இந்தியா, விமானங்களை இயக்கும் விவகாரத்தில் பாரபட்சமான முறையில் நடந்துகொள்வதாக கூறி ஏர் இந்தியா உள்ளிட்ட இந்தியாவிலிருந்து வரும் விமானங்களின் சேவைகளுக்கு தடைவிதிப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால், அமெரிக்காவில் தவித்த இந்தியர்களை, சொந்த நாட்டிற்கு அழைத்து செல்வதற்காக, ஏர் இந்தியா நிறுவனம், மக்களிடம் பணம் வசூலித்ததாகவும், அந்நாட்டு போக்குவரத்துத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
இதேநேரத்தில், இந்தியாவிற்கும் அமெரிக்க விமானங்கள் இயக்கப்படுவது தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இருநாடுகளின் விமானபோக்குவரத்து நிறுவனங்களும் இழப்புகளை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
பேரிடர் சமயங்களில், தங்கள் நாட்டவரை அழைத்து செல்லும் விமானங்கள், அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது என்பது அமெரிக்க விமான விதிமுறை ஆகும். ஆனால், ஏர் இந்தியா நிறுவனம், கட்டணம் வசூலித்தது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தடைஉத்தரவு, 30 நாட்கள் அமலில் இருக்கும் என்று அமெரிக்க விமான போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவுக்குப்பின், இந்திய விமான நிறுவனங்கள், அமெரிக்காவிற்கு விமானங்களை இயக்க DOT அமைப்பிடம் இருந்து அங்கீகாரம் பெற வேண்டும். இதற்கு பின்னரே, இந்தியாவிற்கு தங்களது நாட்டு விமானங்களை இயக்க ஆலோசிக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு தற்போது விதித்துள்ள தடையை போன்ற, சில வாரங்களுக்கு முன்னர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சீனாவிற்கும் விமானங்களை இயக்கவும், அங்கிருந்து இங்கு வரவும், அமெரிக்கா தடைவிதித்திருந்தது. பின் ஜூன் 15ம்தேதி, இவ்விரு நாடுகளுக்கிடையே, வாரம் நான்கு விமானங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள இந்த தடையை விலக்கிக்கொள்ளும் பொருட்டு, ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சியில் தோல்வியில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.