Advertisment

2 மகள்களை ஏரில் பூட்டி நிலத்தை உழுத விவசாயி: சோனு சூட் செய்த உதவிக்கு பாராட்டு குவிகிறது

Actor Sonu Sood : புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் வீடு திரும்பவும், வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை மீட்டுக் கொண்டு வரவும் நடிகர் சோனு சூட் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus, lockdown, andhra pradesh, farmer, tractor, actor sonu sood, video. viral. daughters, chandrababu naidu, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

ஆந்திராவில் மாடுகளை வாங்க பணம் இல்லாததால், உழவுப்பணிக்கு பெற்ற மகள்களை விவசாயி பயன்படுத்திய வீடியோ வைரலான நிலையில், நடிகர் சோனு சூட், அந்த விவசாயிக்கு டிராக்டர் வழங்கியுள்ள நிகழ்வு, அவரை மட்டுமல்லாது அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Advertisment

கொரோனாவால் ஒட்டுமொத்த நாடும் பல்வேறு விதமான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றது. அதிலும் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளியைச் சேர்ந்தவர் நாகேஸ்வர். . திருப்பதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வந்த நிலையில் ஊரடங்கு காரணமாக கடையில் வருமானம் இல்லை. இதனால் சொந்த ஊருக்கு திரும்பி விவசாயம் செய்ய திட்டமிட்டார். தன்னிடம் 2.5 ஏக்கர் நிலம் இருந்த நிலையில் உழுவதற்கு போதிய வசதிகள் இன்றி தவித்துள்ளார். மாடுகள் வாங்கவோ, டிராக்டர் ஒன்றை வாடகைக்கு எடுக்கவோ கையில் பணமில்லை.

இந்த சூழலில் தனது இரு மகள்களையும் மாடுகள் போன்று பூட்டி நிலத்தை உழுதுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைக் கண்ட பலரும் விவசாயியின் நிலையை எண்ணி வேதனைப்பட்டனர்.

நடிகர் ஆதரவுக்கரம்

இந்த வீடியோவை பார்த்த பாலிவுட் நடிகர் சோனு சூட், உழவுப்பணிக்கு இரண்டு மாடுகளை வழங்குவதாக டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

பின் என்ன நினைத்தாரோ, தெரியவில்லை. மாடுகளுக்குப்பதிலாக அந்த விவசாயிக்கு புதிய டிராக்டர் ஒன்றை வழங்கியுள்ளார். இந்த நிகழ்விற்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்துள்ள நிலையில், விவசாயிகளின் இரு மகள்களின் கல்விச்செலவை தான் ஏற்பதாக சந்திரபாபு தெரிவித்துள்ளதற்கு, சோனு சூட் நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் பல்வேறு மாநிலங்களில் சிக்கித்தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் வீடு திரும்பவும், வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை மீட்டுக் கொண்டு வரவும் நடிகர் சோனு சூட் பல்வேறு முயற்சிகளை எடுத்தது பலரது பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Virus Sonu Sood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment