கொரொனா தேசிய பேரிடராக அறிவிப்பு: தமிழக எல்லைகளை மூட கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உலகளவில் 4,948 பேர் இறந்துள்ளனர். 131, 846 மக்கள் பாதிப்படைந்துள்ளனர். 69,847 மக்கள் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாகியுள்ளனர்.

கொரொனாவை வைரஸ் தொற்றை தேசிய பேரிடராகவும் அறிவித்த மத்திய அரசு, பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவுகளை மாநில அரசே நிர்ணயிக்கும் எனவும்  தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை (மார்ச்- 14),மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 84 ஆக இருந்தது. இருப்பினும், மாநிலங்களின் தரவுகளின் படி , உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரசின் எண்ணிக்கை 102 ஆகக் கொண்டுள்ளது.

மகாராஷ்டிராவில், நேற்று ஒரே நாளில் 12 கொரோனா வைரஸ் (COVID-19) தொற்று வழக்குகள் பதிவாகியின.

மனோகர் லோஹியா மருத்துவமனையில், மேற்கு டெல்லியைச் சேர்ந்த 68 வயது பெண் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணமடைந்தார். இதன்மூலம்,  இந்தியாவில் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இணை நோயுற்ற தன்மை (நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம்) காரணமாக மேற்கு டெல்லியைச் சேர்ந்த 68 வயதான பெண் மரணமடைந்துள்ளார்.மேலும், இவருக்கு கொரோனா வைரஸ் தொற்றும் உள்ளது. பிப்ரவரி 5 முதல் 22 வரை சுவிட்சர்லாந்து, இத்தாலி போன்ற நாடுகளுக்கு பயணம் செய்த அவரின் மகனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக,76 வயது மிக்க, கர்நாடகாவின் கலபுராகி என்ற பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலத்தில் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததை அம்மாநில அரசு உறுதி செய்திருந்தது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஐ எட்டியுள்ள நிலையில், பல மாநில அரசுகள் சமூக தூரக் கொள்கையை  (Social Distancing) அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கல்வி நிறுவனங்கள் உட்பட பொது இடங்களை பல மாநிலங்கள் இழுத்து மூடிவருகின்றன.

உலகவில் கொரோனா வைரஸ் தொற்றின் இறப்பு எண்ணிக்கை 5,000 ஐத் தாண்டும் நிலையில், உலக சுகாதார மையம் கொரோனா வைரஸ் தொற்று ஐரோப்பா நாடுகளை மையம் கொண்டுள்ளதாக அறிவித்தது.

2019 டிசம்பர் தொடக்கத்தில் மத்திய சீன நகரமான வுஹானில் முதன்முறையாக காணப்பட்ட இந்த வைரஸ் மிகக் குறுகிய காலத்திலேயே உலக நாடுகளுக்கு பரவியது. 123 நாடுகளில் 132,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று  பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு மைய  இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பரவி வரும் வைரஸ் காரணமாக ‘தேசிய அவசரநிலையை’ அதிகாரப்பூர்வமாக பிரகடப்படுத்தினார். வரும் 16-ம் தேதி முதல் (திங்கள்கிழமை) இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்ல விசா வழங்குவது நிறுத்தப்படுகிறது என்று அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்த வரையில், கொரோனா பரவல் இன்னும் மருத்துவ அவசர நிலையாக அறிவிக்கப்படவில்லை.

Coronavirus: UNICEF Live Q&A

We’re LIVE with our #coronavirus lead, Carlos Navarro Colorado. Join us! We’ll be sharing important information about #COVID19. Got a question? Submit it below.

UNICEF यांनी वर पोस्ट केले शुक्रवार, १३ मार्च, २०२०

 

உச்சத்தில் இத்தாலி: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 250  மக்கள் இறந்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை இதுவரை 1,266 ஆக உயர்ந்துள்ளது.

சார்க் நாடுகளுக்கு பிரதமர் வலியுறித்தல்:  கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கு உரிய வலுவான உத்தியை வகுக்குமாறு சார்க் நாடுகளை பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். பூமிக்கோளத்தை ஆரோக்கியமானதாக மாற்றுவதற்கு உரிய பங்களிப்பை செலுத்தி, உலகுக்கே முன்மாதிரியாக சார்க் நாடுகள் திகழ வேண்டும் என்றும் அதற்கு, சார்க் நாடுகள் ஒன்று சேர்ந்து காணொலி காட்சி மூலம் விவாதித்து உரிய உத்திகளை வகுக்க வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

காணொலி காட்சியில் பாகிஸ்தான் கலந்து கொள்ளும்:  பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஆயிஷா பாரூக்கி தனது ட்விட்டரில் , வைரஸ் தொற்றை சமாளிக்க பிராந்திய ஒத்துழைப்பு மிகவும் முக்கியம், பாகிஸ்தான் பிரதம மந்திரியின் சுகாதார சிறப்பு ஆலோசகர் ஜாபர் மிர்சா, சார்க் காணொலி காட்சியில் கலந்து கொள்வார்” என்று பதிவு செய்துள்ளார்.

சார்க் நாடுகளைப் பொறுத்த வரையில், இந்தியாவில் மட்டும் இதுவரை 82 வழக்குகள் பதிவாகியுள்ளன. பாகிஸ்தான் (20), மாலத்தீவு (8), ஆப்கானிஸ்தான் (7), பங்களாதேஷ் (3), இலங்கை (2), நேபாளம் மற்றும் பூட்டான் (தலா 1).

 

கொரோனா வைரஸ்: இந்திய மாநிலங்களின் நிலவரம்: 

தமிழ்நாடு: கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர்களுக்கு மார்ச் 31ம் தேதி விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 5ஆம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரேதேசம்:  மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவது குறித்து நேற்று ஒரு உயர்மட்டக் கூட்டத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூட்டினார். பிறகு செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர், கொரோனா வைரசை மாநிலத்தில் தொற்றுநோயாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கும் கொள்ளை நோய் ஒழிப்புச் சட்ட விதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

ஹோலி மிலன் செயல்பாடுகளை ரத்து செய்வது உட்பட வெகுஜன கூட்டங்களை நிறுத்துமாறு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், அடிப்படை முதல் உயர்கல்வி வரையிலான அனைத்து கல்வி நிறுவனங்களும் மார்ச் 22 வரை மூடப்படுவதாகவும், தேர்வு நடந்து கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

பீகார்: அம்மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது ட்விட்டரில் “சமூக தூரக் கொள்கையை (Socail Distancing) செயல்படுத்துவது வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இருந்தாலும், கொரோனா வைரஸ் ஸ்க்ரீனிங் மையங்கள் இல்லாமல் இந்த முயற்சி பலனளிக்காது. விமான நிலையம்,ரயில் நிலையம் போன்ற இடங்களில்  ஸ்க்ரீனிங் மையங்களை விரைவாக அமைக்குமாறு பீகார் முதல்வரை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவு செய்துள்ளார்.

கர்நாடகா: முதல் மரணத்தை அறிவித்த கர்நாடகாவில்,  சினிமா அரங்குகள், மால்கள், விடுதிகள், போன்ற பொது இடங்களை ஒரு வாரம் பூட்டுவதாக மாநில அரசு அறிவித்தது. “நிலைமை மதிப்பாய்வு செய்யப்பட்டு” அதன் பிறகு சரியான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில்“கண்காட்சிகள், கோடைக்கால முகாம்கள், விளையாட்டு நிகழ்வுகள், திருமண நிகழ்வுகள், மாநாடுகள் போன்ற பிற நிகழ்வுகளை” நிறுத்துமாறு முதலமைச்சர் பி.எஸ் யெடியுரப்பா அரசு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close