Corona Virus Latest Updates : கொரோனாவின் தாக்கம் அது உருப்பெற்ற சீனாவில் முடிந்துவிட்டது. அங்கு அதன் ஆதிக்கம் முடிந்துவிட்டது. ஆட்டம் ஒடுக்கப்பட்டு விட்டது. இரு நாட்களாக சீனாவில் புதிதாக எவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை.
ஆட்டம் அங்குதான் முடிந்ததே தவிர, உலகெங்கிலும் இப்போது கதகளி ஆடி வருகிறது கொரோனா, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகளில் பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கும் கொரோனா, இந்தியாவில் இன்று (மார்ச்.20) வரை 4 உயிர்களை பலி வாங்கியிருக்கிறது.
Please observe #JanataCurfewMarch22 .Let's #FightAgainstCorona together. @SpokespersonMoD @shripadynaik @drajaykumar_ias pic.twitter.com/9zNG5fYtEx
— National Cadet Corps (@HQ_DG_NCC) March 20, 2020
இன்று வரை கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு குறித்த ஒரு பார்வை இங்கே,
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்து உள்ளது. 4 இந்தியர்கள் மற்றும் ராஜஸ்தானில் சிகிச்சை பெற்று வந்த இத்தாலி நாட்டை சேர்ந்தவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதை தொடர்ந்து கொரோனா பாதிப்பால் இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்படுகிறது. அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு சோதிக்கப்பட்டு வருகிறது.
ஆயிரக்கணக்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தினமும் ஆய்வகங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால் ஆய்வு முடிவு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
பகுதி வாரியாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
#Delhi - 17
#Haryana - 17
#Karnataka - 15
#Kerala - 28
#Maharashtra - 52
#Rajasthan - 17
#Telangana - 17
#Ladakh - 10
#UP - 23
தமிழகத்தில் சென்னை, நெல்லை, தேனி, திருவாரூர் ஆகிய இடங்களில் மட்டுமே கொரோனா பரிசோதனை மையம் உள்ளது. 5-வதாக தற்போது சேலத்தில் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சார்பில் 72 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் விஞ்ஞான ஆராய்ச்சி கழகம் பயோ-டெக்னாலஜி துறை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி கழகம் மேலும் 49 ஆய்வகங்கள் செயல்படும்.
அதே போல், சுமார் 51 தனியார் ஆய்வகங்களுக்கு பரிசோதனை செய்ய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கியுள்ளது, இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும். எனினும், இதற்காக தனியார் மையங்கள் ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கலாம் என்றும் தெரிகிறது.
அரசு ஆய்வகங்களில் நடத்தப்படும் அதே முறையிலான பரிசோதனையே இங்கும் நடத்தப்பட உள்ளது. எனினும், சில நாட்களுக்கு தனியார் மையங்களை இலவசமாக பரிசோதனை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
ரூ.5000 செலவாகும் இந்த சோதனைகளை, அரசு இலவசமாக செய்து வருகிறது. ஆனால், மிகவும் சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு மட்டுமே செய்யப்படுகிறது. தனியார் ஆய்வகங்ள் இந்த பரிசோதனையை செய்யும்போது, அவை பரவலாக பல மக்களையும் சென்று சேரும். இது நோய் பரவலை உடனே கண்டறிந்து சிகிச்சையளிக்க உதவும் என்று கூறப்படுகிறது.
கொரோனா வதந்தி - நால்வர் கைது
கொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, ஈரோடு சித்தோட்டை சேர்ந்த வாசுதேவன் (25), கமலேஷ் (20) மற்றும் வரதராஜ் (35) ஆகியோரை ஈரோடு போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் கொரோனாவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மது கடைகளில் சமூக இடைவெளி பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒருவருக்கும் மற்றொருவருக்கும் 1 மீட்டர் இடைவெளி விட்டு வரும் வகையில் வரிசை அமைக்கப்பட்டுள்ளது.
— முகேஷ்
(@NaanThaanMUKESH) March 20, 2020
உலகளவில் கொரோனா
இத்தாலியில் வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 427 பேர் பலியாகி உள்ளனர். 4,000-க்கும் அதிகமானவர்கள்கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 2,978 லிருந்து 3,405 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,713 லிருந்து 41,000 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இத்தாலி முழுவதும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அவசர தேவையின்றி வேறு எக்காரணம் கொண்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களில் எண்ணிக்கையில் சீனாவை விட இத்தாலி முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு உத்தரவு
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் 23 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குளோரோகுயின்
உலகை அச்சுறுத்திவரும் கொரோனாவை தடுக்கவும், குணமாக்கவும் மருந்துகளை கண்டுபிடிக்க பல நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. இந்நிலையில், மலேரியா மற்றும் ஆர்த்ரிடிஸ் தடுப்பு மருந்தான குளோரோகுயினை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பரீசிலித்து வருவதாக தெரிவித்து உள்ளது.
இம்மருந்தானது பிற நோய்களுக்கு ஏற்கெனவே உபயோகிக்கப்பட்டு நல்ல முடிவுகள் வந்துள்ளதால், நோயாளிகள் யாருக்கும் இம்மருந்தால் பெரிய பக்கவிளைவுகள் ஏற்படாது எனவும் கூறப்பட்டுள்ளது. குளோரோகுயின் மருந்தை பரவலாக கிடைக்கவைப்பதற்கும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.