Advertisment

கொரோனா வைரஸ்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்ணிக்கை 59 ஆக உயர்வு

சீன அதிபர் ஜி ஜின்பிங், கொரோனா வைரசால் மிகவும் பாதிப்படைந்த  வுஹான் மாகாணத்திற்கு இன்று பயணம் செய்து மருத்துவ ஊழியர்கள், ராணுவ வீரர்கள், சமூக ஊழியர்களை சந்தித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரோனா வைரஸ்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்ணிக்கை 59 ஆக உயர்வு

சீனாவின் ஹூபே மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் கடல் உணவு சந்தையில் காணப்பட்ட கொரோனா வைரஸ் இன்று நாடு முழவதும் பரவியுள்ளது. உலகளவில், இதுவரை, 105 நாடுகளில் (பகுதிகள் (அ) பிரதேசங்கள்)  உள்ள 110,029 பேர் கொரொனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,817 மக்கள் மரணம் அடைந்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங், கொரோனா வைரசால் மிகவும் பாதிப்படைந்த  வுஹான் மாகாணத்திற்கு பயணம் செய்து மருத்துவ ஊழியர்கள், ராணுவ வீரர்கள், சமூக ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள், அதிகாரிகளை சந்தித்தார் என அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

publive-image கொரோனா வைரஸ் குறித்த WHO டேட்டா

மகாராஷ்டிராவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான புனேவில்,இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை  47 ஆக உயர்ந்துள்ளது. இருவரும் ( ஒரு ஆண், ஒரு பெண்) மார்ச் 1 ம் தேதி துபாயில் இருந்து இந்தியாவிற்கு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கொரோனா வைரஸ் குறித்த முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். 

Live Blog

Corona virus Latest news in tamil : கொரோனா வைரஸ் குறித்த முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.



























Highlights

    22:31 (IST)10 Mar 2020

    சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நபருக்கு கொரொனா இல்லை - அமைச்சர்

    சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    22:21 (IST)10 Mar 2020

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் என்ணிக்கை 59 ஆக உயர்வு

    மகாராஷ்டிர மாநிலம், புனேவில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் நோய்தொற்று உள்ளோரின் எண்ணிக்கை 59-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நேற்று வரை 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 59-ஆக உயர்ந்துள்ளது.

    20:40 (IST)10 Mar 2020

    கேரளாவில் 3 வயது குழந்தை உள்பட 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி

    இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு வந்த 3 வயது குழந்தை உள்பட 2 பேருக்கு கேரளாவில் மொத்த கொரோனா வைரஸ் பாஸிட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் தெரிவித்துள்ளார்.

    20:35 (IST)10 Mar 2020

    கொரோனா எதிரொலி ஸ்பெயின்-இத்தாலி இடையே விமான சேவை ரத்து

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக ஸ்பெயின் அரசு இத்தாலியுடனான விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்து அறிவித்துள்ளது.

    19:53 (IST)10 Mar 2020

    புனேவில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி

    புனேவைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா வைரஸ் சோதனை செய்ததில் பாஸிட்டிவ் என்று முடிவு வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் நேவல் கிஷோர் ராம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது

    19:12 (IST)10 Mar 2020

    கொரோனா அச்சம்; நெய்வேலி என்.எல்.சியில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு ரத்து

    கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நெய்வேலி என்.எல்.சியில் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    19:00 (IST)10 Mar 2020

    கொரோனா வைரஸ் அச்சம்; இந்தியா - மியான்மர் எல்லையை மூடியது மணிப்பூர்

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து, மணிப்பூர் அரசின் உள்துறை, தென்கொபால் மாவட்டத்தில் உள்ள மோரே எல்லை நகரத்தில் இந்தோ-மியான்மர் கேட் எண் ஒன்று மற்றும் இரண்டு மூடி சீல் வைத்துள்ளது. மேலதிக உத்தரவு வரும் வரை எல்லை வாசல் சீல் வைக்கப்படும். சீனாவின் உடனடி அண்டை நாடான மியான்மருடன் மணிப்பூர் 398 கி.மீ. எல்லையை பகிர்ந்துகொள்கிறது.

    மணிப்பூர் மியான்மரிலிருந்து சீனத் தயாரிப்புகள் உட்பட மோரே எல்லை வழியாக ஏராளமான பொருட்களை இறக்குமதி செய்கிறது, அவை இந்தியாவின் முக்கிய இடங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

    18:20 (IST)10 Mar 2020

    கொரோனா, பறவைக் காய்ச்சல் வதந்தியால் சிக்கன் விலை இரண்டு கடும் வீழ்ச்சி

    கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பறவைக் காய்ச்சல் கோழிகளைத் தாக்கியதாக சமூக ஊடகங்களில் சில நாட்களாக வதந்திகள் பரவியதால் கோழி இறைச்சியின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. மதுரையில் ரூ.160-க்கு விற்பனையான ஒரு கிலோ சிக்கன் விலை தற்போது ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், கோழி இறைச்சி வியாபாரிகள், கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    17:27 (IST)10 Mar 2020

    கொரோனா அறிகுறி இருந்தால் பள்ளிக்கு வருவதை தவிர்க்கவும் - பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்

    காய்ச்சல், கொரோனா அறிகுறி இருந்தால் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

    17:24 (IST)10 Mar 2020

    கேரளாவில் மார்ச் 31 வரை சினிமா தியேட்டர்களை மூட முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு

    கேரளாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை வழிகாட்டுதல்களை வெளியிட்டார். அதில், “ஏராளமான மக்கள் சினிமா தியேட்டர்களுக்குச் செல்கிறார்கள் இல்லையா? அதனால், மார்ச் 31 வரை தியேட்டர்களை மூடி வைத்திருப்பது சரியானது” என்று பினராயி விஜயன் கூறினார்.

    மேலும், கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.

    16:54 (IST)10 Mar 2020

    கொரோனா எதிரொலி; சபரிமலையில் மார்ச் 14-18 பூஜைக்கு பக்தர்கள் வரவேண்டாம் - தேவசம் போர்டு

    கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சபரிமலையில் மார்ச் 14-18 வரை நடைபெறும் மாத பூஜைக்கு பக்தர்கள் வரவேண்டாம் என்று தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.

    16:14 (IST)10 Mar 2020

    கொரோனா எதிரோலி; கொச்சியில் நாளை முதல் மார்ச் 31 வரை சினிமா தியேட்டர்கள் மூடப்படும்

    கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சம் காரணமாக, கொச்சியில் நாளை முதல் மார்ச் 31 வரை சினிமா தியேட்டர்கள் மூடப்படும் என கொச்சியில் நடந்த மலையாள சினிமா அமைப்புகளின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    15:28 (IST)10 Mar 2020

    ‘கோ கொரோனா’ கோஷமிடும் மத்திய அமைச்சரின் வைரல் வீடியோ

    மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே மும்பையில் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில், சீனத் துணைத் தூதர் டாங் குயோகை மற்றும் பௌத்த பிக்குகளுடன் 'கோ கொரோனா, கோ கொரோனா' என்று கோஷமிடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பிரார்த்தனையின் போது பிப்ரவரி 20-ம் தேதி இந்தியா கேட் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    15:19 (IST)10 Mar 2020

    கொரோனாபாதிக்கப்பட்ட ஈரானில் இருந்து 58 இந்தியர்களை அழைத்துவந்த ஐ.ஏ.எஃப்

    கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஈரானில் இருந்து 58 இந்தியர்கள் இந்திய விமானப்படையின் (ஐ.ஏ.எஃப்) இராணுவ போக்குவரத்து விமானம் மூலம் இந்தியாவுக்கு திரும்ப அழைத்துவரப்பட்டனர். சி -17 குளோப்மாஸ்டர் என்ற விமானம் திங்கள்கிழமை மாலை காசியாபாத்திற்கு அருகிலுள்ள ஹிண்டன் விமான நிலையத்திலிருந்து தெஹ்ரானுக்கு அனுப்பப்பட்டது.

    ஐ.ஏ.எஃப்-ன் சி -17 விமானம் ஈரானில் இருந்து ஹிண்டன் விமான நிலையத்திற்கு 58 இந்திய குடிமக்களுடன் திரும்பியது. அவர்களில் 25 ஆண்கள், 31 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மேலும், இந்த விமானம் பரிசோதனைக்கு 529 மாதிரிகளையும் எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    13:59 (IST)10 Mar 2020

    கேரளா-6, கர்நாடாக -4 : கொரொனோ வைரஸ் பாதிப்பு

    கேரளாவில் இன்று மேலும் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில்  கொரொனோ வைரஸின் தொற்று எண்ணிக்கை 12 ஆகா உயர்ந்துள்ளது.  கர்நாடகாவில் தற்போது 4 பேருக்கு கொரொனோ வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாக அமைச்சர் பி ஸ்ரீராமுலு உறுதிப்படுத்துகிறார். 

    12:31 (IST)10 Mar 2020

    8 பேரிடம் கொரொனோ வைரஸ் தொற்று இல்லை - அமைச்சர் விஜய பாஸ்கர்

    ஓமனில் இருந்து இந்தியா வந்த தமிழர் ஒருவருக்கு கொரொனோ வைரஸ் இருப்பதை தொடர்ந்து அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்தும் அறையில் சேர்க்கப்பட்டார். இவருடன் தொடர்பில் இருந்த 7 பேர், உடனடியாக கொரொனோ வைரஸ் தொற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.       

    இந்நிலையில், இந்த 7 பேர் சோதனையில் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்றில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டரில், ' ஒரு நல்ல செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன். 8 பேர்களிடம் நடத்திய கொரொனோ வைரஸ் தொற்று சோதனை NEGATIVE-ஆக உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின் புதிய வழக்குகள் எதுவும் இல்லை என்பதை இது உறுதிப்படுத்துகிறது' என்று பதிவிட்டுள்ளார்.   

    11:38 (IST)10 Mar 2020

    கொரோனா வைரஸ் உருவ பொம்மைக்கு தீ வைப்பு

    வட இந்தியாவில் ஹோலிகா தஹன் (ஹோலி) விழா கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையில் பழையனவற்றையும், கீழ்த்தரமான சிந்தனை செயல்பாட்டு மூட்டையையும் தொலைத்து அழிப்பதைக் குறிக்கும் வகையில் தொடர்பான நெருப்பு மூட்டுதல் நடத்தப்படுகிறது. இந்நிலையில்,  தெற்கு மும்பையின் வொர்லி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றை கருப்பொருளை அடிப்படையாகக் வைத்து உருவாக்கபப்ட்ட உருவ பொம்மைக்கு மக்கள் தீமுட்டினர்.   

    11:29 (IST)10 Mar 2020

    இந்தியா- மியான்மர் சர்வதேச எல்லை மூடப்படும் - மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்

    கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கான அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அடுத்த உத்தரவு வரும் வரையில்,  இந்தியா-மியான்மர்க்கான சர்வதேச எல்லை மூடப்படுவதாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.  

    11:23 (IST)10 Mar 2020

    58 இந்திய யாத்ரீகர்கள் ஈரானில் இருந்து மீட்பு

    ஈரானில் சிக்கித் தவித்த 58 இந்திய யாத்ரீகர்கள் குழு வெற்றிகரமாக இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டனர.  கொரோனா வைரஸ் தொற்றால் சீனாவுக்கு அடுத்து மிக மோசமாக பாதித்த நாடுகளில் ஒன்றாக ஈரான் உள்ளது. இந்தியர்களின் வருவாயை உறுதி செய்த இந்தியாவிற்கான ஈரான் தூதரக அதிகாரிக்கும், இந்திய விமானப்படைக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நன்றி தெரிவித்தார். ஈரானில் குறைந்தது 2,000-க்கும் அதிகமான இந்தியர்கள் வாழ்கின்றனர் என்று ஒரு அறிக்கை கூறுகிறது.

    11:02 (IST)10 Mar 2020

    புனேவில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

    மகாராஷ்டிராவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான புனேவில்,இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை  47 ஆக உயர்ந்துள்ளது. இருவரும் ( ஒரு ஆண், ஒரு பெண்) மார்ச் 1 ம் தேதி துபாயில் இருந்து இந்தியாவிற்கு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Corona virus Latest news in tamil : இந்தியாவில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதை அடுத்து, ஹோலி கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் அறிவித்துள்ளனர்.

    அனைத்து ரயில்வே மண்டலங்களும் கொரோனோ வைரஸ் தனிமைப்படுத்தும் இருப்பிடம் ( வார்டு)அமைக்க வேண்டும். குறைந்தது 1,000 பேரையாவது தனிமைப்படுத்தும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும்  என்று ரயில்வே வாரியம் அறிவுருத்தியுள்ளது.

    Coronavirus
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment