கொரோனா பாதிப்பு - மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து முழுவதும் ரத்து
Corona Update: துணை நகர்ப்புற ரயில் சேவைகள் உட்பட அனைத்து ரயில் சேவைகளும் 2020 மார்ச் 31 வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன. இருப்பினும், சரக்கு ரயில்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது
Corona Update: துணை நகர்ப்புற ரயில் சேவைகள் உட்பட அனைத்து ரயில் சேவைகளும் 2020 மார்ச் 31 வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன. இருப்பினும், சரக்கு ரயில்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது
corona virus latest press note high level meeting full report covid 19
COVID-19 Latest Updates: மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய பயணிகள் போக்குவரத்து முழுவதும் ரத்து செய்யப்படும் முக்கிய முடிவு, அனைத்து மாநில தலைமை செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவை செயலாளர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
Advertisment
1. அமைச்சரவை செயலாளர் மற்றும் பிரதமரின் முதன்மை செயலாளர் ஆகியோருடன் அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்களுடனான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
2. பிரதமரால் அறிவிக்கப்பட்ட ஜனதா ஊரடங்கு உத்தரவுக்கான பெரும் ஆதரவு கிடைத்துள்ளது என்று அனைத்து தலைமை செயலாளர்களும் தெரிவித்தனர்.
Advertisment
Advertisements
3. COVID 19 இன் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, 2020 மார்ச் 31 ஆம் தேதி வரை மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய பயணிகள் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கான அவசரத் தேவை இருப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.
4. விரிவான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, COVID தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் அல்லது உயிரிழப்புகள் பதிவாகியுள்ள 75 மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளை மட்டுமே இயக்க அனுமதிக்க பொருத்தமான உத்தரவுகளை பிறப்பிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாநில அரசுகள் அவர்களின் நிலைமையைப் பொறுத்து பட்டியலை விரிவாக்கலாம் நிலைமையை. இது தொடர்பாக பல மாநில அரசுகள் ஏற்கனவே உத்தரவுகளை பிறப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
துணை நகர்ப்புற ரயில் சேவைகள் உட்பட அனைத்து ரயில் சேவைகளும் 2020 மார்ச் 31 வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன. இருப்பினும், சரக்கு ரயில்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
அனைத்து மெட்ரோ ரயில் சேவைகளும் 2020 மார்ச் 31 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உறுதிப்படுத்தப்பட்ட COVID 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சுமார் 75 மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளை மட்டுமே இயக்க அனுமதிக்கும் உத்தரவுகளை மாநில அரசுகள் வழங்க வேண்டும்.
2020 மார்ச் 31 வரை மாநிலங்களுக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”