கொரோனா : பக்ரைனில் இருந்து விமானத்தில் வந்த 47 தமிழர்கள் மீது கண்காணிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் 32 புதிய வழக்குகள் பதிவாகியதை அடுத்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த மக்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது

By: Updated: March 15, 2020, 03:08:03 PM

இத்தாலி மிலன் நகரில் சிக்கித் தவித்த 211 மாணவர்கள் உட்பட 218 இந்தியர்கள், பத்திரமாக மீட்கப்பட்டு இன்று அதிகாலை டெல்லியில் தரையிறங்கினர்.

வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி முரளீதரன் தனது ட்வீட்டரில், “மிலன் நகரில் சிக்கி தவித்த  211 மாணவர்கள் உட்பட 218 இந்தியர்கள் டெல்லியில் இறங்கினர். அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். துன்பத்தில் இருக்கும் இந்தியர்களை அணுகுவதில் இந்திய அரசு  உறுதிபூண்டுள்ளது” என்று தெரிவித்தார்.

அனைவரும் இந்திய- திபெத் எல்லைக்காவல் படையின் முகாமில் தங்க வைக்கப் படுகின்றனர் அனைவரும் இந்திய- திபெத் எல்லைக்காவல் படையின் முகாமில் தங்க வைக்கப் படுகின்றனர்

மகாராஷ்டிரா மாநிலத்தில் 32 புதிய வழக்குகள் பதிவாகியதை அடுத்து, கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த மக்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தற்போது தெரிவித்துள்ளது.

கொடிய வைரஸ் இதுவரை இரண்டு உயிர்களைக் கொன்றது.

கேரளாவில் மூன்று பேர், யு.பி-யில் ஐந்து பேர், ராஜஸ்தான், டெல்லியில் தலா ஒருவர் என மொத்தம் 10 பேர் மருத்துவமனையில் இருந்து குணமாகி வெளியேறியுள்ளனர்.

வைரஸ் பாதிப்புக்குள்ளான ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த 236 இந்தியர்கள் இன்று  அதிகாலை பத்திரமாக இந்தியா வரவழைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை  அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.

 

தமிழக முதல்வர் அறிக்கை:  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும் (LKG & UKG), துவக்கப் பள்ளிகளுக்கும் (1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை) 31.3.2020 வரை விடுமுறை .

தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்பத்தூர், நீலகிரி , கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருபத்தூர், ராணிபேட்டை, ஈரோடு,திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில்  உள்ள எல்லையோர வட்டங்களில் உள்ள திரையரங்குகளையும், வணிக வளாங்களும் வரும் 31ம் தேதி வரை மூடப்படும் .   ஒருங்கிணைந்த செயல் திட்டத்திற்காக  ஐ.ஏ.எஸ் மற்றும் மூத்த அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். கொரோனா வைரஸ் தடுப்பு ஏற்பாடுகளுக்காக 60 கோடி நிதி ஒதுக்கீடு  போன்றவை முதல்வர் அறிக்கையில் உள்ளமுக்கிய சிறப்பம்சங்கள்.

இதனிடையே, பக்ரைன் நாட்டில் இருந்து திருவனந்தபுறத்திற்கு வந்த விமானத்தில் ஒருவருக்கு  கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.   தற்போது, இந்த விமானத்தில் பயணித்த 47 தமிழர்களின் பட்டியலை தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாக திருவனந்தபுர ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கேரளா விமானம் நிறுத்தம்: கேரளாவிலிருந்து துபாய் செல்லும் விமானத்தில் இருந்த இங்கிலாந்து பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து, அந்த விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

முன்னாறு விடுதி அறையில்,கொரோனா வைரஸ் காரணமாக தனிமைபடுத்தப் பட்டிருந்த அந்த பயணி,  இன்று அதிகாரிகளுக்கு தெரியாமல் விமானத்தில் ஏறினார். விஷயம் அறிந்த அதிகாரிகள், விமானம் புறப்பட தயாராவதற்கு முன்பு அவரை மடக்கினர். இதனால் விமானத்தில் இருந்த அனைத்து  பயணிகளையும் சோதனையிட கேரளா அரசு முடிவு  செய்துள்ளது. எனவே, 289 பயணிகள் தங்களின் பயணத்தை மேற்கொள்ள முடியாத சூழலில் உள்ளனர்.

ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைப்பு : கொரோனா வைரஸ் நோய்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு உள்ளாட்சி அமைப்புத் தேர்தலை ஆந்திர மாநில தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. “கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். வைரஸ் பரவியவுடன் புதிய தேதிகள் அறிவிக்கப்படும்” என்று தேர்தல் ஆணையர் என்.ரமேஷ்குமார் தெரிவித்தர்.

கொரோனா வைரஸை’ தொற்றுநோயாக அறிவித்தது உத்தரகண்ட் அரசு: உத்தரகண்ட் அரசு கொரோனா வைரஸை ஒரு தொற்றுநோயாக அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மல்டிபிளெக்ஸ், சினிமா அரங்குகள், கல்லூரி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவை மார்ச் 31 வரை  மூடப்படுவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ்,பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பின், எந்தவொரு பள்ளி, கல்லூரி அல்லது தியேட்டரை மூடுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான வழக்குகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

மிசோரம்: கொரோனா வைரஸ் தொற்று  மிசோரம் மாநிலத்தில் யாருக்கும் உறுதி படுத்தப்பட வில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 117 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப் படுவதாக  மிசோராம் சுகாதாரத் துறை முதன்மை இயக்குனர் எஃப் லல்லியன்ஹிலிரா தெரிவித்தார்.

திருமலை தேவஸ்தானம்:   1700 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான புகழ்பெற்ற திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலில் கொரொனா வைரஸ் அச்சம் காரணமாக பக்தர்களின் வருகைக்கு தேவஸ்தான நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தெலுங்கானா:   திருப்பதி கோயிலில் ‘தரிசனம்’ செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்களை பெரிய அறைகளில் காத்திருக்க வைப்பதற்கு பதிலாக, திருமலை திருப்பதி தேவேஸ்தானம் மார்ச் 17 முதல் நேர இடங்களைக் குறிப்பிட்டு டோக்கன்களை வழங்க உள்ளது. பக்தர்கள் எந்த நேரமும் 4,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயில் வளாகத்திற்குள் இல்லை என்பதை உறுதிப்படுத்த உள்ளது. மேலும், பக்தர்கள் காத்திருப்பதற்குப் பதிலாக வரிசையில் ஒன்றாகக் நிற்கிறார்கள் என்பதையும் இந்த ஸ்லாட்டிங் உறுதி செய்யும்.

மேலும், விவரங்களுக்கு – கொரொனா எதிரொலி; திருப்பதியில் ஒரே நேரத்தில் 4000 பேருக்கு மேல் அனுமதி இல்லை

ஞாயிற்றுக்கிழமை சந்திப்பை ரத்து செய்த அமிதாப் பச்சன் : 

“அனைத்து ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கும் ஒரு வேண்டுகோள்! இன்று ஜல்சா வாயிலுக்கு வர வேண்டாம், ஞாயிற்றுக்கிழமை சந்திப்புக்கு நான்  வரப்போவதில்லை!

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள் … பாதுகாப்பாக இருங்கள் என்று அமிதாப் பச்சன் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Corona virus news today in tamil nadu india coronavirus latest news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X