Kaunain Sheriff M
சர்வதேச நாடுகளில் கொரோனா தொற்று அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள Sputnik V தடுப்பு மருந்தை, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மாஸ்கோ பல்கலைகழகம் அனுமதி அளித்தது.
இந்த மருந்துக்கான 2 கட்ட சோதனைகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த மருந்துக்கான விபரங்களை, இந்திய நிறுவனங்களிடம் அளிக்க ரஷ்யா முன்வந்துள்ளதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பிரத்யேகமாக தகவல்கள் கிடைத்துள்ளது.
மாஸ்கோவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கமாலியா ரிசர்ச் இன்ஸ்ட்டியூட் ஆப் எபிடெமியாலஜி அண்ட் மைக்ரோபயாலஜி நிறுவனம், தான் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தின் 2 கட்ட சோதனைகளை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது.
ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்துகளின் விபரங்களை இந்தியா பெறும் பொருட்டு, மத்திய உயிரி தொழில்நுட்பவியல் துறை செயலாளர் ரேணு ஸ்வரூப் மற்றும் ரஷ்யாவிற்கான இந்திய தூதர் வெங்கடேஷ் வர்மா உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
ரஷ்ய மருந்தின் 2 கட்ட சோதனைகளை, இந்திய நிபுணர்கள் ஆய்வு செய்துள்ள நிலையில், 3ம் கட்ட சோதனையை இந்தியாவில் மேற்கொண்டு, அதற்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்பதே, இந்தியாவுக்கு ரஷ்யா அளித்துள்ள நிபந்தனை ஆகும்.
இதுதொடர்பாக, Sputnik V அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த தடுப்பு மருந்துக்கான 3ம்கட்ட சோதனையை ரஷ்யா, சவுதி அரேபியா, பிரேசில், ஐக்கிய அரபு நாடுகள், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இந்த மருந்து உற்பத்தி செப்டம்பர் மாதத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மருந்தை பெறும் பொருட்டு, இந்தியா, பிரேசில், மெக்ஸிகோ, சவுதி அரேபியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
ஸ்புட்னிக் மருந்தின் 3ம் கட்ட சோதனை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களிடம் நடத்தப்பட உள்ளது. இந்த தன்னார்வலர்கள் ஆன்லைன் முறையில் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு எவ்வளவு அளவு மருந்து வழங்கப்பட்டுள்ளது என்பது QR code மூலம் கண்டறியப்பட உள்ளது.
ரஷ்ய விஞ்ஞானிகள் வெவ்வேறு மருத்துவமனைகளில் ஸ்புட்னிக் மருந்தின் 2 கட்ட சோதனைகளின் முடிவுகளை செப்டம்பர் 4ம் தேதியன்று வெளியிட்டது. இந்த சோதனைகளின் முடிவில், Ad26-S and rAd5-S பாதுகாப்பானது என்று லான்செட் ஜெர்னலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து, தன்னார்வலர்களிடையே எவ்வித பாதகமான நிகழ்வை ஏற்படுத்தவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.