வெளிநாடுகளில் உள்ள 276 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் : தாயகம் திரும்பமுடியுமா?

தனியார் ஆய்வகம்: மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் Roche Diagnostics என்ற தனியார் நிறுவனத்திற்கு கொரோனா வைரஸ் தொற்றை சோதிக்கும் உரிமத்தை வழங்கியுள்ளது.

தனியார் ஆய்வகம்: மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் Roche Diagnostics என்ற தனியார் நிறுவனத்திற்கு கொரோனா வைரஸ் தொற்றை சோதிக்கும் உரிமத்தை வழங்கியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus. Corona virus tamil news, Corona virus news in tami

corona virus. Corona virus tamil news, Corona virus news in tami

கொரோனா வைரஸ் இன்றைய நிலவரம்: நாடு முழுவதும் 147 பேருக்கு கொவிட் 19 கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள இன்று (18.03.2020) காலை 9 மணி நிலவரப்படியான, புள்ளிவிவரத்தின்படி, நாடு முழுவதும் விமான நிலையங்களில் 13,54,858 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த 25 பேர் உட்பட 147 பேருக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Advertisment

நோய் பாதித்தவர்களில் 14 பேர் சிகிசிச்சையில் குணப்படுத்தப்பட்டு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநில வாரியான கொரேனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்ட்டிராவில் 41 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 27 பேருக்கும், உத்தரப்பிரதேசத்தில் 15 பேருக்கும், கர்நாடகாவில் 11 பேருக்கும் இந்த நோய் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை அதிகபட்சமாக லடாக்கில் 8 பேருக்கும், ஜம்மு காஷ்மீரில் 3 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இந்த நோய் தொற்று காரணமாக தில்லி, கர்நாடகா, மகாராஷ்ட்டிரா ஆகியவற்றில் தலா ஒருவர் வீதம் மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ்: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர், தனது ட்விட்டரில்," சென்னையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. நோயாளி டெல்லியைச் சேர்ந்தவர், தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.நிபுணர் குழு சிகிச்சையின் கண்காணிப்பில் நிலையாக உள்ளார்" என்று பதிவு செய்துள்ளார்.

வெளிநாடுகளில் 276 இந்தியர்கள் கொரோனா வைரஸால் பாதிப்பு: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று (மார்ச்-18) மக்களவையில், பல்வேறு நாடுகளில் உள்ள 276 இந்தியர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.  இதில் அதிகமட்சமாக இரானில் 255 இந்தியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விதிமுறைகளின் படி, கொரோனா வைரஸ் தொற்று உள்ள மக்கள் விமானங்களில் பயணிக்க முடியாது என்றும், அவர்கள் அந்தந்த நாடுகளிலே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் வைரஸ் தொற்று இல்லாத இந்தியர்கள் பத்திரமாக அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்திய ராணுவத்தில் முதல் கொரோனா வைரஸ் வழக்கு:  'லே' பகுதியில் பணிபுரியும் இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி 27-ம் தேதி இரான் நாட்டில் இருந்து இந்தியா திரும்பிய அவரின் தந்தைக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. 32 வயதுடைய இந்த ராணுவ வீரர், கடந்த மார்ச் 7 ஆம் முதல் தனிமைப்படுத்தப்பட்டார். தற்போது, அவரது தந்தை அனுமதிக்கப்பட்டிருக்கும் அதே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

குழந்தைகளுக்கு மதிய உணவு பாதிக்கப்படக்கூடாது:  கொரோனா வைரஸ் தொற்றால் பல மாநிலங்கள் தங்களது பள்ளிகளை மூடிவரும் நிலையில், குழந்தைகளுக்கான 'மதிய உணவு' குறித்த கேள்வியை தன்னிச்சையாக உச்ச நீதிமன்றம் இன்று எடுத்துக் கொண்டது. குழந்தைகள் எவ்வாறு கவனித்துக் கொள்ளப்படுகிறார்கள்? என்பது குறித்து முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாநில நிர்வாகங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

தனிமைப்படுத்திக் கொண்ட சுரேஷ் பிரபு: கடந்த மார்ச் 11-ம் தேதி சவூதி அரேபியாவின் கோபர் நகரில் நடந்த இரண்டாவது ஜி 20 ஷெர்பாஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக எம்.பி. சுரேஷ் பிரபு, தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

ஏஎன்ஐ (ANI) என்ற செய்தி நிறுவனத்திடம் பேசிய  சுரேஷ் பிரபு," கொரோனா வைரஸ் சோதனையில் நெகடிவ் என்று வந்தாலும், ஒரு முன்னெச்சரிக்கையாக தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக" தெரிவித்தார்.

முதல் தனியார் ஆய்வகம்: மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் 'ரோச் டையக்னாஸ்டிக்ஸ்'(Roche Diagnostics) என்ற தனியார் நிறுவனத்திற்கு கொரோனா வைரஸ் தொற்றை சோதிக்கும் உரிமத்தை வழங்கியுள்ளது.

மற்றொரு தனியார் நிறுவனமான பயோமெரியக்ஸ் டையக்னாஸ்டிக்ஸ் (BioMerieux Diagnostics) மருந்துக் கட்டுப்பாட்டாளரை அணுகியுள்ளது, அதிகாரிகள் மதிப்பீடு செய்தபின் ஒப்புதல் பெற ஏழு நாட்கள் ஆகும் என்று தெரிகிறது.

publive-image சமுக அளவிலான பரவலைக் நிவர்த்தி செய்வதற்காக பல்வேறு நாடுகள் பல்வேறு யுக்திகளை பயன்படுத்துகின்றன. இந்தியாவின் யுக்திகள் என்ன? அது எழுப்பும் கேள்விகள் என்ன?

கொரோனா வைரஸும், அரசியலும் : கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் காரணத்தால், அடுத்த ஒரு மாதத்திற்கு எந்த ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்பு போராட்டங்களும் கட்சியின் சார்பில் நடைபெறாது  என்று பாஜக கட்சித் தலைவர் ஜே.பி நட்டா தெரிவித்தார்.

தமிழக அரசின் கொரோனா வைரஸ் வெப்சைட்:  கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தகவல்களை உடனடியாக பொது மக்களிடம் கொண்டு செல்ல தமிழக அரசு (stopcoronatn.in) என்ற பிரத்யேக வலைத்தளத்தைத் தொடங்கியுள்ளது.

தஞ்சை பெரிய கோயில் மூடப்படுகிறது: தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்திற்கு நடந்த குடமுழுகேகிற்குப் பிறகு, அங்கு வரும் பயணர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்தை வரும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சோதனைகளை தீவிரப்படுத்துங்கள் - ராமதாஸ் கோரிக்கை:  Test, test, test. Test every suspected case. சோதனை செய், சோதனை செய், சோதனை செய். கொரோனா அறிகுறி உள்ள அனைவரையும் சோதனை செய்யுங்கள் என்பது தான் கொரோனா தடுப்புக்காக உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள ஆலோசனை ஆகும். அதை மதித்து கொரோனா சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழ்நாடு வருபவர்களுக்கு மட்டும் தான் கொரோனா ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த சோதனையை உள்ளூரில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் உள்ளவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும். விமான நிலையம், துறைமுகங்களின் பணியாளர்களுக்கும் கொரோனா ஆய்வு நடத்த வேண்டும். கூட்டம் கூடுவதால் கொரோனா பரவுவதை தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் சரியானவை.

கூடுதலாக, அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் அரசு அலுவலகங்கள், வாராந்திர சந்தைகள் ஆகியவற்றுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டரில் பதிவயு செய்துள்ளளர்.

முககவசம் அதிக விலையில் விற்காமல் இருக்க என்ன நடவடிக்கை:  கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான முககவசம் மற்றும் கிருமி நாசினிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிய மனுவுக்கு, பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செயலிழந்த தி.நகர் :  திநகர் செயல்படும் கடைகளில் சிலவற்றில் 1000க்கும் அதிகமான மக்கள் வேலை செய்கின்றனர், கூடுதலாக ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர். அதன் பொருட்டு,சென்னை திநகரில் செயல்படும் அனைத்து பெரிய கடைகளையும், சிறிய கடைகளையும் இந்த மாத இறுதிவரை மூடப்படும் என்று பெருநகர மாநகாராட்சி ஆணையாளர் கோ.பிராகாஷ் அறிவித்தார்.

இதனால், ஒட்டுமொத்த தி.நகரும் செயல் இழந்து காணப்பட்டது.

Coronavirus Corona

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: