கொரோனாவின் தாக்கம், உலகம் முழுவதும், பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அரசு பணிகள், வங்கி பணிகள், வர்த்தக பணிகள் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் போன்றவை, ஆன்லைனில் மட்டுமே நடந்து வருகின்றன.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
ஸ்மார்ட்போனில் வங்கிச்சேவைகளை பயன்படுத்துபவர்களின் தகவல்களை திருடும் வகையில் ஹேக்கர்கள், Cerberus என்ற பெயரில் புதிய வைரசை உருவாக்கியுள்ளதை இன்டர்போல் கண்டுபிடித்துள்ள நிலையில், வங்கிகள் இந்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்துமாறு சிபிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ), இதுதொடர்பாக வங்கிகள் மட்டுமல்லாது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் போலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் நேரத்தில், இதனை சாதகமாக ஹேக்கர்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
ஹேக்கர்கள், Cerberus என்ற வைரசின் மூலமாக, ஸ்மார்ட்போனில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கிரெடிட் கார்டு எண் உள்ளிட்ட தகவல்களை திருடுகின்றன. இந்த வைரஸ், ஒரு குறுந்தகவலை ஸ்மார்ட் போனுக்கு அனுப்பும் என்றும், அந்த குறுந்தகவலில் உள்ள இணைப்பை கிளிக் செய்தால் உடனே அந்த செல்போனில் உள்ள அனைத்து வங்கி கணக்குகளில் புகுந்து அதிலுள்ள தகவல்களை திருடி விடும் என்றும், அதன் பின்னர் ஒவ்வொரு முறை வங்கிக் கணக்கை பயன்படுத்தும்போது முறைகேடாக வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்ய வாய்ப்பு உள்ளது
எனவே தேவையில்லாமல் வரும் குறுந்தகவலில் வரும் இணைப்பை கிளிக் செய்ய வேண்டாம் என அறிவுறுத்த வேண்டும் . கொரோனா பெயரில் வரும் நம்பகத்தன்மை இல்லாத செயலிகளை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்யக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil