கொரோனாவிற்கு எதிரான போர் மக்கள் இயக்கமாக மாற வேண்டும் - பிரதமர் மோடி
Mann Ki Baat : யோகா, ஆயுர்வேதாவை நோக்கி மக்கள் நடைப்போட்டு வருகின்றனர். யோகா மூலம் சுவாசப் பிரச்னைகளுக்கு தீர்வு காண மக்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்.
கொரோனாவிற்கு எதிரான போர் மக்கள் இயக்கமாக மாற வேண்டுமென்று மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
Advertisment
மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது, , இந்தியாவின் மக்கள் தொகை மற்ற நாடுகளை விட அதிகமாக உள்ளது. அதையும் மீறி கொரோனா வைரஸை திறன்பட கையாண்டு உள்ளோம். பல துயரங்களை கடந்து வந்துள்ளோம். ஆனால் அனைவரும் கொரோனா வைரஸை கையாள தீர்மானம் செய்தோம். இந்தியாவின் செயல்திறனை கண்டு உலக நாடுகள் ஆச்சரியமடைந்துள்ளன.
சாமானிய மக்கள் மற்றும் ஏழை குடும்பங்களின் சேர்ந்தவர்கள் படும் துயரங்களை விவரிக்க வார்த்தையில்லை. துயரமான நாட்களை நாம் ஒன்றிணைந்து கடக்க வேண்டும்.
கொரோனாவிற்கு எதிரான போரில் நாட்டு மக்கள் அனைவரும் போரிட்டு வருகிறோம். இந்த போரில் வெற்றி பெற நாம் நெடுதூரம் செல்ல வேண்டும். கொரோனவிற்கு எதிரான போர் மக்கள் இயக்கமாக மாற வேண்டும். கொரோனாவிற்கு எதிரான போரில் இந்திய ரயில்வே சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
யோகா, ஆயுர்வேதாவை நோக்கி மக்கள் நடைப்போட்டு வருகின்றனர். யோகா மூலம் சுவாசப் பிரச்னைகளுக்கு தீர்வு காண மக்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் ஏழை மக்கள் பலர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் மூலமாக 1 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். ஆயுஷ்மான் திட்டத்திற்கு ரூ.24,000 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மதுரை சலூன் கடைக்காரருக்கு பாராட்டு : மதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயதான மோகன், சலூன் நடத்தி வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார். இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார். இந்நிலையில் இன்று மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மகள் படிப்புக்காக வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil