Advertisment

கொரோனா பாதிப்பு விகிதம் குறைவு - மரணங்களோ அதிகம் : மாலேகானில் நடப்பது என்ன?

Malegaon mystery : மாலேகானில் தனியார் மருத்துவமனைகள் செயல்படாததன் காரணத்தினால், தாங்கள் கூடுதல் நேரம் பணியாற்றி வருகிறோம். விரைவில் தனியார் மருத்துவமனைகள் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Corona virus, malegaon, maharashtra coronavirus cases, coronavirus india, nashik coronavirus, malegaon coronavirus, malegaon cases, covid 19 test, maharashtra news, indian express news,coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

Corona virus, malegaon, maharashtra coronavirus cases, coronavirus india, nashik coronavirus, malegaon coronavirus, malegaon cases, covid 19 test, maharashtra news, indian express news,coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

மகாராஷ்டிரா மாநிலம் மாலேகான் பகுதியில் கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பதாகவும், ஆனால், மரண விகிதம் மிகவும் அதிகரித்திருப்பது அம்மாநிலத்தை மட்டுமல்லாது தேசிய அளவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ளது மாலேகான் பகுதி. 6 லட்சம் அளவு மக்கள்தொகையில் பெரும்பாலானோர் முஸ்லீம்கள் ஆவர். இந்த பகுதியில், கடந்த ஏப்ரல் 8ம் தேதி முதல் கொரோனா பாதிப்பும், முதல் மரணமும் பதிவாகி இருந்தது. இந்நிலையில், நேற்று ( மே 3ம் தேதி) வரை மட்டும் 229 பாதிப்புகளும், 12 பேர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏப்ரல் 27ம் தேதி நிலவரப்படி இங்கு கொரோனா மரணங்கள் ஏதும் நிகழவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நடத்திய கள ஆய்வில், ஏப்ரல் மாதத்தில் மட்டும் 580 பேர் மரணமடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இது அதிகாரப்பதிவேட்டும் இருந்தபோதிலும் அது அறிவிக்கப்படவில்லை. கடந்தாண்டு மார்ச் மாதத்தில் 277 பேர் மரமடைந்திருந்த நிலையில், இந்தாண்டு மரண விகிதம் 48 சதவீதம் அதிகரித்துள்ளது.

publive-image

மரண விகிதம் அதிகரிப்பிற்கு, தனியார் மருத்துவமனைகள் செயல்படாததே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாநில அரசு, ஏப்ரல் 10ம் தேதி ஒருவர் மரணமடைந்த நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்களை சோதனை செய்ய உத்தரவிட்டது. இவர்களில், பலர் சோதனை முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே இறந்துவிட்டனர். இவர்கள் தொற்று கொண்டவருடன் அதிக தொடர்பு வைத்திருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலேகான் பகுதியில் இறந்தவர்களை படா கப்ரஸ்தான் பகுதியில் தான் நல்லடக்கம் செய்வார்கள். இது மாலேகான் பகுதியின் மிகப்பெரிய நல்லடக்க இடம் ஆகும்.

இந்த நல்லடக்க பகுதியை நிர்வகிக்கும் ரெய்ஸ் அகமத் அன்சாரி கூறியதாவது, இங்கு நாள்தோறும் 6 அல்லது 7 பேரது உடல்கள் வழக்கமாக நல்லடக்கம் செய்யப்படும். ஆனால், கடந்த 3 நாட்களில் மட்டும் நாளொன்றுக்கு 30 உடல்கள் வருகின்றன. இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 457 பேரது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டின் இதே மாதத்தில் 40 உடல்கள் மட்டும் அடக்கம் செய்யப்பட்டிருந்தன.

ஏப்ரல் மாதத்தில், மரணங்கள் அதிகளவில் அதிகரித்துள்ளன. இந்த மரணங்கள், கொரோனா பாதிப்பினால் தான் ஏற்பட்டது என்பதை உறுதியாக கூறிவிடமுடியாது. ஏப்ரல் 10ம் தேதி இறந்தவரின் குடும்பத்தில் உள்ளவர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கும் பாதிப்பு இருக்குமோ என்ற கோணத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக மாலேகான் கொரோனா அவசர செயல்பாட்டு மைய அதிகாரி பங்கஜ் ஆஷியா தெரிவித்துள்ளார்.

டாக்டர்கள் 5 பேரில் 3 பேர் கொரோனா காரணமாக மரணமடைந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஏப்ரல் 10ம் தேதி மரணமடைந்தவரின் குடும்பத்தினரிடம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை கள ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தியது. தனியார் மருத்துவமனைகள் சேவைகள் நிறுத்தியதால், தங்களால் மருத்துவ சேவைகளை பெற இயலவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

மாலேகான் பகுதி மருத்துவ அதிகாரி கோவிந்த் சவுதாரி கூறியதாவது, இப்பகுதியில் அதிக மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், இது கொரோனா காரணமாக நிகழ்ந்துள்ளதாக எவ்வித தகவலும் இல்லை. மாலேகான் பகுதியில் தற்போது எந்தவொரு தனியார் மருத்துவமனைகளும் செயல்படவில்லை. உடல்நலக்குறைவு உள்ளிட்ட அசவுகரியங்களால் அவதிப்படும் மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காததால், மரண விகிதம் அதிகரித்திருப்பதாக அவர் கூறினார்.

20 பேர் கொரோனா மருத்துவமனைகளிலும், 70 பேர் கொரோனா சுகாதார மையங்களிலும், 232 பேர் லேசானா அறிகுறிகளுடன் சுகாதார மையங்களிலும், 245 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோபே, சமீபத்தில் மாலேகான் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இங்கு பலருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டபோதிலும் அவர்கள் மருத்துவமனையை நாடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவமனைகள் உடனடியாக செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காய்ச்சலை கண்டறிய மருத்துவமனைகள், நடமாடும் மருத்துவமனைகளின் உதவியுடன் இப்பகுதியில் சோதனைகளை மேற்கொள்ள கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த சனிக்கிழமை, 60 வயதான ஷமீம் பானோ அப்துல் கய்யுமிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையை நாட, அவர்கள் அரசு மருத்துவமனையை பரிந்துரைத்ததையடுத்து கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஷமீம், ஏப்ரல் 26ம் தேதி தன்னை தொடர்பு கொண்டு, இந்த மன்சுரா மருத்துவமனையில் நான் இருக்கும் வார்டில் அனைவரும் ஆண்களாகவே உள்ளனர். இதனால் எனக்கு ஒருமாதிரியாக உள்ளது. என்னால், சர்க்கரை நோய்க்கான மாத்திரையை கூட ஒழுங்காக எடுத்துக்கொள்ள முடியவில்லை என்று கூறியதாக அவரின் மகன் தவ்சீப் கய்யும் தெரிவித்துள்ளார்.

மறுநாள், பக்கத்து படுக்கையில் இருந்தவர் தொடர்பு கொண்டு, தூக்கத்தில் இருக்கும்போதே ஷமீமின் உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்ததையடுத்து, தவ்சீப் மருத்துவமனை சென்றார்.

தனது சகோதரர் தாயின் உடலை பாதுகாப்பாக கட்டினார். அதோடு அவர் மேலும் இரண்டு பேரது உடல்களையும் கட்டியிருந்தார். என்னுடைய அம்மாவின் தொண்டையிலிருந்து மாதிரி எடுத்து சோதனைக்காக அனுப்பப்பட்டிருந்தது. அந்த சோதனை முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே அவர் இறந்துவிட்டதாக தவ்சீப் மேலும் கூறினார்.

மாலேகானில் தனியார் மருத்துவமனைகள் செயல்படாததன் காரணத்தினால், தாங்கள் கூடுதல் நேரம் பணியாற்றி வருகிறோம். விரைவில் தனியார் மருத்துவமனைகள் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என மாலேகான் முனிசிபல் கார்ப்பரேசன் துணை கமிஷனர் நிதின் கபாட்னிஸ் தெரிவித்துள்ளார்.

மாலேகான் பகுதி, அதிக மக்கள் நெருக்கடி மிக்க பகுதி, இங்கு 150 சதுரஅடி இடத்திலேயே 10 முதல் 15 பேர் வரை வசிப்பர். இதனால், இங்கு தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது என்பது கடினமான ஒன்று. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் தினக்கூலிகள் ஆவர். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை, ஏழ்மையான வாழ்க்கை இவைகளே இவர்களின் வாழ்க்கைமுறையை மேலும் கடினமாக்கிவிடுவதாக கபாட்னிஸ் மேலும் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Corona Virus Maharashtra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment