corona virus, covid 19, india lockdown, food preparation, online order, hand washing, alabama university, corona infetion, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, வீட்டில் சமைத்து உண்பது சிறந்ததா அல்லது உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்வது சிறந்ததா என்பது, தற்போது வீட்டில் உள்ளவர்களின் ஆயிரம் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது..
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை பிறப்பிக்கப்பட்டதில் இருந்து மக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றும் வகையில், வீட்டிலேயே முடங்கிக்கிடக்கின்றனர். ஊரடங்கு உத்தரவு நிலையால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டிலேயே முடங்கிக்கிடப்பதால், தினம் தினம் வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவதா அல்லது உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவதா என்ற கேள்வி அவர்களிடைய எழுந்துள்ளது.
Advertisment
Advertisements
வீட்டில் முடங்கியுள்ள நேரத்தில் தினமும் சுடச்சுட உணவு வகைகளை உண்ண வேண்டும் என்ற ஆசை ஏற்படுவது மனித இயல்புதானே. ஆனால், சூப்பர் மார்க்கெட்களில் பொருட்கள் வாங்க காத்திருக்கும் நீண்ட வரிசை, அங்கு கடைபிடிக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட காரணங்களால் பொருட்கள் வாங்குவதில் ஏற்படும் சிரமத்தினால், சமைப்பது என்பது பெரும்போராட்டமாகவே உள்ளது.
ஆனால், சாப்பிட வேண்டுமே என்ன செய்ய என்பவர்களுக்கு மாற்றாக, உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வழிமுறை இனிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
உணவை சமைத்து சாப்பிடணுமா அல்லது ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவதால் கொரோனா தொற்று ஏதாவது ஏற்படுமா என்ற பாமர மக்களின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்க தொற்று நோயியல் துறை பேராசிரியரின் விளக்கம் அமைந்துள்ளது.
அமெரிக்காவின் அலபாமா பல்கலைகழகத்தின் தொற்று நோயியல் துறை பேராசிரியர் ஜோடி தியோனே ஓடோம் தெரிவித்துள்ளதாவது, கொரோனா வைரஸ் தொற்று, மனிதர்களிடையே சுவாசக்கோளாறு தொடர்பான பிரச்சனைகளையே ஏற்படுத்துகின்றன. இந்த வைரஸ் தொற்று உணவு வகைகளின் மூலம் பரவுகின்றன என்பது நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
உணவை சமைத்து சாப்பிட்டாலும் சரி, ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட்டாலும் சரி, தனி மனித இடைவெளியை மறவாது பின்பற்றி மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தாலே, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்திவிடலாம்.
ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்கள் கவனத்திற்கு
டெலிவரி ஆட்கள் உணவை வாசலில் வைத்து விட்டு சென்ற பின், நாம் அந்த உணவுகளை எடுத்துக்கொண்டு உள்ளே வரலாம்.
பணம் குடுப்பதினால், டெலிவரி ஆட்களுடன் நேரடி தொடர்பு ஏற்படும் என்பதால், ஆர்டருக்குரிய பணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்தலாம்.
வீட்டில் உணவு சமைப்பவர்கள் கவனத்திற்கு
வீட்டில் உணவு சமைப்பதற்கு முன் நாம் நம் கைகள், கால்களை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல், சமையலுக்கு உபயோகப்படுத்தப்படும் பாத்திரம் உள்ளிட்டவைகளை தகுந்த முறையில் சுத்தப்படுத்த வேண்டும்.
சமைத்து முடித்தபின் எஞ்சியுள்ள தேவையில்லாத பொருட்களை உடனடியாக வீட்டிலிருந்து பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்திவிடவேண்டும்.
சீரிய கால இடைவெளிகளில் அவ்வப்போது கை, கால்களை சோப்பு, சானிடைசர் உள்ளிட்டவைகளால் தொடர்ந்து கழுவி வருவது சாலச்சிறந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil