நான்காம் காலாண்டின் ஜிடிபி 3.1 சதவீதமாக பதிவு : 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு

GDP data india 2020 : நான்காவது காலாண்டிற்கான ஜிடிபி 4% ஆக இருக்கும் என்று நான் கணிப்பு வெளியிட்டு இருந்தேன். ஆனால் இப்போது அதை...

கொரோனா தொற்று மற்றும் அது பரவலை தடுக்கும் வகையில் அமல்பட்டுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறிப்பிட்டத்தக்க சரிவு அடைந்துள்ளதாகவும், 2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 3.1 சதவீத அளவில் உள்ளதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

2018-19ம் நிதியாண்டின் இதேகாலகட்டத்தில், ஜிடிபி 5.7 சதவீதம் ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 6.1 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

2019-20ம் நிதியாண்டின் ஜிடிபி 4.2 சதவீதம் ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், அது 3.1 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.

2019-2020ம் ஆண்டுக்கான ஜிடிபி 4.2% ஆக இருக்கும் என்று மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த ஜனவரி – மார்ச் வரை மூன்று மாதங்களுக்கான ஜிடிபி 3.1% ஆக உள்ளது. ஆனால் இந்த மூன்று மாத ஜிடிபி சதவிகிதம் மத்திய அரசு கணித்ததை விட அதிகம் என்று கூறுகிறார்கள். ஆனால் மொத்த ஜிடிபி கணிப்பு மோசமாக சரிந்துள்ளது .
4.2% ஜிடிபி என்பது மிக மோசமானது ஆகும். கடந்த 11 வருடங்களில் இந்தியாவின் மிக மோசமான ஆண்டு ஜிடிபி இதுதான் என்று கூறுகிறார்கள். கடந்த 2018-19 ஆண்டுக்கான 6.1% ஆக இருந்தது. வேகமாக ஜிடிபி உயர்ந்த நிலையில் தற்போது வேகமாக மொத்தமாக ஜிடிபி சார்ந்துள்ளது. கொரோனா காரணமாக ஏற்பட்ட லாக்டவுன் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

முன்னாள் நிதி துறை அமைச்சர் சிதம்பரம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், . அதில், நான்காவது காலாண்டிற்கான ஜிடிபி 4% ஆக இருக்கும் என்று நான் கணிப்பு வெளியிட்டு இருந்தேன். ஆனால் இப்போது அதை விட ஜிடிபி குறைவாக இருக்கிறது.நான்காவது காலாண்டிற்கான ஜிடிபி வெறும் 3.1%தான் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க -GDP growth slows to 3.1% in Q4; fiscal deficit widens to 4.59% of GDP in 2019-20

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close