Advertisment

ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் மேல் பாதிப்பு: உலகின் அதிக கொரோனா எண்ணிக்கையை பதிவு செய்த இந்தியா

Coronavirus India, April 22 Highlights: ஒரு மிருகத்தனமான இரண்டாவது அலையின் கீழ், இந்தியா இன்று 3 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய கொரோனா பாதிப்புகளை பதிவுசெய்துள்ளது. இது கொரோனா நோய்தொற்று தொடங்கியதிலிருந்து எந்தவொரு நாட்டையும் விட தினசரி பாதிப்பில் மிக அதிகம்

author-image
WebDesk
New Update
ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் மேல் பாதிப்பு: உலகின் அதிக கொரோனா எண்ணிக்கையை பதிவு செய்த இந்தியா

ஒரு மிருகத்தனமான இரண்டாவது அலையின் கீழ், இந்தியா இன்று 3 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய கொரோனா பாதிப்புகளை பதிவுசெய்துள்ளது. இது கொரோனா நோய்தொற்று தொடங்கியதிலிருந்து எந்தவொரு நாட்டையும் விட தினசரி பாதிப்பில் மிக அதிகம். 3,14,835 புதிய பாதிப்புகளுடன், மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 1,59,30,965 ஆக உள்ளன. இன்று ஏற்பட்ட 2,104 இறப்புகளுடன் மொத்த இறப்பு எண்ணிக்கை 1,84,657 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

ஆக்ஸிஜன் வழங்கல், தடுப்பூசி முறை குறித்து ‘தேசிய திட்டம்’ வகுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்.

ஆக்ஸிஜன் வழங்கல், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் தடுப்பூசி முறை தொடர்பான பிரச்சினைகள் குறித்து தேசிய கொள்கையை அமல்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது. விசாரணையின் போது, ​​கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் ஊரடங்கை அறிவிக்க உயர் நீதிமன்றங்களின் நீதி அதிகாரத்தை ஆய்வு செய்வதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான, நீதியரசர் எல்.என்.ராவ் மற்றும் நீதியரசர் எஸ்.ஆர்.பட் அடங்கிய அமர்வு இது தொடர்பான விசாரணை வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவித்துள்ளது.

சீதாராம் யெச்சூரியின் மகன் குர்கான் மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழப்பு

சிபிஐ (எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது மகன் ஆஷிஷ்,  கோவிட் -19 காரணமாக வியாழக்கிழமை காலையில் இறந்தார் என்று கூறினார். பத்திரிகையாளரான ஆஷிஷ் கடந்த ஜூன் 9 அன்று தனது 35 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.கொரோனா தொற்று பாதித்த அவர் குர்கானின் மெடந்தா மருத்துவமனையில் குணமடைந்து வருவதாக குடும்பத்துடன் நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். இந்த நோயுடன் இரண்டு வார காலப் போருக்குப் பிறகு அதிகாலை 5.30 மணியளவில் அவரது திடீர் மரணம் ஒரு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது என்று குடும்ப நண்பர்கள் விவரித்தனர். சிபிஐ (எம்) பொலிட்பீரோ ஒரு மரண அறிக்கையை வெளியிட்டது மற்றும் அவரது குடும்பத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது.

publive-image

எந்தவொரு இடையூறும் இல்லாமல் டெல்லிக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்யுங்கள்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஹரியானா மற்றும் உத்தரபிரதேச காவல்துறையினர் ஆக்ஸிஜன் விநியோகத்தை திசை திருப்பியதாக டெல்லி குற்றம் சாட்டியுள்ள நிலையில், ஒதுக்கீட்டு உத்தரவின்படி தேசிய தலைநகருக்கு ஆக்ஸிஜன் வழங்கப்படுவதை உறுதிசெய்து, ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் லாரிகளுக்கு போதுமான பாதுகாப்பை வழங்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

publive-image

ஹரியானா போன்ற பிற மாநிலங்களில் உள்ள ஆலைகளில் இருந்து டெல்லிக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கப்படுவது அங்குள்ள உள்ளூர் நிர்வாகத்தால் மதிக்கப்படவில்லை என்றும் அது உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டது.

வங்காள தேர்தலுக்கான ஆறாவது கட்ட வாக்குப்பதிவு

மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் ஆறாவது கட்டத்தில் 43 இடங்களுக்கு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் கோவிட் -19 பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், மாநிலத்தில் அதிக அளவில் தொற்று பதிவாகியுள்ளது. வாக்களிப்பு தொடங்குவதற்கு முன்பே பெரும்பாலான வாக்குச் சாவடிகளுக்கு வெளியே நீண்ட வரிசைகள் காணப்பட்டன. மேற்கு வங்கம் அதன் அதிகபட்ச தினசரி பாதிப்பாக 9,819 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கைக்கு சோனியா காந்தி கண்டனம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தனது புதிய தடுப்பூசி கொள்கையில் "18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசிகளை வழங்கும் பொறுப்பை மத்திய அரசு கைவிட்டுள்ளது" என்றார். பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், “மருத்துவ வளங்கள் பற்றாக்குறையாக இருக்கும் நேரத்தில், மருத்துவமனை படுக்கைகள் கிடைக்காத நிலையில், ஆக்ஸிஜன் வழங்கல் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பது வேகமாக குறைந்து கொண்டிருக்கும் நிலையில், உணர்வற்ற தன்மை கொண்ட இந்தக் கொள்கையை அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது. மத்திய அரசுக்கு கிடைக்கும் 50% தடுப்பூசிகளுக்கான ஒதுக்கீட்டைப் பொறுத்தவரையில், மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்வது வெளிப்படையானதாகவும், சமமாகவும் இருக்க வேண்டும்.

கூட்ட நெரிசலால் கோவிட் -19 தடுப்பூசிகளுக்கான பதிவை நிறுத்திய கேரளா

மாநிலத்தில் தடுப்பூசி பற்றாக்குறையால் கோவிட் -19 தடுப்பூசிக்கான ஸ்பாட் பதிவை கேரளா அரசு நிறுத்தியுள்ளது.  அங்கு தடுப்பூசிகளைப் பெறுவதற்காக ஏராளமான மக்கள் தடுப்பூசி மையங்களில் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக மட்டுமல்லாமல், தடுப்பூசி மையங்களில் கூட்டத்தைக் குறைப்பதற்காக ஸ்பாட் பதிவு நிறுத்தப்பட்டதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. வியாழக்கிழமை முதல், கோ-வின் போர்ட்டலில் தங்கள் பெயர்களை பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

publive-image

கட்டாய கோவிட் -19 சோதனையைத் தவிர்க்க, சில்சார் விமான நிலையத்திலிருந்து தப்பி ஒடிய 300 விமான பயணிகள்

புதன்கிழமை அசாமின் சில்சார் விமான நிலையத்தில் தரையிறங்கிய சுமார் 300 விமான பயணிகள் கட்டாய கோவிட் -19 சோதனையைத் தவிர்த்து சோதனை மையத்திலிருந்து தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதன்கிழமை, 690 பேர் சில்ச்சரில் இறங்கினர் அதில் சிலர் வேறு சில வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணிக்க உள்ளவர்கள் என்பதால் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. மொத்தம் 189 பேர் சோதனை செய்தனர், அதில் ஆறு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 300 சோதனையைத் தவிர்த்து வெளியேறினர். அவர்கள் எப்படி ஓடிவிட்டார்கள் மற்றும் பிற விவரங்கள் குறித்தும் சரியாக என்ன நடந்தது என்பது குறித்தும் நாங்கள் இன்னும் விசாரித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட பயணிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள்  என்று கச்சார் மாவட்டத்தின் சுகாதாரத்துறை துணை ஆணையர், சுமித் சத்தவன் கூறினார்.

மகாராஷ்டிராவில் போக்குவரத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் மாவட்ட வாரியாக தனிமைப்படுத்தல்

இதற்கிடையில், மகாராஷ்டிரா அரசாங்கம் அலுவலக வருகை, திருமண விழாக்கள் மற்றும் பயணங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது. புதிய கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை இரவு 8 மணி முதல் நடைமுறைக்கு வந்து மே 1 ஆம் தேதி காலை 7 மணி வரை நடைமுறையில் இருக்கும். அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளில் ஊரடங்கு என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை அரசு தொடர்ந்து தவிர்த்து வந்தாலும், மாநிலத்தில் சமீபத்திய காலங்களில் விதிக்கப்பட்ட வேறு எந்த கட்டுப்பாடுகளையும் விட கடுமையானது புதன்கிழமை அறிவிக்கப்பட்ட தடைகள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus Covid Vaccine India Covid 19 Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment