கர்நாடகாவில் முன்னணி செய்தி சேனலின் கேமராமேனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்த நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த 5 அமைச்சர்கள், அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 20 முதல் 23ம் தேதி நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளின்போது அமைச்சர்கள் இந்த கேமராமேனுடன் தொடர்பில் இருந்ததால், 24ம் தேதி அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், கேமராமேனுடன் தொடர்புடையதாக கருதப்படும் மனைவி, 2 வயது குழந்தை உள்ளிட்ட 40 பேர் தனியார் ஓட்டலில் தனிமதப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் மனைவி மற்றும் குழந்தைக்கு கொரோனா நெகட்டிவ் என்று முடிவுகள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநில கல்வித்துறை அமைச்சரும், கோவிட் 19 செய்தித்தொடர்பாளருமான சுரேஷ் குமார் கூறியதாவது, கேமராமேனுடன் தொடர்புடைய 5 அமைச்சர்களுக்கும் கொரோனா நெகட்டிவ் என்று முடிவு வந்துள்ளது. அந்த கேமராமேன், முதல்வர் அலுவலகத்துக்கு அடிக்கடி வந்துள்ள நிலையிலும், அவர் முதல்வரை சந்திக்கவில்லை என்று கூறினார்.
கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, தமக்கு கொரோனா சோதனை நடத்தியதில், கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இருந்தபோதிலும் நான் என்னை தனிமைப்படுத்தியுள்ளேன். நான் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
I have taken a swab test and it has come negative. I am under self quarantine and I am healthy.#Covid19
ನಾನು ಕೋವಿಡ್-19 ಗಂಟಲು ದ್ರವ ಪರೀಕ್ಷೆ ಮಾಡಿಸಿದ್ದು ಅದು ನೆಗೆಟಿವ್ ಬಂದಿರುತ್ತದೆ, ನಾನು ಆರೋಗ್ಯದಿಂದಿದ್ದು, ಸ್ವತಃ ಕ್ವಾರೆಂಟೈನ್ ಗೆ ಒಳಗಾಗಿದ್ದೇನೆ.
— Basavaraj S Bommai (@BSBommai) April 29, 2020
தும்கூரு பகுதியில் 73 வயது முதியவர் கொரோனா பாதிப்பிற்கு பலியான நிலையில், கர்நாடகாவில் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
ஏப்ரல் 29ம் தேதி மாலை 5 மணி நிலவரப்படி, மாநிலத்தில் 535 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 215 பேர் குணமடைந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
As of 5:00 PM of 29th April 2020, cumulatively 534 COVID-19 Positive cases have been
confirmed in Karnataka, it includes 20 Deaths & 216 Discharges.
11 new cases have been confirmed for COVID-19 in the state from 28.04.2020, 5:00 PM to
29.04.2020, 5:00 PM. @IndianExpress pic.twitter.com/VJrabL3AOQ— Darshan Devaiah B P (@DarshanDevaiahB) April 29, 2020
புதிதாக 11 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், கலாபுர்கி பகுதியில் இருந்து 8 பேருக்கும், பெலகாவி,நஞ்சகுட் மற்றும் தேவநாகரே பகுதியிலிருந்து தலா ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக, மாநிலத்தில் கடந்த 5 நாட்களில் சராசரியாக 1.25சதவீத அளவிற்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர், பத்திரிகையாளர்களை தொடர்ந்து, அரசின் முன்னணி பதவியில் உள்ள அதிகாரிகளிடமும் கொரோனா சோதனைகளை, கர்நாடக அரசு துவக்கியுள்ளது. அரசு அதிகாரிகளுக்கு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள கேசி பொது மருத்துவமனையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு பாடநாராயணபுரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தாக்கத்தால், உலகின் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள 4,408 சுற்றுலா பயணிகள், 9,074 மாணவர்கள், 2,784 தொழில்நுட்ப நிபுணர்கள், 557 கப்பற்படை ஊழியர்கள் என 10,823 பேரை, மீண்டும் கர்நாடக மாநிலம் திரும்புவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக 6,100 பேர் கர்நாடகா திரும்ப உள்ளதாகவும், அவர்களுக்கு எடுப்பதற்காக சோதனை முறைகள், நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் தயாராக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, கனடா (328), அமெரிக்கா (927), ஐக்கிய அரபு அமீரகம் (2,575), கத்தார் (414) , சவுதி அரேபியா (927) நாடுகளிலிருந்து கர்நாடகாவிற்கு திரும்ப உள்ளனர்.
பஸ்கள் கிளினிக்குகளாக மாற்றம்
மாநிலத்தில் கொரோனா பாதிப்பை தடுக்கும் நடவடிக்கையாக கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம் ( KSRTC), மங்களூருவில், பஸ்கள் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, KSRTC நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பழைய பஸ்களை ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் காய்ச்சலை கண்டறியும் நடமாடும் மருத்துவமனைகளாக மாற்றியுள்ளோம். இந்த பஸ் மருத்துவமனையில், நோயாளிக்கான படுக்கை, டாக்டர்கள் அமர இருக்கை, மருந்துப்பெட்டி, வாஷ் பேசின், சானிடைசர், சோப் ஆயில், தண்ணீர் வசதி , பேன் உள்ளிட்ட வசதிகள் உள்ளன
மங்களூருவை தொடர்ந்து, பகல்கோட் மாவட்டத்திலும் பஸ் மருத்துவமனை ஏப்ரல் 29ம் தேதி முதல் துவக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Corona virus karnataka karnataka coronavirus cases karnataka news bengaluru covid 19
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!