Advertisment

நான்காம் காலாண்டின் ஜிடிபி 3.1 சதவீதமாக பதிவு : 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு

GDP data india 2020 : நான்காவது காலாண்டிற்கான ஜிடிபி 4% ஆக இருக்கும் என்று நான் கணிப்பு வெளியிட்டு இருந்தேன். ஆனால் இப்போது அதை விட ஜிடிபி குறைவாக இருக்கிறது.நான்காவது காலாண்டிற்கான ஜிடிபி வெறும் 3.1%தான் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நான்காம் காலாண்டின் ஜிடிபி 3.1 சதவீதமாக பதிவு : 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு

கொரோனா தொற்று மற்றும் அது பரவலை தடுக்கும் வகையில் அமல்பட்டுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறிப்பிட்டத்தக்க சரிவு அடைந்துள்ளதாகவும், 2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 3.1 சதவீத அளவில் உள்ளதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

2018-19ம் நிதியாண்டின் இதேகாலகட்டத்தில், ஜிடிபி 5.7 சதவீதம் ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 6.1 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

2019-20ம் நிதியாண்டின் ஜிடிபி 4.2 சதவீதம் ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், அது 3.1 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.

2019-2020ம் ஆண்டுக்கான ஜிடிபி 4.2% ஆக இருக்கும் என்று மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த ஜனவரி - மார்ச் வரை மூன்று மாதங்களுக்கான ஜிடிபி 3.1% ஆக உள்ளது. ஆனால் இந்த மூன்று மாத ஜிடிபி சதவிகிதம் மத்திய அரசு கணித்ததை விட அதிகம் என்று கூறுகிறார்கள். ஆனால் மொத்த ஜிடிபி கணிப்பு மோசமாக சரிந்துள்ளது .

4.2% ஜிடிபி என்பது மிக மோசமானது ஆகும். கடந்த 11 வருடங்களில் இந்தியாவின் மிக மோசமான ஆண்டு ஜிடிபி இதுதான் என்று கூறுகிறார்கள். கடந்த 2018-19 ஆண்டுக்கான 6.1% ஆக இருந்தது. வேகமாக ஜிடிபி உயர்ந்த நிலையில் தற்போது வேகமாக மொத்தமாக ஜிடிபி சார்ந்துள்ளது. கொரோனா காரணமாக ஏற்பட்ட லாக்டவுன் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

முன்னாள் நிதி துறை அமைச்சர் சிதம்பரம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், . அதில், நான்காவது காலாண்டிற்கான ஜிடிபி 4% ஆக இருக்கும் என்று நான் கணிப்பு வெளியிட்டு இருந்தேன். ஆனால் இப்போது அதை விட ஜிடிபி குறைவாக இருக்கிறது.நான்காவது காலாண்டிற்கான ஜிடிபி வெறும் 3.1%தான் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க -GDP growth slows to 3.1% in Q4; fiscal deficit widens to 4.59% of GDP in 2019-20

Corona Virus Lockdown Gdp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment