சர் ஜெய்சங்கர், வைகோ அவர்களை இரண்டு முறை தொடர்பு கொண்டு பேசினார்.
துரைராஜ் உடலை இந்தியா கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மே ஒன்றாம் நாள் அவர் உடல் வந்து சேரும் என உறுதி அளித்து இருக்கின்றார்

அதே போல, அபுதாபியில் இருந்து தில்லிக்கு வந்த மூன்று உடல்களைத் திருப்பி அனுப்பியது குறித்து வைகோ அமைச்சரிடம் தெரிவித்தார். இத்தகைய தடைகளை நீக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

10:45 (IST)27 Apr 2020
3.33 கோடி அபராதம்

ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் இதுவரை 3,16,404 வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 3,34,549 பேர் கைது செய்யப்பட்டு,  2,84,861 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 3.33 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 3

10:28 (IST)27 Apr 2020
பிரதமருடனான ஆலோசனையில் விஜயபாஸ்கர்

மே 3ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்தி வருகிறார். பிரதமருடனான ஆலோசனையில் தமிழக முதல்வர் பழனிசாமி, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.. 

10:03 (IST)27 Apr 2020
அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் ஆலோசனை

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 3-ம் தேதிக்குப் பிறகு, ஊரடங்கை நீட்டிப்பதாக சில மாநிலங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில் இன்று முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தும் பிரதமர், ஊரடங்கு குறித்து முக்கிய முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

09:38 (IST)27 Apr 2020
திருவாரூரில் 6 பேர் டிஸ்சார்ஜ்

திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 6 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 6 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்

09:21 (IST)27 Apr 2020
'மகாராஷ்டிராவில் 8,068 பேருக்கு கொரோனா

மகாராஷ்டிராவில் 8,068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 1,076 பேர் குணமடைந்துள்ள நிலையில், 342 பேர் உயிரிழந்துள்ளனர்

09:09 (IST)27 Apr 2020
இந்தியாவில் கொரோனா நிலவரம்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,917 லிருந்து 27,892 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 826 லிருந்து 872 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 5,914 லிருந்து 6,185 ஆக உயர்ந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Coronavirus : தீவிரமாகப் பரிசோதனை செய்வதுதான் கொரோனா வைரஸைத் தோற்கடிக்கும் ஆயுதம். இப்போது இந்தியாவில் நாள்தோறும் 40 ஆயிரம் பரிசோதனைகள் செயயப்படுகின்றன. இதை ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும். மக்களுக்கு அதிகமாக கரோனா பரிசோதனை நடத்துவதுதான் வைரஸைத் தடுக்கும் வழி என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். நாள்தோறும் நாம் இப்போது செய்யும் 40 ஆயிரம் பரிசோதனைகளை ஒரு லட்சமாக அதிகரிக்க வேண்டும். பரிசோதனைக் கருவிகள் போதுமான அளவில் இருப்பு இருக்கிறது. பிரதமர் மோடி வேகமாகச் செயல்பட்டு , தடைகளைக் களைந்து பரிசோதனைகளை வேகப்படுத்த வேண்டும்" என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Web Title:Corona updates live india lockdown covid 19 pm modi meeting

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
JUST NOW
X