Corana Vaccine in private hospital : இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சம் தொட்ட நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. தொடர்ந்து இந்தியாவின் சீரம் இன்ஸ்டியூட் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி தற்போது இந்திய மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த ஜனவரி 16-ந்தேதி இந்தியாவில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
முதலில் கொரோனா தொற்று பாதிப்பில் முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வந்த கொரோனா தடுப்பூசி, தற்போது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி, முதல் முறையாக தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்ஆகியோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
இந்நிலையில், நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்தியா முழுவதும் அனைத்து தனியார் மருத்துவமனைகளில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுததியுள்ளது. மத்திய அரசு சுகாதாரமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று நடைபெற்ற மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில், அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்படும் என்றும், அந்தந்த இடங்களில், “போதுமான எண்ணிக்கையில் தடுப்பூசிகள் இருக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போடுவதைக் கண்காணிக்க போதுமான இடம், பாதகமான நிகழ்வுகளை நிர்வகிக்க போதுமான ஏற்பாடு ஆகியவை இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த மாநிலங்கள் உத்தரவிட்டுள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"