சீசனில் மட்டும் பரவும் தொற்று அல்ல கொரோனா, இன்னும் பேரலை இருக்கிறது: WHO

Coronavirus first wave : நாம்தான் இந்த சீசனில் அதிக பாதிப்பு இருக்கும். அந்த சீசனில் பாதிப்பு குறைந்து விடும் என்று நினைக்கிறோம். ஆனால், தற்போது உள்ள வைரஸ்கள், சீசனுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்கின்றன.

Coronavirus first wave : நாம்தான் இந்த சீசனில் அதிக பாதிப்பு இருக்கும். அந்த சீசனில் பாதிப்பு குறைந்து விடும் என்று நினைக்கிறோம். ஆனால், தற்போது உள்ள வைரஸ்கள், சீசனுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்கின்றன.

author-image
WebDesk
New Update
Corona virus, Covid pandemic, Influenza, WHO, big wave, hongkong, coronavirus, coronavirus first wave, coronavirus second wave, coronavirus world health organisation, coronavirus latest news

கொரோனா தொற்று மிகப்பெரிய பாதிப்புகளை இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் ஏற்படுத்தியுள்ள நிலையில், வடக்கு மண்டல நாடுகளில் கோடைக்காலம் துவங்குவதால் கொரோனா தொற்று முடிந்துவிடும் என்று நினைத்துவிட வேண்டாம், அங்கு இன்புளுயான்சா தொற்று துவங்க இருப்பதால் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒருவருக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்படுமா?

Advertisment

ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துவருவது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துதல் நிகழ்வு என்பது மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறியுள்ளது. எனவே இந்த நிகழ்வில், தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் நாம் முழு ஈடுபாட்டுடன் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

ஜெனீவாவில் இருந்து விர்ச்சுவல் முறையில் சிறப்புரையாற்றிய மார்கரேட் ஹாரிஸ் தெரிவித்துள்ளதாவது, நாம் அனைவரும் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையில் தான் உள்ளோம். அடுத்து ஒரு பேரலை காத்திருக்கிறது. அதன் பாதிப்பு எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம். எனவே அதற்குள் நாம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தினால் மட்டுமே அதிக பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

அமெரிக்காவில் கோடை காலத்தில் தான் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டதால், கொரோனா தொற்று பாதிப்புக்கு இந்த காலம், அந்த காலம் என்ற வேறுபாடு எதுவும் கிடையாது. பொதுஇடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்த்தாலே, பரவலை கட்டுப்படுத்த முடியும். நாம்தான் இந்த சீசனில் அதிக பாதிப்பு இருக்கும். அந்த சீசனில் பாதிப்பு குறைந்து விடும் என்று நினைக்கிறோம். ஆனால், தற்போது உள்ள வைரஸ்கள், சீசனுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்கின்றன.

மனிதர்களுக்குத்தான் கோடைகாலம். வைரஸ்கள் அனைத்துவிதமான சீசன்களையும் விரும்புவதாக மார்கரேட் தெரிவித்துள்ளார்.

தற்போது தெற்கு மண்டல நாடுகளில் இன்புளுயான்சா தொற்றும் பரவி வருவதால், மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். ஆய்வக முடிவுகளின்படி, இன்புளுயான்சா தொற்று இன்னும் தீவிரம் ஆகவில்லை என்றும், இருந்தபோதிலும் நிலைமை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கு அதன் பாதிப்பு மேலும் அதிகமாகும்பட்சத்தில், அவர்களது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே மக்கள் அனைவரும் புளு தடுப்பு ஊசியினை போட்டுக்கொள்ள மார்கரேட் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க - COVID-19 is ‘one big wave’, not seasonal, says WHO

Corona Virus Covid 19

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: