கொரோனா பாதிப்பு – 60 வயதிற்கும் குறைவானவர்களே அதிகளவில் மரணம் – 2 வாரங்களில் விகிதம் விர்ர்

Corona deaths in India : கொரோனா பாதிப்புக்கு காட்டும் முக்கியத்துவத்தை குழந்தைகள் நலம், நோய்த்தடுப்பு, தடுப்பூசி திட்டங்கள், காசநோய், தொழுநோய், புற்றுநோய், டயாலிசிஸ் உள்ளிட்டவைகளுக்கும் வழங்கவேண்டும்

corona virus, coronavirus deaths india, india covid-19 deaths, covid-19 india coronavirus, coronavirus covid-19 deaths age, covid-19 deaths age , coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பால் ஏற்படும் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஏப்ரல் 30ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு 1,075 பேர் மரணமடைந்து உள்ளனர். இவர்களில் 50 சதவீதத்தினர் 60 வயதுக்கும் குறைவானவர்கள் ஆவர். ஏப்ரல் 18ம் தேதி, கொரோனாவால் நிகழ்ந்த மரணங்களில் 60 வயதுக்கும் குறைவானவர்களின் விகிதம் 25 சதவீதமாக இருந்தது.. இந்த காலகட்டத்தில் 75 வயதுக்கு மேற்பட்டோரின் மரண விகிதம் 42.2 சதவீதமாக இருந்தநிலையில், தற்போது அது 9.2 சதவீதமாக சரிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு நிலை மே 3ம் தேதியுடன் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஊரடங்கிற்கு பிறகு மாநிலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து தலைமைச்செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீதி சுதன் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, மாநிலங்கள், கொரோனா பாதிப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ள ரெட், ஆரஞ்சு மற்றும் கிரீன் ஜோன்களில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கடைசி 28 நாட்களில் புதிய தொற்று எதுவும் இல்லாத பகுதிகளையே இதுவரை கிரீன் ஜோன் என்று வரையறுக்கப்பட்ட நேரத்தில் தற்போது அந்த கால அளவு 21 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பின் அடிப்படையில், 13 ரெட், 284 ஆரஞ்சு மற்றும் 319 கிரீன் ஜோன்கள் இருப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று பாதிப்பின் இரட்டிப்பு விகிதத்தை அடிப்படையாக கொண்டு ஹாட்ஸ்பாட்கள் / ரெட் ஜோன், ஆரஞ்சு மற்றும் கிரீன் ஜோன்கள் வரையறுக்கப்பட்டன. தற்போது, தொற்றுகளிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப நடவடிக்கைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அடிப்படையில், டெல்லி, தமிழ்நாடு, மேற்குவங்கம், மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்தில் 10க்கும் மேற்பட்ட ரெட் ஜோன்கள் உள்ளன.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கொரோனா பாதிப்பால் மரணமடைந்தவர்களில் 14 சதவீதம் பேர் 45 வயதுக்கும் குறைவானவர்கள். 34.8 சதவீதம் பேர் 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள். 42 சதவீதத்தினர் 60 முதல் 75 வயதுக்குட்பட்டவர்கள். 9.2 சதவீதத்தினர் 75 வயதுக்கும் மேற்பட்டவர்கள். 48.8 சதவீதத்தினர் 60 வயதுக்கும் குறைவானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 18ம் தேதி நிலவரப்படி 488 பேர் மரணமடைந்திருந்தனர். அவர்களில், 42.2 சதவீதத்தினர் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள். 33.1 சதவீதத்தினர் 60 முதல் 75 வயதுக்குட்பட்டவர்கள். 10.3 சதவீதத்தினர் 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள்.14.4 சதவீதத்தினர் 45 வயதுக்கும் குறைவானவர்கள். 2407 சதவீதத்தினர் மட்டுமே, 60 வயதுக்கும் குறைவானவர்களாக இருந்தனர்.

கொரோனாவால் 3.2 சதவீத மரணம் நிகழ்ந்துள்ள நிலையில், மற்ற இணைநோய்களால் 78 சதவீத மரணம் நிகழ்ந்துள்ளது. ஏப்ரல் 18ம் தேதி நிலவரப்படி, மற்ற இணைநோய்களினால் நிகழ்ந்த மரணங்களின் வீதம் 83 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களில் 65 சதவீதத்தினர் ஆண்கள் ஆவர்.

கடந்த 24 மணிநேரத்தில், 1,823 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், 67 பேர் மரணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 33,610 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 25 சதவீதத்தினர் (8,372) பேர் குணமடைந்துள்ளனர். 8,30,201 மாதிரிகள் இதுவரை சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, கொரோனா பாதிப்பு இரட்டிப்பு விகிதம் 3.4 நாட்கள் என்ற அளவில் இருந்தது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இது 11 நாட்களாக அதிகரித்துள்ளது.
டெல்லி, தமிழ்நாடு உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஒடிசா, ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் கொரோனா இரட்டிப்பு விகிதம் 11 முதல் 20 நாட்களாக உள்ளது.

கேரளா, கர்நாடகா, லடாக், ஹரியானா, உத்தரகாண்ட் மாநிலங்களில் இந்த விகிதம் 20 முதல் 40 நாட்களாக உள்ளது.
அ்சாம், தலுங்காவா, சட்டீஸ்கர், இமாச்சல பிரதேசம் மாநிலங்களில் இரட்டிப்பு விகிதம் 40 நாட்களுக்கும் மேலாக உள்ளது.குறிப்பாக இமாச்சல பிரதேசத்தில் பாதிப்பு விகிதம் 191 நாட்களுக்கு பிறகு இரட்டிப்பாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்கள், தங்களது அரசு மருத்துவமனைகளில், கொரோனா பாதிப்புக்கு காட்டும் முக்கியத்துவத்தை குழந்தைகள் நலம், நோய்த்தடுப்பு, தடுப்பூசி திட்டங்கள், காசநோய், தொழுநோய், புற்றுநோய், டயாலிசிஸ் உள்ளிட்டவைகளுக்கும் வழங்கவேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தனியார் மருத்துவமனைகளும் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவிப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளதாவது, கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த உதவும் ஹைட்ரோகுளோராகுயின் மருந்து போதுமான அளவிற்கு கையிருப்பு உள்ளது. தவறான முடிவுகள் வந்ததால், தற்போதைக்கு ரேபிட் டெஸ்ட் கிட் சோதனை நிறுத்தப்படுள்ளது. அதுகுறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா சோதனைக்கு RT-PCR சோதனையே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், ரெம்சடசிவிர் மருந்து பலனளிப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ள நிலையில், அதுகுறித்த முழுமையான ஆய்வுகளுக்கு பிறகே, இந்தியாவில் அது பரிசோதனை செய்யப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Corona virus coronavirus deaths india india covid 19 deaths covid 19

Next Story
Corona Updates: 144 சரிவர கடைபிடிப்பதில்லை; இனி கடுமையான நடவடிக்கை – தமிழக காவல்துறை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com