Advertisment

தமிழகத்தில் ஊரடங்கு கடுமை ஆகிறது: சேலத்தில் 5 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே காய்கறி வாங்க அனுமதி

அத்தியாவசிய பொருட்களை கடத்தினால், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என மத்திய அரசு எச்சரிக்கை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழகத்தில் ஊரடங்கு கடுமை ஆகிறது: சேலத்தில் 5 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே காய்கறி வாங்க அனுமதி

Covid-19 Cases Update: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்படுகிறது. அதன்படி மக்கள் வெளியில் நடமாடுவதை தடுக்க, ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் சேலத்தில் 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே காய்கறி வாங்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்புக்கு வேலூரில் 45 வயது நபர் உயிரிழந்ததாக அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆகையால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே இதுவரை 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்துகிறது. பல்வேறு மாநில அரசுகள், வல்லுணர்களின் கோரிக்கையை ஏற்க திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisment

குஜராத்தில் 14 மாத குழந்தை கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளது. அதோடு இந்தியாவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 124-ஆக உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களை கடத்தினால், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என மத்திய அரசு எச்சரிக்கை. கொரோனா தடுப்பு நிவாரணத்திற்கு தமிழக மக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டுமென, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் ஒரே நாளில் 1900-க்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் உயிரிழந்தனர். நியூயார்க்கில் இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்தவர்களை விட, கொரோனா உயிரிழப்பு அதிகமானது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.

Live Blog

Coronavirus Latest Updates : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.














Highlights

    21:43 (IST)08 Apr 2020

    டெல்லி, மும்பையில் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என அறிவிப்பு

    மும்பையில் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் பொது இடங்களில் மக்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

    21:24 (IST)08 Apr 2020

    சேலத்தில் நாளை முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே காய்கறி மளிகை வாங்க அனுமதி

    சேலத்தில் நாளை முதல் 144 தடை உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இரு சக்கரவாகனங்களை வண்ணங்கள் மூலம் அடையாளப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்

    சேலத்தில் நாளைமுதல் 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே காய்கறி, மளிகைக் கடைகளில் வாங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    20:47 (IST)08 Apr 2020

    ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஏழைகளின் வாழ்வாதாரம் முடங்கிவிட்டது - ப.சிதம்பரம்

    முன்னாள் மத்திய அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஏழைகளின் வாழ்வாதாரம் முடங்கிவிட்டது. அவர்களுக்கு நாள் ஊதியமோ வருமானமோ கிடையாது. அரசின் முதல் கடமை ஏழைக் குடும்பங்களின் கைகளில் பணத்தைச் சேர்ப்பது. இதைச் செய்ய முடியும், செய்ய வேண்டும். எத்தனை முறை இதனை நாங்கள் வலியுறுத்தினாலும் அரசு எங்கள் கருத்தை ஏற்க மறுக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

    20:42 (IST)08 Apr 2020

    நடமாடும் மளிகைக் கடைக்கு அனுமதி சீட்டு பெறலாம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

    சென்னையில் நடமாடும் மளிகைக்கடை, காய்கறிகடை நடத்த ஆர்வமுள்ளோர்கள் நேரில் அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம் - சென்னை மாநகராட்சி

    144 தடை உத்தரவு திரும்பப் பெறும்வரை இந்த அனுமதிச் சீட்டு செல்லும் - சென்னை மாநகராட்சி

    19:11 (IST)08 Apr 2020

    விழுப்புரத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர் மாயம் - போலீசில் புகார்

    விழுப்புரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட இளைஞர் காணவில்லை என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் இருந்து நேர்காணலுக்காக வந்த இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு, விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் காணவில்லை என்று மருத்துவர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    19:05 (IST)08 Apr 2020

    கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

    கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    கொரோனா பரிசோதனையை இலவசமாக மேற்கொள்ள உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு

    அரசு மற்றும் தனியா பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனையை கட்டணமின்றி செய்ய வேண்டும் - உச்ச நீதிமன்றம்

    18:38 (IST)08 Apr 2020

    ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமானவரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு

    வருமானவரியில் திருப்பி அளிக்க வேண்டிய தொகை ரூ.5 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் அதைஹ் உடனடியாக அளிக்க மத்திய நிதிஅமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    பிடித்தம் செய்யப்பட்ட சுமார் ரூ.18 ஆயிரம் கோடியை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு

    மத்திய அரசின் இந்த உத்தரவால் வருமானவரி செலுத்தும் 14 லட்சம் பேர், 1 லட்சம் நிறுவனங்கள் பயனடைவார்கள்

    18:23 (IST)08 Apr 2020

    தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு; மொத்த எண்ணிக்கை 738 ஆனது - சுகாதாரத்துறை செயலர்

    சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்:

    தமிழகத்தில் இன்று மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 48 பேர்களில் 42 பேர் ஒரே தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்கள்.
    வெளிநாட்டினர் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா பாதிப்பால் தழிகத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர் - பீலா ராஜேஷ்

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21 பேர் குணமடைந்துள்ளனர் - சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்

    தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் 60,739 பேர் உள்ளனர்.

    கொரோனா வார்டுகளில் 230 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

    32,075 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு நிறைவடைந்துள்ளது.

    தமிழகத்தில் இதுவரை 6,095 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    17:56 (IST)08 Apr 2020

    தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு; மொத்த என்ணிக்கை 738 ஆனது - சுகாதாரத்துறை செயலர்

    சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்: தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் முலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 738 ஆனது என்று தெரிவித்துள்ளார்.

    17:50 (IST)08 Apr 2020

    வேலூர் மாவட்டத்தில் 3 நாட்கள் மட்டுமே மளிகை கடைகள் செயல்பட வேண்டும் - ஆட்சியர் உத்தரவு

    வேலூர் மாவட்டத்தில் வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன் ஆகிய 3 நாட்கள் மட்டுமே மளிகை கடைகள் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    17:28 (IST)08 Apr 2020

    சிக்கலில் மாட்டிவிட வேண்டாம் - பிரதமர் மோடி டுவிட்

    பிரதமர் மோடியை கௌரவிக்க அனைவரும் 5 நிமிடங்கள் எழுது நில்லுங்கள் என்று போலி தகவல் பரவியதால், அதனை மறுத்து பிரதமர் மோடி டுவிட் செய்துள்ளார். அதில், “தன்னையாரும் சிக்கலி மாட்டிவிட வேண்டாம். என்னை கௌரவிக்க விரும்பினால் ஒரு ஏழை குடும்பத்திற்கு உதவுவதைப் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். ஒரு ஏழைக் குடும்பத்துக்கு உதவுவதைவிட எனக்கு சிறந்த மரியாதையை அளிக்க முடியாது.” என்று பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    16:57 (IST)08 Apr 2020

    அனைத்து மாநில முதல்வர்களுடன் ஏப்ரல் 11-ம் தேதி காணொலியில் ஆலோசனை நடத்த உள்ள பிரதமர் மோடி

    பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஏப்ரல் 11-ம் தேதி காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்லது. 11-ம் தேதி ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இன்று காணொலியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தன. அப்போது, பிரதமர் மோடி, நாட்டில் தற்போது இருக்கும் சூழல் சமூக அவசர நிலையைப் போன்றது. ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டியது முக்கியம் என அரசு செயல்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது என்று கூறினார்.

    16:28 (IST)08 Apr 2020

    காய்கறிகளை முன்பதிவு செய்யும் தொலைபேசி எண் வெளியீடு

    சென்னை கோயம்பேட்டில் இருந்து குடியிருப்பு பகுதிகளில் காய்கறிகளை பெற - 73050 50541,73050 50542,73050 50543, 73050 50544 என்ற எண்களில் மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    14:43 (IST)08 Apr 2020

    தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கீடு ஏன்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

    பேரிடர் மேலாண்மை தடுப்புத் திட்டத்தின் கீழ்,கொரோனா பாதிப்பையடைந்த மாநிலங்களுக்கு. ரூ.11,092 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது  இதில், உத்திர பிரேதேசம், ஓடிஸா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் , கேரளா, தமிழ்நாடு போன்ற தென் மாவட்டங்களுக்கு  மிகவும் கம்மியான நிதியே ஒதுக்கப்பட்டன.       

    இந்நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கீடு ஏன் ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும், இந்த கேள்விக்கான பதிலை மத்திய அரசு சமர்பிக்க சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.       
     

    14:06 (IST)08 Apr 2020

    வீட்டில் தங்குவதைத் தவிர வேறு வழியில்லை - உத்தவ் தாக்கரே

    வீட்டில் தங்கும்போது மக்கள் பல்வேறு வகையான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். மக்களுக்கு சலிப்பு  ஏற்படுவது குறித்து நான் வருந்துகிறேன். ஆனால், கோவிட் -19ஐ வெல்ல வீட்டில் தங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

    13:49 (IST)08 Apr 2020

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

    ”விலையேற்றத்தைத் தடுத்து, உரிய நிவாரணம் வழங்கி மக்கள் உயிரைக் காத்திடுக. அத்தியாவசியப் பொருள்களின் தடையில்லாத போக்குவரத்தை உறுதி செய்து, விலையேற்றத்தையும் பதுக்கலையும் கட்டுப்படுத்த வேண்டும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

    13:27 (IST)08 Apr 2020

    ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தைக் கேட்டு பிரேசில் போட்ட அப்ளிகேஷன்

    அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்து லக்ஷ்மன் உயிரை காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களை காக்க வேண்டுமென, ராமாயணத்தை மேற்கோள்காட்டி பிரேசில் அதிபர் ஜேர் போல்செனாரோ பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்

    12:50 (IST)08 Apr 2020

    12 குழுக்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை

    தமிழகத்தில் கொரோனாவின் நிலை, தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.  கொரோனாவை தடுக்க அமைக்கப்பட்ட 12 குழுக்களுடன் நாளை காலை 11 மணிக்கு அவர் ஆலோசனை நடத்துகிறார். 

    12:24 (IST)08 Apr 2020

    அத்தியாவசிய பொருட்கள் சென்னை வந்தடைந்தன

    டெல்லியிலிருந்து அத்தியாவசிய மருந்து பொருட்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் விமானங்கள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானத்தில் சரக்குகள் அனுப்பும் விதமாக மாற்றி சென்னைக்கு மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. சென்னை வந்த மருந்து பொருட்கள் மாநிலம் முழுவதும் தேவைக்கேற்ப அனுப்பி வைக்கப்பட உள்ளன.

    12:07 (IST)08 Apr 2020

    இந்தியாவில் பிங்க் மூன்

    நேற்று இரவு முழு உலகமும் சூப்பர் பிங்க் நிலாவை கண்டது. இந்தியாவில் இன்று ஏப்ரல் 8, காலை 8 மணியளவில் இது தென்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்காக 21 நாட்கள் லாக் டவுனில் இந்தியா இருப்பதால், மக்கள் வீட்டில் இருக்கிறார்கள். பால்கனி மற்றும் மாடியில் நின்று இந்த பிங்க் மூனைப் பார்த்தார்கள். 

    11:54 (IST)08 Apr 2020

    மத்திய அரசு அறிவுறுத்தல்

    அத்தியாவசிய பொருட்கள் போதிய அளவு இருப்பதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

    11:32 (IST)08 Apr 2020

    நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். காணொலி மூலம் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

    11:09 (IST)08 Apr 2020

    இந்தியாவில் கொரோனா தொற்று

    கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 773 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் 35 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    10:43 (IST)08 Apr 2020

    மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய ஸ்டாலின்

    10:36 (IST)08 Apr 2020

    சைதாப்பேட்டையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

    சென்னை சைதாப்பேட்டையில் மக்களுக்கு அத்தியாவசியப்பொருட்கள் கிடைக்கிறதா என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அப்போது வெளியே வந்தால் சமூகவிலகலை கட்டாயம் கடைபிடிக்கும்படி மக்களை அறிவுறுத்தினார்

    10:06 (IST)08 Apr 2020

    5000-ஐ தாண்டிய கொரோனா எண்ணிக்கை

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது. அதன்படி இந்தியாவில் மொத்தம் 5,194 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 1,018 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 149-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    09:52 (IST)08 Apr 2020

    முஸ்லீம் தலைவர்களின் ஷாப்-இ-பாரத்

    முஸ்லீம் தலைவர்கள் ஷாப்-இ-பராத்தில் சமூக விலகலுக்கு அழைப்பு விடுக்கின்றனர். கடந்த மாதம் டெல்லியில் நடந்த தப்லிகி ஜமாஅத் கூட்டம்  கோவிட் -19-க்கு ஹாட்ஸ்பாட்டாக அமைந்த நிலையில், பல முஸ்லீம் தலைவர்கள், முஸ்லிம் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், ஏப்ரல் 8- 9 தேதிகளில் சமூக விலகல் குறித்த விழிப்புனர்வை முன்னெடுக்கிறார்கள். 

    09:47 (IST)08 Apr 2020

    மனோரமாவின் மகன் மருத்துவமனையில் அனுமதி

    பழம்பெரும் நடிகையான மனோரமாவின் மகன் பூபதி உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மது கிடைக்காததால் போதைக்காக, தூக்க மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டதாக தகவல். 

    09:45 (IST)08 Apr 2020

    காவல்துறை தகவல்

    தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1,03,833 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றிய 1,13,117 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 87,577 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.32,83,844 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

    09:44 (IST)08 Apr 2020

    கொரோனா பரப்பிய 3 பேர் கைது

    சென்னை பெரியமேட்டில் கொரோனாவை பரப்பியதாக வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். பெரியமேட்டில் ரகசியமாக தங்கியிருந்த 3 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

    09:17 (IST)08 Apr 2020

    உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள்

    இத்தாலி: 17,127

    ஸ்பெயின்: 13,912

    யுஎஸ்: 12,550

    பிரான்ஸ்: 10,328

    யுகே: 6,159

    ஈரான்: 3,872

    சீனா: 3,331

    நெதர்லாந்து: 2,101

    பெல்ஜியம்: 2,035

    ஜெர்மனி: 1,983

    09:14 (IST)08 Apr 2020

    இந்தியாவில் 4,789-ஆக கொரோனா எண்ணிக்கை உயர்வு

    'இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,789 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 4,421-ஆக இருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 4,789 ஆக உயர்ந்துள்ளது. 

    Covid 19 Cases : "நட்பு என்பது வேறு ; பழிவாங்குதல் என்பது வேறு. இந்தியா, உயிர் காக்கும் மருந்துகளை மற்ற நாடுகளுக்கு வழங்கும் முடிவை வரவேற்கிறேன், ஆனால், முதலில் நாட்டு மக்களுக்கு தேவையான மருந்துகளை கைவசம் வைத்தபிறகு மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்" என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்காவுக்கு மருந்து ஏற்றுமதி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
    Tamil Nadu Chennai Coronavirus Corona
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment