scorecardresearch

ஒரே மாதத்தில் 5 முன்னணி நிறுவனங்களில் 4,400 பேர் வேலை இழப்பு: தொடரும் கொரோனா சோகம்

Layoffs due to coronavirus impact : ஜொமாட்டோ நிறுவனம். தங்களது பணியாளர்களுக்கு 50 சதவீதம் வரை சம்பளக்குறைப்பை நடைமுறைப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள், தாங்களாகவே தங்களது சம்பளத்தை திருப்பித்தர அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது

corona virus, lockdown, uber, zomato, layoff, swiggy, covid-19 impact, coronavirus, coronavirus india, coronavirus india, uber, ola, uber jobs, ola jobs, uber india layoffs, uber india job cuts, uber india job loss, ola employees layoff, ola employees layoff india, uber employees layoff, uber employees layoff india
corona virus, lockdown, uber, zomato, layoff, swiggy, covid-19 impact, coronavirus, coronavirus india, coronavirus india, uber, ola, uber jobs, ola jobs, uber india layoffs, uber india job cuts, uber india job loss, ola employees layoff, ola employees layoff india, uber employees layoff, uber employees layoff india

கொரோனா ஊரடங்கின் காரணமாக, மக்களிடையே தங்களது நிறுவனங்களின் சேவைகள் குறைந்ததால், 5 முன்னணி நிறுவனங்கள், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பணியிலிருந்து நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஊபர் கால் டாக்சி நிறுவனம், இந்தியாவில், அதன் முழுநேர தொழிலாளர்கள் 600 பேரை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது. இந்த பணிநீக்கத்தின் காரணமாகல, கொரோனா பாதிப்பையும், ஊரடங்கின் காரணமாக தங்களது நிறுவன சேவைகள் சரிவு மற்றும் இந்த இக்கட்டான நிலையிலிருந்து மீளவே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை என்று தெரிவித்துள்ளது.
ஊபர் இந்தியா நிறுவனம் மட்டுமல்லாது, ஓலா, ஜொமாட்டோ, ஸ்விக்கி, கியூர்.பிட் (Cure.fit) உள்ளிட்ட 5 நிறுவனங்கள் மட்டும், கடந்த ஒரு மாதத்தில், 4,400 பேரை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளன.

கொரோனா ஊரடங்கின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவினால், தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சரிவிலிருந்து எப்போது மீ்ள்வோம் என்று தெரியவில்லை. இந்த சரிவை சரிகட்டவே, ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஊபர் இந்தியா நிறுவனத்தின் தெற்காசிய பிரிவின் தலைவர் பிரதீப் பரமேஸ்வரன் கூறியதாவது, இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை, புதிய நடவடிக்கை அல்ல. சர்வதேச அளவில் ஆட்குறைப்பு என்பது நாங்கள் ஏற்கனவே அறிவித்த ஒன்றுதான். தற்போதைய நிலையில், இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு ஊழியர்களே நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஊபர் டெக்னாலஜீஸ் நிறுவனம், 23 சதவீத ஊழியர்களை நீக்க இருப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கால், தாங்கள் 95 சதவீத வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக மற்றொரு முன்னணி கால் டாக்சி சேவை நிறுவனமான ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் கூறியதாவது, கொரோனா விவகாரத்தால், நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். மற்ற நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதித்து தங்களது வழக்கமான செயல்பாட்டை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், எங்களால், அவ்வாறு செய்ய முடியாது. நிறுவனம், இந்த பொருளாதார சரிவிலிருந்து மீள எத்தனை காலங்கள் ஆகும் என்பதை குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. பொருளாதார சரிவிலிருந்து மீளும் நடவடிக்கையாகவே, 1400 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாக அவர் கூறினார்.

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளன. அடுத்த 6 முதல் 12 மாதங்களில், தங்களது வருவாய் மேலும் 25 முதல் 40 சதவீதம் வரை பாதிக்கப்படும் என்று கணித்துள்ளதாலேயே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை என்று அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஜொமாட்டோ நிறுவன உயர் அதிகாரி தீபிந்தர் கோயல், தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள இழப்பை தவிர்க்க, 14 சதவீதம் அதாவது 541 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளோம். அவர்கள் வேறு வேலை தேடிக்கொள்ள அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்விக்கி சிஇஓ ஸ்ரீஹர்ஷா மஜேட்டி கூறியதாவது, கொரோனா ஊரடங்கு காரணமாக, தங்களது நிறுவனம் கடுமையான பொருளாதார அழிவை சந்தித்துள்ளது. இந்த நிலையை சரிகட்ட 1400 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஹெல்த் – பிட்னஸ் நிறுவனமான Cure.fit நிறுவனம், பொருளாதார இழப்பை சரிகட்டும் விதமாக 800 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

இதுமட்டுமல்லாது ஜொமாட்டோ நிறுவனம். தங்களது பணியாளர்களுக்கு 50 சதவீதம் வரை சம்பளக்குறைப்பை நடைமுறைப்படுத்தியுள்ளது.
நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள், தாங்களாகவே தங்களது சம்பளத்தை திருப்பித்தர அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Corona virus lockdown uber zomato layoff swiggy covid 19 impact